Feed on
Posts
Comments

Category Archive for 'கொங்கு'

அப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. […]

Read Full Post »

“அப்பா… ஒய் ஆர் யுவர் மாம் அண்ட் டேட் ஓல்ட்?” என்று கேட்டது குழந்தை. எட்டிக் குதித்து மேலே விழுகிறவளைத் தாங்கிக் கொண்டு தூக்கிச் சுற்றும் தெம்பு இன்றைக்கு அவருக்கு இல்லை. ஈரோடு நிலையத்திற்கு வந்து நின்ற இண்டர்சிட்டி ரயிலில் ஏற்றிவிடப் பெரியவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த அந்த இரு நிமிடங்கள் கூட அவருக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கக் கூடும். ஒரு காலத்தில் இறுக்கி வைத்துக் கொள்பவரின் வயிற்றைக் குத்திப் பார்த்து விட்டு, ‘கல்லு […]

Read Full Post »

எங்கூர்ப் பக்கம் புள்ளைக மாசமா இருக்கறப்போ கட்டுச் சோத்து விருந்துன்னு ஒண்ணு போடுவாங்க. புளிச் சோறு, எலுமிச்சாங்காச் சோறு, தக்காளிச் சோறுன்னு விதம் விதமா கட்டுச் சோறு ஆக்கிக்கிட்டு பொண்ணூட்டுக்காரங்க பையனூட்டுக்கு வந்து விருந்து போட்டுச் சாப்பிட்டுட்டு அப்புறம் புள்ளையக் கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. பிரசவ காலத்தில அம்மா ஊட்டுக்குக் கூட்டீட்டுப் போற விருந்துன்னு வச்சுக்கலாம். சிலசமயம் வளையல் எல்லாங் கூடப் போடுவாங்க. ஆனா இதத் தவிரப் பெருசா ஒண்ணும் இருக்காது. (சந்தனத்தக் கன்னத்துல இலுக்கிக்கறது, […]

Read Full Post »

பாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) பேம்பின்னு எல்லாம் பேரு வச்சு இந்த டிஸ்னிக்காரங்க மானுங்கள ஒரு செல்லப் பிராணியாக்கிட்டாங்க. நான் ரொம்ப நாள் பேம்பின்னா பொண்ணு பேருன்னு நெனச்சிருந்தேன். ஆனா போன வருசம் பெரிய புள்ளை வச்சிருந்த ஒரு புத்தகத்தப் பாத்தப்போ தான் அது ஆம்பளப் பேருன்னு தெரிஞ்சுது! ஆம்பளயோ பொம்பளயோ, மானுங்க அப்படி ஒண்ணும் பஞ்சு மாதிரி மெதுமெது மிருகங்க இல்லீன்னு தான் நான் நெனக்கிறன். அதுங்க கொஞ்சம் எரும மாதிரி […]

Read Full Post »

இன்று என் மச்சினிக்கு, மனைவியின் தங்கைக்கு, தமிழகத்திலேதிருமணம். வானத்துக் கோள்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எங்களால் விமானம் ஏறிப் போக முடியவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாழ்த்து மட்டுமே சொல்ல முடிந்தது. அய்யர் வரும் வரையில் அமாவாசை காத்திருப்பதில்லை. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம், அக்கா வரும் வரை எல்லாம்காத்திருப்பதில்லை. எங்கிருந்தாலும் எங்களின் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து கொண்டு எங்கள் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும். இப்படித்தான் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் – இதேவைகாசிமாதம்- நானும் என் மனைவியும் மணம் செய்துகொண்டோம். […]

Read Full Post »

« Prev - Next »