இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஊமச்சாமி

January 9th, 2005 · 8 Comments

வெள்ளிக் கெழம வெளக்கு வச்சு
எல்ல மாரிக் கெண்ண ஊத்தி
சனிக் கெழம வாரா வாரம்
சனீசு வரனுக் கொம்போது சுத்து.

முக்குச் சந்துப் புள்ளை யார்க்கு
மறக்கா மப்பாலு ஊத்தி – ஊரச்
சுத்தி இருக்கும் மலை எல்லாம்
சூடம் வச்சேன் முருக னுக்கு.

கொல தெய்வங் கோயி லுக்கு
கொடுமுடித் தீத்தம் வருசம் ஒருக்கா
பழனி மலைச் சாமிக்கு நெத்திப்
பட்டை யோடே பூசை.

தொண்டத் தண்ணி வத்திப் போகக்
கத்தி வச்சேன் அரோ கரா
கண்டம் ஒண்ணு வெலகுச் சுன்னு
கருப்ப ணுக்கும் ரெண்டு கடா

ஏழ்ர நாட்டுச் சனி என்னப்
புடிச்சிக் கிட்டு ஆட்டு துன்னு
வெளி யூருச் சோசி யரு
வெத்தல கொதப்பிச் சொன்னாரு

பரிகாரம் பண்ணச் சொல்லித் திரு
நள்ளாறும் போயி வந்தேன் – நெனவு
தெரிஞ்சும் வடை எல்லாம் தோள்
மால போட்டுக் கிட்டேன்

உள்ளுக் குள்ளார வச்சுக் கிட்டு
ஊர்முச் சூடும் தேடுனேன் – சாமி
உண்மை எதுவுஞ் சொல்லாம வெறும்
ஊமை யாவே நிக்குது !

* * * *

Tags: கவிதைகள் · வாழ்க்கை

8 responses so far ↓

 • 1 Thangamani // Jan 9, 2005 at 4:01 pm

  நல்ல வடிவாய் வந்த பாடல் செல்வராஜ்!

 • 2 செல்வராஜ் // Jan 9, 2005 at 5:01 pm

  நன்றி தங்கமணி, சுந்தரவடிவேல். சித்தாட்டம்னு சொன்னா அது ஒண்ணு தான் இருக்க முடியும். “கஞ்சிச் சித்தர்”னு கூகிள்ள போட்டுத் தேடுனா வர்ற ஒரே பதிவு அது தான். உங்க கருத்தப் பாத்து மறுபடியும் அங்க போயி எல்லாத்தையும் படிச்சு சிரிச்சுட்டு வந்தேன்.

 • 3 மூக்கன் // Jan 9, 2005 at 9:01 pm

  கடந்து இருப்பவனை லோ லோ ன்னு தேடிக்கிடு இருந்தா, உள்ளேயே இருப்பவன் தெரியாம போய்டுவாங்கிறீங்களா..??

  கடவுள் = கடந்தும் இருப்பவன் + உள்ளும் இருப்பவன் – உப்போடு சேர்ந்த அப்பு போல ( என்க தமிழாசிரியர் சொன்னது.

  உங்கள் கவிதைகளில் இசையுணர்ச்சி அதிகமா இருக்குங்க செல்வா..நன்று.

 • 4 sundaravadivel // Jan 9, 2005 at 3:01 pm

  இன்னொரு சித்தாட்டம் போட நல்ல வாய்ப்பு மக்களே!

 • 5 செல்வராஜ் // Jan 10, 2005 at 6:01 pm

  வாங்க மூக்கன். உங்க கருத்துக்கு நன்றி. கொஞ்ச நாள் முன்னாலே கவிதை ஒண்ணு எழுதுனப்போ (கதைகள் மட்டும் மிஞ்சும்), இன்னும் கொஞ்சம் இசையைக் கூட்டினா நல்லா இருக்குமேன்னு சொன்னாங்க (இராமகி, காசி). அதனால இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி பார்த்தேன். முயற்சி ஓரளவிற்கு வெற்றி பெற்றிருப்பதை உங்க கருத்து காட்டுகிறது. மீண்டும் நன்றி.

 • 6 மாண்ட்ரீஸர் // Mar 14, 2005 at 11:52 pm

  ஆ! சுந்தரவடிவேலின் பதிவிலிருந்த ‘கஞ்சித் தாண்டவத்தை’ இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன்! பெருஞ் சடுகுடு ஆடியிருக்கிறார்கள் போல அன்றைக்கு முழுவதும் பின்பும்!!

 • 7 Gnaniyar // Aug 17, 2005 at 11:12 am

  இதயம் தொடும் நிதர்சனமான கவிதை நண்பா

  உங்களுக்கு ஒரு சல்யூட்டுங்கோவ்

  இதயம் நெகிழ்வுடன்

  ரசிகவ் ஞானியார்

 • 8 செல்வராஜ் // Aug 17, 2005 at 2:01 pm

  ரசிகவ் ஞானியார், மிக்க மகிழ்ச்சி, நன்றி. மீண்டும் கவிதை முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று நினைக்கிறேன்.