தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன்
Jul 16th, 2008 by இரா. செல்வராசு
தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்கிற முறையில் தமிழ்மணத்தின் மீதும் அதன் நிர்வாகக் குழு மீதும் அவற்றின் செயல்பாடுகள் மீதும் வைக்கப்படும் அவதூறுகளும் அபாண்டங்களும் என்னையும் எரிச்சலடையவும் வேதனைப்படவும் வைக்கின்றன. இவற்றின் மூலகர்த்தாக்கள் சில உட்காரணங்களுக்காக வேண்டுமென்றே இவ்வாறு செயல்படலாம். ஆனால் வேறு பலரோ அவர்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாகவோ, வேறு ஏதும் புரியாததாலோ, குழப்பத்தாலோ கூடத் தாங்களும் சேர்ந்துகொண்டு கும்மிக்கொண்டிருக்கின்றனர். எரிச்சலை அடக்கிக் கொண்டு, வேதனையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே நேர அழுத்தங்கள் இருக்கும் என்றாலும், எத்தகைய பணி, குடும்ப, பிற அழுத்தச் சூழலில் தமிழ்மண நிர்வாகிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிப் புரிய வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சொல்லாமலே புரிந்து கொள்ளும் நல்ல ஜீவன்களுக்கு நன்றி.
அண்மைய முடிவான சில வார்த்தைகளை வடிகட்டுதல் என்பது தனிப்பட்ட ஒருவரைக் குறி வைத்து எடுக்கப் பட்டதல்ல. தான் பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் நண்பரின் பதிவும் இடுகைகளும் இன்னபிறவும் இன்னும் தமிழ்மணத்தில் இருந்தே வருகிறது. தனிப்பட்ட ஒருவரை விலக்க வேண்டும் என்றால் தான் இரண்டு மூன்று முறை முன்னறிவிப்பு மடலும் அவகாசமும் தந்து அதன்பிறகு விலக்குவது தமிழ்மணத்தின் வழக்கம். இம்முறை எடுக்கப்பட்டது ஒரு நுட்பமுடிவு/மாற்றம். எவ்வாறு மறுமொழிப் பட்டியல் 40க்குக் குறைக்கப் பட்டதோ, சூடான இடுகைகள் கொண்டுவரப்பட்டதோ, பிறகு விலக்கப் பட்டதோ, அதைப் போன்ற வடிகட்டு நுட்பம் இது.
இவ்வாறான மாற்றங்களையும் பொதுவில் அறிவித்தே செய்து வருகிறோம் என்றாலும், சில சமயம் மாற்றம் முதலிலும் அறிவிப்புப் பின்னரும் வருவதும் வழக்கம். அதற்குப் பல காரணங்கள். முதலில் நுட்ப வேலைகள் செய்ய வேண்டும். அது சரியாய் வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கும். செய்த மாற்றம் சரியாக இல்லையென்றாலோ திருப்தியாக இல்லையென்றாலோ மீண்டும் வேலை செய்து சரி செய்ய வேண்டும். இத்தனைக்கும் பிறகும் அறிவிப்பு எழுதி வேறு இடத்தில் சென்று வெளியிட வேண்டும். எங்கள் அனைவருக்கும் முழு நேரப் பணி இது இல்லையென்பதால் இயன்ற போது தான் இவற்றைச் செய்ய முடிகிறது. நள்ளிரவு தாண்டியும் செய்யும் வேலைகளுக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடும் முன் சற்றே தூங்கிக் கொள்ளலாம் என்பதற்கு முன்னுரிமை தருவது முற்றிலும் நியாயம். சில சமயம் வேலை செய்பவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டுக் குழுவில் வேறு நபர் அறிவிப்பை எழுதி, ஆனால் அதை நுட்பக் குழுவிடம் சரிபார்க்கக் கொடுத்து, அதன்பிறகே வெளியிட முடியும். இதனாலும் கால தாமதம் ஆவது இயல்பு. இதற்கு முன்னரும், முதலில் நுட்ப மாற்றங்கள் வெளியிட்ட பின் அதற்கான அறிவிப்புக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதை யாரும் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஏன் முன்னறிவிக்கவில்லை என்பதற்கான விளக்கம் மட்டுமே இது.
ஏன் இந்த மாற்றம் என்பது குறித்து சார்ந்தும் எதிருமான கருத்துக்கள் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். தமிழ்மணம் பெரும்பாலும் எதனையும் தணிக்கை செய்யும் கொள்கையோ குறிக்கோளையோ கொண்டதல்ல. மாறாகக் கருத்துச் சுதந்திரம் பேணும் இடம். எல்லா விதமான அரசியல், சமயம், சமூக, பால், சாதி, வர்க்கக் குரல்களும் இன்னும் இங்கு வந்து கொண்டே தான் இருக்கிறது. நிர்வாகத்தைக் கிண்டல் செய்யும் கேள்வி கேட்கும் பதிவுகளும் இவற்றில் அடக்கம். இதன் ஆரம்ப கால வரலாற்றை அறிந்தவர்கள் இதனை நன்கு அறிவார்கள். பல சமயம் பதிவர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. சில சமயம் எல்லை மீறும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கின்றன. அவை நிர்வாகிகளான எங்களது நேரத்தையும் பதிவர்-வாசகர்களின் நேரத்தையும் வீணடிக்கும் நச்சுக்கள். இவையும் கூட நிர்வாகக் குழுவில் விவாதிக்கப் பட்டுப் பெரும்பான்மையான கருத்தின் படியே செயல்படுகிறது.
காமக்கதைகள் என்று முதலில் பார்க்கிற பலரும் நினைப்பது ஒன்றாகத் தான் இருக்கும். இப்போது எழுதிய சுந்தரின் எழுத்து அவ்வகையில் வராமல் போகலாம். ஆனால், தலைப்பும் சில வரிகளும் மட்டுமே வரும் தமிழ்மணத்தில் அதனைப் பார்க்கிறவர்கள் வேறு விதமாக எண்ணுவார்கள் என்பதால் தமிழ்மணம் என்னும் அமைப்பு எடுத்த நடவடிக்கை இது. சிலருக்கு அது ஒவ்வாததாகக் கூட இருக்கலாம். தன்னுடைய விழும்பத்தைப் பாதிக்காதவண்ணம் இருக்கச் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருக்கும் உரிமை உண்டு. பதிவர்கள் தம் பதிவில் மட்டுறுத்தல் ஏற்பாடு செய்து கொள்வதை ஒத்ததே இது. இதனைத் தனிப்பட்ட முறையில் தாக்குதலாகவோ, அவமதிப்பாகவோ கருத வேண்டாம் என்று மட்டுமே சொல்ல முடியும் என்னால்.
நிற்க. இந்நேரத்தில் முன்னர் நீக்கப்பட்ட பதிவர்கள் கிடைத்த குழப்பத்தில் இன்னும் குட்டையைக் கலக்குவோம் என்றபடி எழுதியும் நடந்து கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பிற நிர்வாகிகள் பெயரிலியும், சுந்தரமூர்த்தியும் பொறுமையாகப் பதில் எழுதி இருக்கிறார்கள். காசியும் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இருப்பினும் தமிழச்சி, ஓசை செல்லா போன்றோர் இன்னும் குழப்பியும் அவதூறாகவும் எழுதி வருகின்றனர். ஒருவேளை அவர்கள் விருப்பப்படி எல்லாம் எழுதிக் கொண்டு இங்கு இருக்க முடியவில்லை என்பதால் இருக்கலாம். அல்லது தமிழ்மணம் நடவடிக்கை என்று அவர்களை நீக்கியது சுயத்தைப் பாதித்திருக்கலாம். என்ன காரணம் என்று மேலும் ஆராய விருப்பமில்லை. இந்த முடிவிலா வாத-விவாதங்களுக்குள் செல்லவும் விருப்பம் இல்லை. மீண்டும் மீண்டும் அவர்களால் உதிர்க்கப்படும் அவதூறுகள் உண்மைதானோ என்று ஓரத்தில் இருப்போரையும் எண்ண வைத்துவிடும் அபாயம் இருப்பதால் சில விளக்கங்களைப் பதிவு செய்து விட்டுச் செல்ல விருப்பம்.
மற்றபடி தமிழ்மணம் என்பது எந்த விதச் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட ஒரு அமைப்பல்ல. எந்த ஒரு தனிமனிதனும் நினைத்ததைச் செய்து கொள்ளும் இடமல்ல. எந்த விதமான தணிக்கையும் செய்யும் விருப்பமும் தமிழ்மணத்திற்கு இல்லை. ஆனால், இது ஒரு அமைப்பு என்பதாலும், சில சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதாலும் கட்டற்ற சுதந்திரம் என்று எதையும் அனுமதித்துவிட்டுச் செல்ல முடியாது என்னும் நிலையையும் பதிவர்கள் உணர வேண்டும். கண்மூடித்தனமாகத் தாம் நினைத்ததைச் செய்வோம், அதைத் தடுப்பது எம் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று ‘சத்தம்’ இடுபவர்களை, தமது கொள்கைகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறாகவும், வாசகர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தமிழ்மணம் கருதி அவர்களை நீக்கினால் அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்ல. அவர்கள் எத்தனை முறை அதைத் திருப்பித் திருப்பிச் சொன்னாலும்.
