அள்ளுகுச்சி
Posted in பயணங்கள் on Aug 1st, 2016
சென்றவாரம் சிங்கப்பூரில் இருந்தபோது, குழு விருந்து ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கட்டுறுத்தப் பொறிஞர் (control engineers) கூட்டத்தாரின் நற்செயல்களைப் பாராட்டி மேலாளர் கூட்டம் வழங்கிய மதிய உணவு. ஒரு கூட்டுவேலைக்காக வந்திருந்த என்னையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டார்கள். கிழக்காசிய உணவை அள்ளுகுச்சிகளின் (chopsticks) வழியே உண்ணும் கலை இன்னும் கைவரப்பெற்றிருக்கவில்லை என்பதால், நான் பெரும்பாலும் எளிதாக உண்ணக்கூடிய வறுசாதம் போன்றவற்றையே தெரிவு செய்வதுண்டு. நெளியுணவு முதலியவற்றை முட்கரண்டிவழி உண்பதும்கூடச் சிக்கலான ஒன்றே. ஆனாலும் வலியவிதி ‘இங்கே என்ன நல்லா இருக்கும்’ […]