இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

நடுவுல கொஞ்சம் ‘கள்’ளக் காணோம்

January 8th, 2013 · 1 Comment

இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது.  முதலில், இந்த இடுகைக்கும் பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும் தொடர்பு கிடையாது.   சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த […]

[Read more →]

Tags: தமிழ்

ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்

September 29th, 2011 · Comments Off on ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்

ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன் (தமிழில்: இரா. செல்வராசு) தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா, பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்; அவளின் தெய்வீகத் தெரிவதனில் இனியென் றும் ஊடுருவாதீர். தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை அசைவேதும் இன்றிக் காண்பாள்; அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே மண்டி யிடினும் நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள் தெரிவென்பது ஒன்றே. தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள் கல் லெனவே. Source: Emily Dickensen The Soul Selects… பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு […]

[Read more →]

Tags: இலக்கியம்