ஆகா, என் வெற்றியைப் பார், எத்தனை விசயங்கள் வெளிக் கொணர்கிறேன் பார் என்று சத்தமிட்டுச் செல்லா போன்றோர் மார்தட்டிக் கொள்வார்களானால் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். இது வெற்றியல்ல. தோல்வி. இங்கமர்ந்து இதனை எழுதி அலுவத்துக்கும் தாமதமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதில் எனக்கும் இது தோல்வியே. வேதனையே. வாழ்க நீவீர்.

Hi,
i think there are no problem in your decision you have full rights which topics need to allow or not so you don’t need apologize any one any where.
your site is some thing like www.digg.com take a look that site they allow only SFW (safe for work) topic only and you site bring traffic who linking your code so if they need traffic they will link other wise leave them
or
just include a section family filter on off if on just showing only SFW tropics if they off site shows SFW and NSFW topics eg : www.metacafe.com yoou can see family filter right top
thanks
நேற்றிலிருந்து இதனைக் குறித்து எழுத வேண்டும்போலிருந்தது. எழுதியமைக்கு நன்றி. இன்னொன்று எனக்குச் சிரிப்பு/வேதனையைத் தந்தது என்றால், அது, தமிழ்மணத்தை நடத்துபவர்களை “முதலாளி”கள் என்றும், “அடக்குமுறை”யைப் பிரயோகிப்பவர்கள் என்றும், “கட்டுடைப்புகளுக்கு” எதிரானவர்கள் என்றும் அடையாளப் படுத்த முனைவது. நான் உட்பட இக்குழுவில் இருக்கும் நண்பர்களின் பதிவுகளை (ஒரு காலத்தில் இவர்களும் ஒழுங்காகவும், தொடர்ச்சியாகவும் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தவர்களே!) ஒரு முறை மேய்ந்து பார்த்தால் அவர்கள் முதலாளிகளா, அல்லது அதனை எதிர்த்து நிற்பவர்களா என்பது புரியலாம். ஏழைகளோடும், ஒடுக்கப்பட்டோரோடும், நலிவுற்றோரோடும் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளும் (யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை) பல வலைப்பதிவர்களையும்விட ஏழைகளும், ஒடுக்கப்பட்டோரும், நலிவுற்றோருமே தமிழ்மணத்தை நடத்தும் குழுவில் இருக்கும் பலர் என்பதைப் பல நண்பர்களும் அறிவார்கள், புதியவர்களும் புரிந்து கொள்ளலாம். வலைப்பதிவுகளின் நோக்கமே, முதலாளித்துவ ஊடகங்களுக்கு ஒரு மாற்றாக இருக்க வேண்டும், எல்லோரது படைப்புகளும் வெளிக் கொணரப்பட வேண்டும் என்பதில் வலைப்பதிவர்களுக்கும் சரி, தமிழ்மணத்தை நடத்தும் வலைப்பதிவர்களுக்கும் சரி, மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனை நோக்கித்தான் நாம் செல்ல வேண்டுமே தவிர, நமக்குள் பிரிந்து நோக்கைத் தவறவிட்டுத் திரியக் கூடாது என்பதே எனது அவா. எந்த ஊடகத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக வலைப்பதிவுகள் செயற்பட வேண்டுமோ, அந்த ஊடகங்களின் ஊதுகுழல்களாகவே ஆகிவிட்டனவோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட ஆரம்பிக்கிறது. எங்களது கால வசதிக்குத் தகுந்தாற்போல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புகளில் இருக்கும் குறைகளைக் களைய இயன்ற வரை முயல்வோம். உதவ நினைப்பவர்களும் முன் வரலாம். வெறுமனே சிறு பிழைகளுக்கும் (பிழையாக உணர்ந்தால்) மண்ணை வாரி இறைப்பதைக் கண்டால் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது, அல்லது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. வேண்டாமே!
சுயத்தைக் கொண்டாடிக் கொள்ளுதல், சிறுமைக்குச் சவுக்கடி கொடுத்தல் எல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒரு பொது இடத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யலாகாது என்பதை நாம்தான் பரிசீலித்துக் கொள்ள வேண்டும். இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எல்லோரையும் இழுக்கும் தலைப்புகளை வைக்க வேண்டும் என்ற அவா, தேவை எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கும் இருந்திருக்கிறது. சுய பரிசீலனையும், ஒத்த நோக்குடையவர்களின் சுட்டிக் காட்டுதலும் அவமானப்படக்கூடிய ஒன்றல்ல.
தோழரே, என்மீது வரும் அவதூறுகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நன்றி! நான் அடக்கி வாசிக்கும்போது வரிசையாய் வந்து ஆடுவது தேவையற்றது. என் கேள்விக்கு இன்னும் சுந்தரமூர்த்தியோ, பெயரிலியோ பதிலளிக்காத போது தாங்கள் முதலாளித்துவம், ச்கோதரத்துவம் போதிக்கவேண்டியதில்லை. அவைபற்றி நிறைய எழுதிவிட்டவன் செல்லா. கொஞ்சம் பொறுமை காக்கவேண்டுமை கேட்டுக்கொள்கிறேன்!
//மற்றபடி தமிழ்மணம் என்பது எந்த விதச் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட ஒரு அமைப்பல்ல. எந்த ஒரு தனிமனிதனும் நினைத்ததைச் செய்து கொள்ளும் இடமல்ல. எந்த விதமான தணிக்கையும் செய்யும் விருப்பமும் தமிழ்மணத்திற்கு இல்லை.//
இதை தெளிவாக்கியதற்கு மிக மிக நன்றி செல்வா. பதிவர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் நீங்கள் குறிப்பிட்ட பிற நிர்வாகிகளின் எழுத்துகளும், பதில் பின்னூட்டங்களும் (முக்கியமாக ஆங்கிலத்தில் எழுதியவை) வேறு விதமாகவே பார்க்கப்படும் என்பதை தாங்கள் உணரவேண்டும். அவை தமிழ்மணம், தன் பதிவர்களிடம் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என்பது என் கருத்து. தவறாக நினைக்க வேண்டாம்… தமிழ்மணத்தில் இணைக்கும் பதிவுகளின் தலைப்பில் கூட “காமம்” என்ற வார்த்தை இருக்கக்கூடாது.. ஆனால் தமிழ்மண நிர்வாகியான நான் “I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise” என்று பின்னூட்டமிடுவேன் என்பது சர்வாதிகாரமாகவே பார்க்கப்படும் என்பது தங்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன்.
இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. என் மனதில் பட்டதை, என்னை வசைபாடாத ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவே இந்த பின்னூட்டம். இதை நீங்கள் பிரசுரிக்காவிட்டாலும் நான் வருத்தப்படப் போவதில்லை.
சும்மா கொடுத்த மாட்டை ன்னு நம்ம ஊரு பழமொழிதானுங்க ஞாபகம் வருது.(வடிவேலு ஸ்டைல்ல…. என்னைச் சொன்னேனுங்க!)
தமிழ்மணத்தை ஒழிப்பதாகச் சூளுரைத்துச் சென்ற செல்லாவும் கோஷ்டிகளும் இத்தனை நாள் கொரில்லாத் தாக்க்குதலில் தோற்றுவிட்டு இன்று இந்த நெறியற்ற தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள். ”போகிறேன்” என்ற ஆள்தான் பொய்ப்பெயரில் வந்திருக்கிறார் என்று தெரிந்தும், அவர் நோக்கம் ”நான் அனுபவிக்க முடியாத ஒன்றை எவனும் அனுபவிக்கமுடியாமல் அழிப்பேன்” என்ற பச்சை சுயநலவாதம் என்று தெரிந்தும் இன்னும் எதற்கு அந்த ஆளுக்கு ‘தட்டி’ வைக்கிறீர்கள். கழட்டிவிடுங்கள். எங்காவது போய்க் குட்டிக்கரணம் போடட்டும்.
நன்றி திரு. செல்வராஜ்,
உங்களது விளக்கம் முதல் வாசிப்பில் திருப்தி தருவதாகவே இருக்கிறது.
சுந்தரின் கதைகளுக்கு மூன்று ஸ்டார்கள் வைத்தது triple x என்று பட்டம் கட்டுவதுபோல இருந்ததாலேயே நான் உடனடியாக எதிர்வினையாற்றுவது என்று முடிவு செய்து எழுதினேன்.
மற்றது உங்களதும் பிற நிர்வாகத்தினரது சூழல்கள், வேலைப்பளுக்கள் அனைத்தும் புரிந்துகொள்ளக் கூடியதே. எனினும் இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால், நீங்களே குறிப்பிட்டதுபோல குட்டையைக் குழப்புவர்களது அவதூறுகளைத் தவிர்த்திருக்கலாம்.
என் போன்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்ததையும் தடுத்திருக்கலாம்.
