Feed on
Posts
Comments

Category Archive for 'சமூகம்'

“நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நான் அமெரிக்க மக்கள்கிட்ட நேராவே பேசிக்கிறேன்”ன்னு துணைத்தலைவர் போட்டியாளர் சேரா பேலின் விவாதத்துல சொன்ன மாதிரி, பாஸ்டன் பாலாகிட்ட அவர் கேட்ட கேள்விக்குப் பதில் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அப்படியே இருந்திருந்தா சத்தமில்லாம இருந்திருக்கும். ஆனாலும், அமெரிக்க அதிபர் தேர்தலப் பத்தி (கூட்டுப் பதிவுன்னாலும்) பா.பாலா தனியாளா நல்லா பதிவிட்டுக்கிட்டு இருக்கிறார். (அதுக்கு ஒரு பாராட்டச் சொல்லிக்கிறேன்). அப்படியான சுவாரசியமான இடுகைகள விடாமப் படிச்சுக்கிட்டு, ஒரு […]

Read Full Post »

“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று […]

Read Full Post »

முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம். காட்டாக இன்று தேடியது presentation இராம.கி என்னும் சொற்றொடர். 🙂 வேறு யார் என்ன முன்வைக்கிறார்கள் என்றும் அதன் பிறகு சில […]

Read Full Post »

பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு […]

Read Full Post »

‘திசைகள்’ இணைய இதழின் ஆசிரியர் அருணா கேட்டுக்கொண்டதற்காக, ஒன்றரை ஆண்டுகள் முன்பு எழுதியனுப்பிய ‘திருமணம்’ சம்பந்தப்பட்ட கட்டுரையை இங்கு எனது பதிவில் இட்டு வைக்கிறேன். இது வெளிவர இருந்த மாதத்தில் இருந்து ‘திசைகள்’ நின்றுபோனது! (காக்கை பனம்பழம் கதைங்க. மோசமான எழுத்துன்னு சொல்லிராதீங்க!). இதற்குத் தூண்டுகோளாய் இருந்தது வாய்ஸ் ஆன் விங்ஸின் முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கும் அது தொடர்பான பதிவும் பின்னூட்டங்களும். (தாலி பத்தி நான் ஒன்னும் சொல்லலை!) * * * * திருமண உறவுகள் […]

Read Full Post »

« Prev - Next »