Feed on
Posts
Comments

Tag Archive 'ஆத்திகம்'

அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.  (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!). எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் […]

Read Full Post »

அன்புள்ள அம்பரா, திருப்போரூர்க் கந்தசாமிக் கோயிலின் உட்சுற்றுச் சுவரில் தள வரலாறு படித்து நின்றிருந்த போது, ‘நீ நல்லவனா? கெட்டவனா?’ என்றாற்போல என்னிடம் நீ திடுதிப்பென்று கேட்டாய் – ‘நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று. கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அம்பரா. அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார […]

Read Full Post »