Feed on
Posts
Comments

Category Archive for 'கொங்கு'

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் […]

Read Full Post »

பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு […]

Read Full Post »

“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு!?”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன். […]

Read Full Post »

ஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை. “நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா. “ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு?” “இல்ல… என்னமோ இந்தக் கழுதை […]

Read Full Post »

அப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. […]

Read Full Post »

Next »