மிகுந்த நன்றிகள்.
அன்புடன்
வளர் …
தோழர் செல்லா
தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்று சொல்லி செல்வராஜ் தமிழ்மணம் தொடர்பான பிரச்சினையை தான் எழுதியிருக்கிறார்.
நீங்கள் ‘என் கேள்விக்கு இன்னும் சுந்தரமூர்த்தியோ, பெயரிலியோ பதிலளிக்காத போது’ இவரெப்படி சொல்ல்லாம் என்பது சரியாகுமா?
/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/
இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..
நல்லதொரு விளக்கம் செல்வா.
இங்கே தர்ம ஞாயம் பேசும் வெண்பூ என்ற முகமில்லாத நண்பரே, உமக்கே பெயரில்லை, உம் பெயரை நான் எங்கே இழுக்கிறேன்? என் பெயரை வைத்து விளையாடுபவர்களிடமிருந்து தப்பித்தால் போதாதா? போகிற போக்கில் சும்மா அள்ளித்தெளித்தல் சரியா?
நான் சொல்வது:
//பெயரிலி, செல்லா, காசி மற்றும் இன்ன பிற பின்னூட்டக்காரர்களுக்கு,
தெரிஞ்சோ தெரியாமலோ(?) என்னோட பேரை இதுல இழுத்து விட்டுட்டீங்க. என் பெயர் வந்ததுக்கு காரணம//
என்று நீங்கள் எழுதியை வைத்து!
செல்வா
மிக அருமையான பதிவு. சூப்பர். மனம் உணர்ந்து எழுதப் பட்ட வரிகள். சுந்தர வடிவேல் உங்களது பின்னூட்டமும் அருமை!
என்ன சொன்னாலும், எழுதினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!
மயிலாடுதுறை சிவா…
வளர்மதி/அய்யனார்,
ஒருவன் தன்னை நிராபராதி என்று நிரூபிக்கும் வரை அவன் குற்றவாளி, உங்கள் கோர்ட்டில், அப்படித்தானே, குற்றப் பத்திரிகை, விசாரணை, ம்ஹும், ஒண்ணும் கிடையாது, தீர்ப்பும் எழுதிவிடுவீர்கள். நல்ல பினா, வானா ஆளுங்கப்பா:-)
அது பினா, நானா, அதான் போஸ்ட்மார்ட்டமாமிசமோ என்னவோ சொல்வாங்களே அதான்:-)
அருமை நண்பர்களே!
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் …தான் நினைக்கத் தோன்றுகிறது.
அனைவரும் மனிதர்களே.புரிந்து கொள்ளல் இல்லாமை ஒரு காரணம்.
தமிழ்மணம் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று உரிமை கொடுத்துள்ளதா?அவரவர்கள் நாகரீகமாக எழுதுங்கள்,இல்லாவிட்டால் இது நடக்கும் என்று அனைவருக்கும் புரியும் படிச் சொல்லியிருக்கிறதா?
எழுதும் பதிவர்கள் தங்கள் மகள்,தங்கைகள் பதிவுகளைப் படிக்கிறார்கள் என்ற உணர்வுடன் எழுத வேண்டும் என்றாவது அறிவிப்பு செய்துள்ளதா?எழுதுபவர்களாவது அந்த மாதிரிக் கட்டுப்பாட்டுடன் எழுத வேண்டும் என்று எழுதுகிறார்களா?தனி மனிதத் தாக்குதல்கள் ஏன்?அது நடப்பதைத் த்டுக்க வழி முறைகளை விதிகளாக்க வேண்டாமா?
குறை கூறுபவர்கள் அதற்கு வழி முறைகளையும் சொல்லக் கடமைப் பட வேண்டாமா?
எனது கருத்து.
ஐந்து பொதுவானவர்கள் அவர்களுக்குக் குறைகளாகத் தெரியும் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் இடட்டும்.நிர்வாகத்திற்கும் தெரிவிக்கட்டும்.பூனைக்கு யார் மணி கட்டுவது?
விருப்ப முள்ளவர்களைப் பெயர் கொடுக்கச் சொல்லுங்கள்.அதில் ஐந்து பேரை நிர்வாகம் தேர்ந்த்தெடுக்கட்டும்.அவர்களைப் பிடிக்க வில்லை என்று மர்றவர்கள் தெரிவித்தால் மார்றிக் கொள்ளலாமே!
வழியாய் இல்லை உலகிலே.
அனைவரையும் மீண்டும் வரவேற்றுப் புதிய மணத்துடன் தமிழ்மணம் மணக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் அனைவர்க்கும்.
Is it required to have this post????? Personally I feel, NOT REQUIRED.
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே… உங்கள் உணர்வை (போலவே சுந்தரவடிவேலின் பின்னூட்டத்தையும்).
நான் தமிழ்மணம் குறித்தோ அல்லது அதன் நிர்வாகிகள் குறிந்தோ ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்… சில சமயம் கோபத்தில் / ஈகோவில் இம்மாதிரித் தவறுகள் நிகழ்வது சகஜம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்தானே… மற்றபடி, யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கமில்லை.
என் பதிவை மொத்தமாக நீக்கியிருந்தாலும் இத்தனை மாதங்கள் என் இடுகைகளைத் திரட்டியதற்கு தமிழ்மணத்திற்கு நான் நன்றியுடையவனாகத்தான் இருப்பேன்.
//நீங்கள் ‘என் கேள்விக்கு இன்னும் சுந்தரமூர்த்தியோ, பெயரிலியோ பதிலளிக்காத போது’ இவரெப்படி சொல்ல்லாம் என்பது சரியாகுமா?//
வசந்த்,
இது ஒரு வகையில் நல்லது தான். அங்கே நான் போய் மீண்டும் பதில் சொன்னால் ஓசை செல்லா, தமிழச்சி, அனானிகள் என்று இன்னும் ஒரு டஜன் கேள்விகள் வரும். அதற்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருக்க எனக்கு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை. நான் சொல்ல நினைத்ததை/வேண்டியதைத் தெளிவாக சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன். அங்கே நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்பியது தமிழ்மணத்தின் செயல்பாடுகளுக்கும், முடிவுகளுக்கும் ஒருவர் மட்டுமே காரணமில்லை; தமிழ்மணத்திற்கு யார் மீதும் தனிப்பட்ட அளவில் காழ்ப்பு இல்லை; அதன் இயக்கம் இயன்ற அளவு பதிவர்களின் தேவைகளை நிறைவு செய்வது; அதற்கு அரசியல் காரணங்கள் கற்பிப்பது நியாயமில்லை.
செல்லா குறிப்பிட்டுள்ள பெயரிலி vs சுந்தரமூர்த்தி முரண்பாட்டுக்கு என் சுருக்கமான பதில்: நான் எழுதியது என் நினைவிலிருந்து மட்டுமே. பழைய மடல்களை தோண்டித் துருவினால் இதற்கு சரியான விடை கிடைக்கலாம். நான் எழுதிய தகவல் தவறாகக் கூட இருக்கலாம். இதை வைத்து தமிழ்மணத்தைத் தோலுரித்து, வெற்றி விழாக் கொண்டாட செல்லா நினைத்தால் கொண்டாடிக்கொள்ளலாம்.
நட்பு முறையில் செல்லாவுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழ்மணம் நீங்கள் கோரி விலக்கியதோ அல்லது பிற பயனர்களின் கோரிக்கைகள் படி விலக்கியதோ, நீங்கள் மீண்டும் புதிய பெயரில் தமிழ்மணத்தில் இணைந்தாயிற்று. புதிய பதிவில் புதிதாக எழுத ஏதாவது இருந்தால் எழுதுங்கள். ‘இல்லை பழைய சரக்குகளை மறுசுழற்சி செய்துக்கொண்டிருப்பேன்’ என்று அடம் பிடித்தால் good luck!
தமிழ்மணத்தின் தொழில் நுட்ப மாற்றங்கள், அதற்கான தேவைகள், அதனை முன்னறிவிப்பு செய்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த உங்களது பதிவு தமிழ்மணத்தை நியாயமாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மற்றபடி இதனால் கவன ஈர்ப்பு வேண்டுவோருக்கும், எரியிற வீட்டில் கொள்ளி தேடுகிறவர்களுக்கும், கவனமாக தங்களது சொந்த வாழ்க்கையை விலக்கிவைத்துவிட்டு இணையத்தில் அதிகாரத்தை கட்டுடைக்கும் சண்டமாருதங்களும் கிடைக்கும் பயன் ஒன்றுமில்லை.
ஆனால் இது போன்ற நிகழ்வுகளால் கிடைக்கும் பயன் எனக்கொன்று உண்டு: போலியான புரட்சிவாதம், சுயநலத்தை பொது நலமெனும் பொதியில் சுருட்டி கூவிவிற்க தயங்காத வெட்கமின்மை, சந்தர்ப்பம் கிடைத்தால் கலவரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நெருப்பு வைக்கும் குழு அராஜகம் இவைகள் எங்கிருந்தும் முழுவீச்சோடு வரமுடியும் என்பதை ஒவ்வொரு நிகழ்வும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.
நன்றி.
தங்கமணி
(நான் தமிழ்மணத்தின் நிர்வாக குழுவில் ஒருவன்)
தேவைகளின் தேவையை தேவைகள் தான் நிர்ணயக்கின்றன.
விரிவான தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்.
Dear Selvaraj,
Go to google.com
Make a search for “tamilmanam.net dccreator”
You’ll get a link.
Now open the CACHED PAGE of this link in fire fox.
So what you get?
Now what do you say on this?
Your CODER wanted to reject Mayavarathaan’s comments & posts in any form automatically.
Whoz your coder and why did he do this? Is this Thamizmanam’s policy decision?!
/ஆனால் தமிழ்மண நிர்வாகியான நான் “I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise” என்று பின்னூட்டமிடுவேன் என்பது சர்வாதிகாரமாகவே பார்க்கப்படும் என்பது தங்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன்/
வெண்பூ, தமிழ்மணம் நிர்வாகி என்றால், சொந்தக்கருத்தில்லாமல் உங்கள் கருத்தினை மட்டும் ஆமோதித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் சர்வாதிகாரநிலையா? என் சொந்தக்கருத்தைத்தான் தமிழ்மணமும் பிரதிபலிக்க வேண்டும் என்ற என்ன நியாயம்? அதிகாரம் அதிகாரம் என்று கத்தும் நீங்களே உங்கள் அதிகாரமான கருத்தினை இப்படியாகத் திணிக்கின்றீர்களே?
நீங்கள் மட்டும் கண்டபாட்டிலே தனியே எடுத்துவைத்துத் தனித்தவில் தட்டும்போதெல்லாம், முதுகையும் தலையையும் வசதியாகக் கொடுக்க ஒரு தனிமனிதனைத்தானே என்னிலே தேடுகின்றீர்கள். துணிச்சலிருந்தால், தமிழ்மணம் என்பதற்குப் பொதுவிலே தாக்கமுடியுமா? குறைந்தபட்சம் அந்த நேர்மையிருந்தது. செந்தழலுக்கோ, ஓசை செல்லாவுக்கோ, லக்கி லுக்குக்கோ இந்த நேர்மை இருக்கிறதா? தெரிந்தெடுத்து அடிக்கின்றீர்கள். இரவுக்கழுகு காலத்திருந்து இதே கதைதானே? ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பதாலா? அல்லது, நான் தமிழ்நாட்டுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை;என்னைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை என்பதாலா? சும்மா என் பாட்டிலே இருப்பவனை இழுத்துக்கட்டி வந்து உதைக்கிறீர்களே? போங்கப்பா நீங்களும் உங்கள் சவாரிக்குதிரைகளும். சே! உங்களுக்கெல்லாம் பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் அக்கா, அண்ணாமார்கள்தான் சரி. வாழ்க. அவ்வளவுதான்.
செல்வராஜ் மன்னிக்கவேண்டும். உங்கள் பதிவிலே இந்தப்பின்னூட்டத்தை இடுவதற்கு. ஓவியாக்கள் பூக்களையெல்லாம் unsettled woman போல அடையாளம் கண்டு உதைத்துக்கொண்டிருக்க நேரமுமில்லை. அவசியமுமில்லை. அதனாலே, ஒரு பதிலாக இங்கே இட்டிருக்கிறேன். விரும்பினால், அனுமதியுங்கள். அல்லாவிடினும், தடுத்தாலும் புரிந்துகொள்வேன். இதுதான் கடைசியும் முதலுமான பின்னூட்டம்.
I will tell you the reason too.
Thamizh Sasi is ur coder and Mayavarathaan revealed Thamizh Sasi’s another face long back. Hiz another blog (vanniyar).
So Thamizh Sasi didnt allow Mayavarathaan’s blogs / comments in any form here.
Simple.
//காசி: இங்கே தர்ம ஞாயம் பேசும் வெண்பூ என்ற முகமில்லாத நண்பரே, உமக்கே பெயரில்லை, உம் பெயரை நான் எங்கே இழுக்கிறேன்? என் பெயரை வைத்து விளையாடுபவர்களிடமிருந்து தப்பித்தால் போதாதா? போகிற போக்கில் சும்மா அள்ளித்தெளித்தல் சரியா?
நான் சொல்வது:…..
//
வெண்பூ அவ்வாறு சொன்னது, பெயரிலி கீழ் கண்டவாறு எழுதியதற்காக
//தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே//
சும்மா தமாசுக்கு சொன்னது என்றே நினைக்கிறேன்!
//காசி: இங்கே தர்ம ஞாயம் பேசும் வெண்பூ என்ற முகமில்லாத நண்பரே, உமக்கே பெயரில்லை, உம் பெயரை நான் எங்கே இழுக்கிறேன்? என் பெயரை வைத்து விளையாடுபவர்களிடமிருந்து தப்பித்தால் போதாதா? போகிற போக்கில் சும்மா அள்ளித்தெளித்தல் சரியா?
நான் சொல்வது:…..
//
வெண்பூ அவ்வாறு சொன்னது, பெயரிலி கீழ் கண்டவாறு எழுதியதற்காக
//தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே//
சும்மா தமாசுக்கு சொன்னது என்றே நினைக்கிறேன்!
செல்வராஜ்!
விளக்கமான இடுகைக்கு நன்றி.
//இது போன்ற நிகழ்வுகளால் கிடைக்கும் பயன் எனக்கொன்று உண்டு: போலியான புரட்சிவாதம், சுயநலத்தை பொது நலமெனும் பொதியில் சுருட்டி கூவிவிற்க தயங்காத வெட்கமின்மை, சந்தர்ப்பம் கிடைத்தால் கலவரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நெருப்பு வைக்கும் குழு அராஜகம் இவைகள் எங்கிருந்தும் முழுவீச்சோடு வரமுடியும் என்பதை ஒவ்வொரு நிகழ்வும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.//
இவ்விதமே நானும் புரிந்துகொள்கின்றேன்.
/You Know who AM I
Thamizh Sasi is ur coder and Mayavarathaan revealed Thamizh Sasi’s another face long back. Hiz another blog (vanniyar).
So Thamizh Sasi didnt allow Mayavarathaan’s blogs / comments in any form here.
Simple./
Let me go with my little tech knowledge here. if I am wrong, please selvaraj or anyone correct it.
the basic fact is mayavaraththan’s blog was removed long time back. Go and refer the thamizmaNam blogS for the reasons - HOW, WHEN & WHY. However, due to to the code glich, somehow his data linkered. Few months back, someone started to feed his post one by one into thamizmaNam. It was to be removed somehow. This happened not only for MayavaraththAn, but also for another blogger. Why don’t you did not make it a point for her musing blog? She suffered the same situation by some mischevious people. After all, even yesterday, that’s the way someone fed the URL of my blog, http://wandererwaves.blogspot.com fed into thamizmaNam for people to see. As a matter of fact, I removed my blog from thamizmaNam in April, 2007. Now, my blog data was there due to the back up data (I think).
One more point; your argument is funny. If US bombs Japan, according to your logic, the world had to blame the scientists who developed the nuclear bomb, not the US administration.
நன்றி நண்பர் செல்வராஜ் & (இ)ரமணீதரன்.
இங்கே என்னுடைய பெயர் இழுக்கப்பட்டிருப்பதால் என்னுடைய 2 செண்ட்ஸ்..
தமிழ்மணத்திலிருந்து ஒரு காலமும் என்னை விலக்கவில்லை. நானாக தான் விலகிச் சென்றேன். விரும்பினால் மீண்டும் வரலாம் என்ற அஞ்சலும் வந்திருந்தது அப்போது.
Period.
மீண்டும் தமிழ்மணத்தில் என்னுடைய பதிவை சேர்க்குமாறு நலம் விரும்பிகள் அங்கே பதிந்திருப்பதாகவும் அங்கே பல நாட்களாக என்னுடைய பதிவு வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாகவும் நண்பர் ஒருவரிடமிருந்து தகவல் வந்தது. இது குறித்து அந்த நண்பர் தனி பதிவும் எழுதியிருந்தார்.
நான் அதை அப்போது ஆட்சேபிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.
ஆனால் என்னுடைய மின்ஞசல் முகவரிக்கும் ‘உங்கள் வலைப்பூ தமிழ்மணத்தில் சேர்க்க முடியாது. காரணம் கீழே’ என்ற ரீதியில் ஒரு மினஞ்சல் வந்தது. ஆனால் கீழா காரணம் எதுவும் இல்லை. ஆகவே ஒரு ஆரவத்தின் காரணமாக ‘காரணம் என்ன?’ என்று தெரிந்து கொள்வதற்காக இந்த முறை நானாக மீண்டும் இணைத்தேன். மீண்டும் நிராகரித்து, மீண்டும் அதே காரணமற்ற மின்னஞ்சல்.
என்ன காரணம் என்று மின்னஜ்சல் அனுப்பினேன். இன்று வரை பதில் இல்லை.
நேற்று பலரும் எனக்கு அந்த திரட்டியில் காலையில் ஏதோ பிழை இருப்பது காட்டுவதாகவும், அதில் என்னுடைய பதிவு, பின்னூட்டங்களை நிராகரிப்பதாக கோடிங் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
ஒரு சில மணித் துளிகளில் அந்த பிழை இருப்பதை காட்டுவது சரி செய்யப்பட்டது. ஆனால் கூகுளாண்டவர் அதை அப்படியே கண கட்சிதமாக பிரதி எடுத்து வைத்துக் கொண்டாரே?!
ரமணிதரன் சொல்வது போல இருந்தால் தனிப்பட்ட முறையில் என்னுடைய பதிவை மட்டும் அப்படி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
இவ்வளவு காலங்களில் நான் ஒருவன் மட்டும் தான் தமிழமண தவறுகளை சுட்டிக்காட்டி தானாகவே விலகிச் சென்றேனா?!
இன்னும் பல கேள்விகள் கேட்க விருப்பம் தான்.
ஆனால், வேண்டாம் விட்டு விடுவோம்.
கடைசியாக கூறுகிறேன்… இப்படி செய்ததும் தமிழ்மண குழுவில் உள்ள அனைவரின் ஒட்டு மொத்த முடிவினால் தான் என்ற சப்பைக்கட்டை யாரும் கட்ட வேண்டாம் என்று சொல்லவும்.
இந்த பதில் கூட செல்வராஜ் என்ற உங்களின் மீது இருக்கும் மதிப்பினால் தான் இடுகிறேன்.
உங்களுக்கு தெரியாமலும் தமிழ்மணத்தில் பல நடக்கும் நண்பரே. உதாரணம் போதுமா?!
மணிவண்ணன் அண்ணா,
அருமையான விளக்கம். நன்றிங்கண்ணா?
‘என் பேரை ஏன் இழுக்கறே’ன்னு சொல்ற ஆளே அனாவசியமா சம்பந்தமில்லாம என் பேர இழுத்திருக்காருங்கிறேன், ஆமான்னும் உங்களுக்கே தெரியுது, உங்க பதிலும் அதை உறுதிப்ப்டுத்துது, ஆனாலும் அதுக்கு உப்பு புளி போட்டு விளக்கிட்டு… என்னமோ போங்க!
செல்வராஜுக்குச் சொல்லப்பட்டாலுங்கூட, மேலே பதில் அளித்தவன் நான் என்ற அளவிலே பதிலளிக்கக் கடப்பாடுள்ளேன்
1. உங்கள் இடுகைக்கள் இரண்டு தமிழ்மணத்திலே இவ்வாண்டு தோன்றியது உண்மை. அது தோன்றக் காரணமேதான் மேலே நான் கூறிய காரணம்.
2. தமிழ்மணம் உங்களை விலக்கியதா, நீங்களாகவே விலகினீர்களா என்று நான் ஏதேனும் சொல்லியிருக்கிறேனா.. “Go and refer the thamizmaNam blogS for the reasons - HOW, WHEN & WHY.”
நீங்கள் தமிழ்மணம் பதிவிலே தேடிப்பார்த்தால், நான் சொன்னதைக் காணலாம். நீங்களே விலக்கும்படி கேட்டாலும் போய் யாராவது தரவுத்தளத்திலிருந்து நீக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலேதான் தமிழ்மணம் இருக்கின்றது. அதுதான் “the basic fact is mayavaraththan’s blog was removed long time back”
உங்கள் பதிவினைச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதனை நீக்கியதும் நானேதான். அதற்கான காரணமாக, மேற்கூறிய தமிழ்மணத்தின் இடுகையின் வலைச்சுட்டியை சேர்க்கமுடியாது என்று சொன்ன அஞ்சலிலிருக்கும் நீங்கள் சொல்லும் வரிகளின் பின்னால் தந்திருந்ததாக நினைவு.
வேண்டாம் என்று விலகிப்போனவர்களை யார் சேர்க்கவிரும்பினாலும், விண்ணப்பிக்கலாம். சேர்த்தபின்னால், ஏன் சேர்த்துவிட்டாய் என்று எதற்குச் சிக்கல்? இதேபோல, விலகும் விலக்கிய பலருடைய பெயர்களிலுமேதான் அடுத்தநிமிடமே சேர்க்கச்சொல்லி விண்ணப்பம் வருகிறது. சரியாக யார் கேட்கிறார் என்று தெரியாதவகையிலே அப்படியாகத்தான் பதில் சொல்லமுடியும். என்னைத் தவிர, அனுமதித்தவர் சக சேர்ப்பாளராகவிருந்தாலும், நான் உங்களைக் கழற்றியிருப்பேன். சரி நான்தான் உங்களைக் கழற்றினேன் / சேர்க்கவிரும்பவில்லை.
தமிழ்மணத்திலே உள்ளே போய்த் தேடிப் பார்த்து நேரகாலத்துடன் விளக்கம் தரும் தேவையும் உரிமையும் தார்மீகரீதியிலே நான் ஒதுங்கிக்கொண்டவுடன் இப்போது எனக்கு இல்லை.
யாராவது கழற்றியிருப்பீர்கள் உங்களை / அனுமதிக்கவில்லை உங்களை என்று கருதினால், நான்தான் அக்காரியத்தினை மேலே சொன்ன காரணங்களுக்காகச் செய்தேன். இப்போது தெளிவாகியிருந்தால், மகிழ்ச்சி.
Thanks Ramanidharan.
I’ve received 2 emails from Thamizmanam on this issue and I didnt got any info on the mail. Even after the first mail out of curiousity I’ve asked you back in email what may be the reason. But for that also I didnt received any reply.
OK.
So tell me the reason why my blog alone specified in the code as I showed in the google cache page and not the others?
Any particular reason?!
மாயவரத்தான், உங்கள் மதிப்பிற்கு நன்றி. ஆனால், ஏதோ ஒரு பிழைச் செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்மணம் நிரல் முழுக்கத் தெரிந்துவிட்டது போல் அவசரத்தில் முன்முடிபுகளுக்கு வரவேண்டாம். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் பதிவு விலக்கம், சேர்த்தல், முதலியன குறித்து விவாதிக்கப்பட்டது எனக்கு நினைவில் உள்ளது. அவசரத் தேடலில் மே 2007 வாக்கில் என்று கால நேரமும் சொல்ல முடியும் என்னால். நீங்களாகத் தான் விலகிக் கொண்டீர்கள் என்பதையும் வேண்டுமானால் இங்கு பதிவு செய்து வைக்கிறேன். ஆனால், விலகல் எப்படி இருந்தாலும், மேலே இரமணிதரன் சொன்னது போல், தரவுதளத்தில், நிரலில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். அது செய்பவரைப் பொருத்தும், திறனைப் பொருத்தும், எங்கே எப்படிச் செய்யப் படுகிறது என்பது மாறுபடும். மேலும் நிர்வாக முடிவு எடுப்பவர்களுக்கு நிரல் மாற்றங்கள் தெரிய வேண்டும் என்னும் அவசியம் இல்லை.
//என்னைத் தவிர, அனுமதித்தவர் சக சேர்ப்பாளராகவிருந்தாலும், நான் உங்களைக் கழற்றியிருப்பேன். சரி நான்தான் உங்களைக் கழற்றினேன் / சேர்க்கவிரும்பவில்லை//
Kool man,
This is what everyone is expecting from you.
So atlast, you’ve accepted that itz all by YOU only and itz not a team decision as you people explained in these days.
(Thanks Nanbar Selvaraj for allow him to display this truth to the tamil blogdom through your blog)
Not for publishing.
Thanks Mr. Selvaraj,
I didnt talk the issue on that mistake happend in May 2007. Actually I was not concentrated in Tamil blogs during that period. Recently about 3,4 months back while I’ve started rewriting in the blogs, it has happend. Someone has added my blog in tamilmanam and it was shown in ‘Waiting list’ atleast for 1 week. And then it got rejected and I’ve received a mail saying ‘Reasons below’ but no reasons on it.
Then only I’ve sent a mail to Thamizmanam and no reply after that.
Now, y’day’s error show my nick along with ‘Anonymous’
There were lot and lot of people who left Thamizmanam either by their own interest or forced by Thamizmanam or kicked out by TM.
But why not all their names / blogs but only mine? This is my question.
So you are saying this is also a policy decision or each and everyone in TM Admin knows this?!
Oh Ok.. I don’t want to take this issue too serious in this blog as this may in no way related to Nanbar Selvaraj, or this may disturb him. I know he don’t have that much time nowadays even to contribute on his own bog. Thatz why in my earlier message I put ‘Not for publishing’.
Thanks.
மாயவரத்தான், நன்றி. இதுவே உங்களுக்கான கடைசி பதிலும். வேண்டுமென்றே வஞ்சிக்கப் பட்டோம் என்பது போன்ற முன்முடிபுகளோடு நீங்கள் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனை மாற்ற என்னால் முடியாது. நீங்கள் குறிப்பிட்ட நிரல் புதிதாகச் சேர்த்த ம-திரட்டி என்பது. அங்கு நீக்கச் சொல்லிய பதிவர்களின் மறுமொழிகள் தோன்றினால் ஏன் திரட்டுகிறாய் என்னும் கேள்வி எழ வாய்ப்பிருக்கிறதே என்பதால் வடிக்கப்பட்டிருக்கலாம்.
நீங்களாக விலகக் கேட்ட பின் யாரோ நண்பர் இணைக்கச் சொல்வதால் இணைத்திருந்தால், அன்று வந்து நான் சொல்லாமல் ஏன் இணைத்தீர் என்று நீங்கள் கேட்டிருக்க வாய்ப்புண்டு தானே. (நீங்கள் அப்படிக் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயம் அல்லவா?). அதனால் உங்களை(யும் பிறரையும்) யாரோ சமர்ப்பித்ததால் சேர்க்க வேண்டாம் என்பதும் அனைவரது முடிவும் தான்.
வளர், அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், புரிந்து கொண்டமைக்கு நன்றி. தமிழ்மணம் அறிவிப்பு வந்தபின்னும் சூடான எதிர்வினையாற்றியது வருத்தம் தந்தது (யார் எப்போது எதிர்வினையாற்றியது என்கிற கால நிலை பற்றி உறுதியாகத் தெரியாததால் இதில் நீங்கள் சேர்த்தி இல்லை என்றால் மன்னிக்க). இனி வருங்காலத்திலேனும் இது போன்ற நிகழ்வுகள் குறைந்து போக வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன். இவ்வித விளக்கங்கள் தேவைப்படாததாக இருக்க வேண்டும் என்பது என் அவா. தமிழ்மணம் நண்பர்கள் பதிவுகளில் எழுதுவது குறைந்தும் இல்லாமலும் போனதாலும் எங்களைப் பற்றிய அறிதலும் நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டதோ என்று தான் தோன்றுகிறது.
அகில், உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இது ஒரு விளக்கப் பதிவு மட்டுமே. மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. பதிவுலகின் அமைதி கருதியும் எங்களின் நிம்மதி கருதியும் இவை தேவை இல்லை என்று சிலர் கருதினாலும் (இளா, கேட்கிறதா
), எழுதத் தோன்றியது. மோகன் தாஸ் அழகாகச் சொன்னார். அதற்கு அவருக்கு நன்றி. (தேவைகளின் தேவையைத் தேவைகள் தான் நிர்ணயக்கின்றன).
அதோடு நீங்கள் சொன்ன SFW போன்ற ஒரு முறை தான் தற்போதைய மாற்றம். முதல் பக்கத்தில் வடிகட்டினாலும், உட்பக்கங்களில் எந்த மாறுதலும் இன்றி அவை வெளி வருகின்றன. வேறு வழிகளும் இருக்கலாம். யோசிப்போம்.
வெண்பூ, இரமணிதரன் பின்னூட்டம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு வலைப்பதிவராக அவரது தனிப்பட்ட கருத்து. தமிழ்மணம் நிர்வாகத்தில் இருப்பதாலேயே அவருடைய கருத்துச் சுதந்திரத்தில் பிற நிர்வாகிகள் தலையிட முடியாது. அவர் அதனை எழுதிய பதிவின் சொந்தக்காரருக்கே அதனை மட்டுறுத்தவும் விட்டுவிடவும் உரிமை உண்டு. யோசித்துப் பாருங்கள்.
அவரளவிற்கு ஒரு வேளை உங்கள் தலையும் உருட்டப்பட்டிருந்தால் நீங்களும் அவ்வாறே எதிர்வினையாற்றியிருக்கக் கூடும். தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும், நிர்வாகப் பொறுப்புக்களையும் மிக்க மிக்கக் கவனத்துடனும் கண்ணியத்துடனும் கலக்காமல் வைத்திருந்தார் என்பதிலே அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு.
இங்கே நடக்கின்ற தனிமனித ஈகோ யுத்தங்கள் மிகுந்த எரிச்சலை கொடுக்கிறது .பொது நன்மை பயக்கும் காரியங்கள் தொடர்ந்து நடைபெறா வண்ணம் சிதைப்பதிலும் ,அவ்வாறு செயல்படுவோரை எந்த வகையிலாவது அயர்ச்சியடைய செய்வதிலும் தமிழர்களை மிஞ்ச யாருமில்லை .கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்துக்களில் பொறுப்பாக ஒரு வேலையை கொடுத்தால் செயல்படுத்த தெரியாத வாய் சொல்லில் வீரர்கள் கேள்வி கேட்பதற்கு மட்டும் தண்ணியடித்து விட்டு முதல் ஆளாய் வந்து உட்கார்ந்து ‘கேட்டு விட்டேன் பார் ..எவனும் பதில் சொல்ல முடியவில்லை ‘ என்று சுய பிரசங்கம் செய்வதைப் போல சில பேருடைய சுய பிரதாபங்கள் சகிக்க முடியவில்லை .
ராஜ் நடராஜன், வசந்த், மலைநாடான், ஜோ, மணிவண்ணன், பிற தமிழ்மண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழன், நீங்கள் சொல்லியிருப்பதில் சற்றுக் குழப்பம். எல்லோரையும் சேர்த்துக் கொள்வது என்று யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்போது யாரையும் நீக்கவில்லை. முன்பு நீக்கியவர்களைப் பற்றிச் சொல்வீர்களானால், அது Ideal நிலை எனினும் யதார்த்தமாய்ப் பார்த்தால் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் பிற வழிகளும் ஒரு வகையில் சாத்தியம் என்றாலும் தற்போதைய நிலையில் அதனை முயன்று பார்க்கும் நேரமும் சக்தியும் யாருக்கும் இல்லை என்றே சொல்லுவேன்.
செல்லாவிற்கு:
உங்கள் எழுத்தின் சத்தங்களை மட்டும் வைத்துப் பார்க்கையில் உங்கள் மீதான நன்மதிப்பு எதுவும் எனக்கில்லை. அதைப் பற்றி நீங்களும் கவலைப்படப் போவதில்லையாய் இருக்கலாம். சரி, உங்கள் உலகம் உங்களுக்கு, என்/எங்கள் உலகம் எங்களுக்கு என்று இருந்து வந்திருக்கிறேன். இருப்பினும், அந்த வெற்றுச் சத்தங்கள் என்/எங்கள் நேரத்தை உறிஞ்சுவதாகவும் தமிழ்மணச் சூழலைக் கெடுப்பதாகவும் இருந்த ஒரு காலத்தில் உங்கள் பதிவையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த பலரில் நானும் ஒருவன். இதற்கான விளக்கத்தைத் தேடி ஏன் பெயரிலியிடமும் சுந்தரமூர்த்தியிடமும் பாடாய்ப் படுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. அதுசரி. அது பற்றி எனக்குக் கவலையும் இல்லை. என் மடலின் பகுதி:
“Remove Osai Chella too and let us use this opportunity to be firm in dealing with these kind of bloggers. It is one thing to support freedom of speech but completely different to over-tolerate rubbishness and direct insults.”
தமிழ்மணத்தில் இருந்து நீக்கிய பிறகு ஒரு பதிவை இட்டு, “என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவைத் திரட்டியில் இருந்து விலக்கியதற்கு நன்றி” என்று ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டீர்கள். அதனைப் பெரிது படுத்த வேண்டாம் என்றும், சூழல் அமைதி வேண்டியும் அது பற்றி வெளியில் நாங்கள் ஏதும் வைக்கவில்லை. இருப்பினும், உங்கள் பதிவைப் படித்த பலரைப் போலச் சில நிர்வாகிகளும் உங்கள் வேண்டுகோளால் தான் திரட்டியில் இருந்து உங்களை நீக்கியதாக எண்ணியிருக்க முழுச் சாத்தியம் இருக்கிறது. பெயரிலி, சுந்தரமூர்த்தி இருவரின் நிலைப்பாடுகளுக்கும் இது தான் காரணம்.
இப்போதும் நீக்கப் பட்ட உங்களைப் பின்வழியாய் வந்திருப்பதை இன்னும் ஏன் நீக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று நிர்வாகக் குழுவிற்கு என் பரிந்துரையை அனுப்பப் போகிறேன். உங்கள் சார்பில் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்லிக் கொள்ளவும். அப்படி என் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு நீக்க முடிவு செய்தால், வேறு பெயர்களில் நீங்கள் வந்து கொண்டே இருக்கலாம். அதைத் தடுக்க முடியாது. ஆனால், அவ்வாறு தான் நான் செய்வேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், உங்களுக்கு மேலும் சொல்வதற்கும் செய்வதற்கும் ஒன்றுமில்லை. எல்லா வகை மனிதர்களையும் அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு பாடமாய் அது அமைந்துவிட்டுப் போகட்டும்.
இதைவிடப் பெரிய ஆபத்து பதிவர் மனதில் பயத்தை விதைப்பது . ஒரு திரட்டி போனால் இன்னொரு திரட்டி மன்னிக்கவும் தட்டி இருக்கிறது. மற்ற தட்டிகள் பொதுக்குழு செயற்குழு போட்டு அரசியல் செய்வதில்லை. போஸ்டர்கள் அரசியல் செய்வதில் ஞாயம் இருக்கு. தட்டிகள் அரசியல் செய்தால் இப்படித்தான் இருக்கும். அது ஞாபகமில்லை, இது ஞாபகமில்லை, அவர் அயோக்கியன், இவன் மொக்கை போமா, பதிவுகள் சாக்கடை, நாங்கள் சாக்கடையை ஊரெங்கும் வினியோகிக்கிறோம் என்றெல்லாம் பிதற்றல் தேவையா? மற்றபடி நீங்கள் தடுப்பது ஒரு செல்லாவை வேண்டுமானால் சாத்தியம். இணையம் பலநூறு செல்லாக்களை உற்பத்திசெய்யலாம். செய்யும். நானே சிலபத்து அவதாரங்களில் இருக்கலாம்! So beware of what porous medium you are managing! Cheers! Ban all those who asked simple questions and instill FUDs! All the best.
நண்பர் செல்வராஜ்,
விளக்கத்துக்கு நன்றி. முன்பே சொல்லிவிட்டு செய்திருக்கலாம் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
‘தமிழ்மண’ நிர்வாகிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், அவஸ்தைகளையும், சிக்கல்களையும் உணர முடிகிறது. அலுவலக, வீட்டு நெருக்கடிகளை கடந்து பதிவுகளை எழுதிவரும் பதிவர்களை போலவே நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகிகளும் உழைக்க வேண்டியிருக்கிறது. சொல்லப் போனால் இன்னும் அதிகமாகவே. இதை யாராலும் மறுக்க முடியாது.
புரிந்து கொள்ளாமல் பதிவர்கள் நிர்வாகத்தை குற்றம்சாட்டும்போது, நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ, எப்படியான மனவேதனையை அனுபவிக்கிறார்களோ - அதேபோல்தான் புரிந்து கொள்ள வழிவகுக்காமல் நிர்வாகம் செயல்படும்போது பதிவர்களின் நிலையும் இருக்கும் என்பதை தாங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
தமிழக - புதுவை சுற்றுப்பயணத்தில் பதிவர்களின் ஆலோசனைகளை செவி கொடுத்து கேட்ட நிர்வாகம், அதில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆலோசனைகளை செயல்படுத்தலாம் என முடிவு எடுக்க சில நாட்களேனும் ஆகியிருக்கும். அத்துடன் கூட ஒருநாள் எடுத்துக் கொண்டிருக்கலாம். அறிவிப்பை வெளியிட்ட பின் செயலில் இறங்கியிருந்தால் மொத்த பதிவர்களும் நிர்வாகத்துக்கு மாரலாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் உதவியிருப்பார்கள் அல்லவா?
பரஸ்பர புரிதல் இல்லாமல் போகும்போதுதான் வாக்குவாதங்களும், சர்சைகளும் தலைத்தூக்கும்.
ஈகோவை தாண்டி படமெடுக்கும் பயத்தையும், அவமானத்தையும் விவரிக்க பதிவர்களுக்கு சில பதிவுகளும், பல பின்னூட்டங்களும் தேவைப்பட்டன.
இப்போது நிர்வாகத் தரப்பு பதிவர்களுக்கு புரிகிறது. அதேபோல் பதிவர்கள் தரப்பை நிர்வாகமும் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்.
நண்பர் பெயரிலியின் சொல், வார்த்தை, வாக்கியங்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் காயங்களையும், வலிகளையும் உணர முடிகிறது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்து தாக்கப்பட்டும், கல்லடிபட்டும் வருபவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ, அப்படித்தான் அவரும் ரியாக்ட் செய்கிறார்.
இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத்தான் இப்படியான விவாதங்களும், உரையாடல்களும் ‘தமிழ்மணத்தில்’ நடைபெற்றதோ?
மீண்டும் சொல்கிறேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்லது செல்லா. உங்கள் வழியில் செழித்தோங்க வாழ்த்துக்கள். ஆனால், பதிவர் மனதில் பயத்தை விதைக்கிறோம், கேள்வி கேட்டால் அதிகாரம் செய்கிறோம் என்றெல்லாம் பொய்யுரைக்க வேண்டாம். இந்த என் இடுகையும் அதற்கான பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள். இனி வரும் நாட்களிலும் சிறப்பான முறையில் இயங்க முயல்வோம். பிற திரட்டிகள், அவற்றின் அரசியல்கள், செயல்பாடுகள் குறித்தும் எங்களுக்குக் கவலை இல்லை. மாறாக, தமிழ், தமிழர், தமிழ்க்கணிமை வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆக்க பூர்வமான செயல்களை அவை செய்கின்றன என்றால் எங்களின் முழு மன ஆதரவும் அவற்றிற்கு இருக்கும்.
தமிழ்மணத்திற்கென்று தமிழ் இணைய வரலாற்றில் ஒரு இடம் உண்டு.
பைத்தியக்காரன், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. அறிவித்த பின் செயலாற்றுவது பற்றியும் இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன். இருப்பினும், இதில் இருந்து நாங்கள் எடுத்துக் கொள்ளவும் சில பாடங்கள் உண்டு. நீங்கள் சொல்வதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் சொல்லாமல் விட்ட சிக்கல்களும் உண்டு. பல்வேறு இடங்களில் (நாடுகளில்) சிதறி இருக்கிற ஒரு குழுவினர் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் வழியே உரையாடிச் செயல்பட்டு நிர்வகித்து வருகிறோம். சிலரை நான் பார்த்தது கூடக் கிடையாது. ஏன், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று படத்தைக் கூடப் பார்த்தில்லை. தவிர, வாழ்வின் வெவ்வேறு நிலையில் சுயவாழ்வு அழுத்தங்கள் காரணமாய் எல்லோராலும் எல்லா நேரங்களிலும் செயல்பட முடியாத சூழ்நிலைகள். விடுப்புக்கள், பயணங்கள் (இது வேனிற்காலம் - பலர் நீண்ட விடுப்பில் ஊருக்கோ பயணத்திற்கோ சென்று விடுதல் இயற்கை). இவை தவிரப் பிற (பெட்னா போன்ற) பொதுக்காரியங்களில் ஈடுபாடுகள். இவற்றின் இடையே நீங்கள் சொன்னது போல் முதலில் சொல்லிவிட்டுப் பிறகு மாற்றங்களை ஏற்படுத்துதல் என்பது எல்லாச் சமயங்களிலும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. வருங்காலத்தில் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முயல்வோம்.
புரிந்துகொள்ளலுக்கு நன்றி.
//வெண்பூ, இரமணிதரன் பின்னூட்டம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு வலைப்பதிவராக அவரது தனிப்பட்ட கருத்து. தமிழ்மணம் நிர்வாகத்தில் இருப்பதாலேயே அவருடைய கருத்துச் சுதந்திரத்தில் பிற நிர்வாகிகள் தலையிட முடியாது. அவர் அதனை எழுதிய பதிவின் சொந்தக்காரருக்கே அதனை மட்டுறுத்தவும் விட்டுவிடவும் உரிமை உண்டு. யோசித்துப் பாருங்கள்.
//
உண்மை..
// அவரளவிற்கு ஒரு வேளை உங்கள் தலையும் உருட்டப்பட்டிருந்தால் நீங்களும் அவ்வாறே எதிர்வினையாற்றியிருக்கக் கூடும்.//
ஒருவேளை இருக்கலாம்..
// தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும், நிர்வாகப் பொறுப்புக்களையும் மிக்க மிக்கக் கவனத்துடனும் கண்ணியத்துடனும் கலக்காமல் வைத்திருந்தார் என்பதிலே அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு.
//
உங்கள் கருத்துக்கு நானும் மதிப்பளிக்கிறேன்.
மேலே பைத்தியக்காரன் சொன்னதை நான் 100% வழிமொழிகிறேன். இந்த சர்ச்சையினால் திரட்டி மற்றும் பதிவர்களுக்கிடையேயான புரிதல் மேம்பட்டிருந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியே.
செல்வராஜ் அவர்களின் இடுகை திருப்தி அளிக்கிறது
எல்லோருமே செல்வராஜ் மாதிரியே இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
///காசி
வளர்மதி/அய்யனார்,
ஒருவன் தன்னை நிராபராதி என்று நிரூபிக்கும் வரை அவன் குற்றவாளி, உங்கள் கோர்ட்டில், அப்படித்தானே,
///
இதுபோன்ற கேள்விகளை அடுத்தவரைப் பார்த்து நாம் கேட்பதற்கு முன்னால் நம்மைப் பார்த்து நாமே ஒருமுறை கேட்டுக் கொள்வது நல்லது என்று ஈச்சமரத்து சித்தர் சமீபத்தில் கி.பி. 102ல் சொல்லியிருக்கிறார் என்று ‘கேயாஸ் தியரியும், சித்தர்களும்’ என்ற புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்
செல்வராஜ்,
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சில யோசனைகள்: (எந்த அளவு இவை சாத்தியம் என்பதை தமிழ்மண நிர்வாகிகளின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்)
1. இடுகைகளை சேர்க்கும் சன்னலில் ஒரு புதிய இடுகைகளை காட்டி, அதற்கு நேராக ஒரு செக் பாக்ஸ் வைக்கலாம். உதாரணமாக நான் ஒரு நகைச்சுவைப் பதிவும், ஒரு காமம் குறித்த பதிவும் எழுதியிருந்தால், நகைச்சுவைப் பதிவை மட்டும் தமிழ்மணத்தில் இணைக்க நினைக்கலாம். அதற்கு தற்போது வழியில்லை.
2. தமிழ்மணப் பதிவாளர்களுக்கு ஆப்சனல் லாகின் ஐடி கொடுக்கலாம். பொதுப் பிரிவில் வருபவை எல்லோரும் பார்க்க முடியும். மட்டுறுத்தப்பட்ட இடுகைகளைப் பார்ப்பதற்கு அவர் லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்தபின்னர் அவர் எந்த எந்த தலைப்புகளின் கீழ் உள்ளதை பார்க்க விரும்புகிறாரோ அதற்கு தகுந்தாற்போல கஸ்டமைஸ் செய்ய ஆப்சன் கொடுக்கலாம்.
3. தமிழ்மணத்தில் ஒரு இடுகை / பதிவரை நீக்குவது அல்லது ஒரு எச்சரிக்கைக் கொடுப்பது போன்றவற்றை தமிழ்மண நிர்வாகம் மட்டுமே செய்யாமல் பயனாளிகளில் ஒரு சிலரையும் கருத்து கேட்கலாம் (உதாரணமாக மிக அதிக அளவில் தமிழ்மணத்தை உபயோகிக்கும் 10 பேர்; இடுகை, மறுமொழி எண்ணிக்கையில்). இது தமிழ்மணம் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது என்பதை துடைத்தெறிய உதவும்.
நன்றி..
விரிவான விளக்கத்திற்கு நன்றி! நானும் சுந்திரின் இடுகை நீக்கப்பட்டதாக தவறான தகவலை பதிவு செய்திருந்தேன், அதற்காக வருந்துகிறேன்!
தமிழ்மணத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அதன் வாசிப்பாளர்களே(பயனர்கள்) இருக்கிறார்கள் என்கிற உங்கள் மற்றும் சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கங்களும் நன்றி!
எதிர்வரும் காலங்களில் இன்னும் தமிழ்மணம் என்கிற அமைப்பின் ஜனநாயக தன்மையை உறுதி செய்யும் வகையில் செயல்பட வாழ்த்துகள்!
பயனர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கும் முகமாக ஒவ்வொரு இடுகைக்கும் உங்கள் தளத்தின்(தமிழ்மணம்) வழியாக அணுகுபவர்களின் எண்ணிக்கையும் (இந்த எண்ணிக்கை ஏற்கனவே நீங்கள் சூடான இடுகைக்காக கணக்கிடுகிறீர்கள் தானே!), அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்ட இடுகைக்கு வந்த புகார்கள் இடையிலான சதவிகிதத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இடுகைகளை நீக்குதல் என்கிற முறையை தேர்ந்தெடுக்கலாம்!
இதன்மூலம் பதிவர்களுக்கு ஒரு கட்டுபாடு இருக்கும்! பயனாளர்களுக்கு தங்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை கூடும்!
நன்றி!
“போலியான புரட்சிவாதம், சுயநலத்தை பொது நலமெனும் பொதியில் சுருட்டி கூவிவிற்க தயங்காத வெட்கமின்மை, சந்தர்ப்பம் கிடைத்தால் கலவரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நெருப்பு வைக்கும் குழு அராஜகம் இவைகள் எங்கிருந்தும் முழுவீச்சோடு வரமுடியும் என்பதை ஒவ்வொரு நிகழ்வும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன”
தங்கமணி அவர்களே
இதற்கான அறிகுறிகள் முன்பும் இருந்தன. நீங்கள் கவனித்திருக்க
வில்லை அல்லது அவர்கள் அப்போது தமிழ்மண தீவிர விசுவாசிகளாக இருந்தார்கள் என்பதால் அதை குறித்து உங்களுக்கு கவலை இல்லாமல் இருந்திருக்கலாம். லக்கி லுக் தன்னை ‘தமிழ்மணத்தின் முரட்டுத் தொண்டன்’ என்று அறிவித்தார். இதே ஒசை செல்லா அன்று தமிழ்மணத்திற்கு ஆதரவாக இருந்தார்.
சுகுணா திவாகர் உட்பட தமிழ்மணத்திற்கு ஆதரவாக ஒரு கும்பலே
இருந்தது. அந்த கும்பல் அன்று பார்பனியத்தினை திட்டுவதாக
நாகரீகமற்று எழுதியது. பூங்காவிலும் அவர்கள் எழுதியவைகளுக்கு முக்கிய இடம் தரப்பட்டது. அப்போது அவர்களின் குறி தமிழ்மணத்தின் மீது இல்லை, அதனால் நீங்கள் அவர்கள் எழுதியது குறித்து கவலையுறவில்லை. இப்போது அவர்கள் தமிழ்மணத்தினை குறி வைக்கும் போது நீங்களே இவ்வாறு எழுதும் நிலை உருவாகிறது. தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று சும்மாவா சொன்னார்கள்.
இங்கே ஒரு பின்னூட்டம் இட்டிருந்ததாக நினைவு. ஒருவேளை மட்டுறுத்தல் செய்ய மறந்துவிட்டீர்களோ?
பதிவினை படித்தேன்…தெளிந்தேன்.
பின்னூட்டங்களை படித்து கிறுகிறுத்துப் போனேன்.
//நல்லது செல்லா. உங்கள் வழியில் செழித்தோங்க வாழ்த்துக்கள். ஆனால், பதிவர் மனதில் பயத்தை விதைக்கிறோம், கேள்வி கேட்டால் அதிகாரம் செய்கிறோம் என்றெல்லாம் பொய்யுரைக்க வேண்டாம். இந்த என் இடுகையும் அதற்கான பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்//
//Remove Osai Chella too and let us use this opportunity to be firm in dealing with these kind of bloggers.//
Remove Osai Chella too = so the topic was not me!! I am a mere addition ! ha ha!
// let us use this opportunity to be firm in dealing with these kind of bloggers //
So punish chella so that others should FEAR!!
Chella is removed / He went out = UNCERTAINITY
We wont say what went on in our almighty back office sanctum sanitarium of Tamilmanam ( unless kicked in the butt in the public!Lol! >>Dont take this too close too your heart.. my usual harmless touch at private parts! ;-)) = DOUBT
Dear Selvaraj Kanna, Am i reading in between your lines and spaces and even commas too much!!?
Ha ha.. anyhow i closed my blogposts and comments. Thanks for allowing me to know all those jacks of webdom! May be oneday ask your friend Peyarili about our online struggles for the Tamil Content/thought space in the cyber landscapes, like orkut. But for now it is time to relax with my fav lemon tea! Cheers to all of you at the high alters… till i surface once again in the next year! Yaatha yathaahi Dharmashya vellam konjam over bg music for the last line! So just a smilie! ;-). Enjoy the peace!
With regards
Osai Chella
நல்ல யோசனைகள் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இவையும் இன்ன பிறவும் அவ்வப்போது யோசித்திருக்கிறோம். இனியும் கருத்தில் கொள்வோம். காட்டுக்கு, தனிப் பயனர்/கடவு கொண்ட கணக்குகள் அமைக்கும் வேலையை அடுத்துச் செய்ய எண்ணம் இருந்தது. இருக்கிறது.
லக்கிலுக், அடடா, அதற்குள் என்ன அவசரம் உங்களுக்கு?
முதல் பின்னூட்டம் இட்ட போது மணியைப் பார்த்தீர்களா? இரவு இரண்டு மணிக்குத் தான் உறங்கச் சென்றேன். அதுவும் இன்றிச் சதா விழித்தே இருந்து மட்டுறுத்தல் செய்து கொண்டிருக்க முடியுமா? இத்தனைக்கும் என் பதிவில் எரிதத் தடுப்பிற்காக மட்டும் தான் மட்டுறுத்தல் இருக்கிறது. பெயர், மின்னஞ்சல் இருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவராயின் தானாகப் பின்னூட்டம் வெளிவரும். இது வேர்ட்பிரஸ்-இன் வசதி. சில சமயம் சரியாய் வேலை செய்யாதிருக்கலாம் (இன்னொரு முறை முயன்று, அவ்வாறின்றிப் போனால், கேள்வி கேட்பீர்களோ என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்பு
).
எரிதங்களைத் தவிர எல்லாப் பின்னூட்டங்களையும் வெளியிடுகிறேன். (போலிச்சமயத்தில் வந்த பின்னூட்டங்கள் எரிதக்கணக்கில் சேர்க்கிறேன்). காசியைப் பற்றி நீங்கள் நக்கலாகச் சொன்ன சில வார்த்தைகளுக்கா நான் மறைத்துவிடப் போகிறேன். அவர் இதை விடப் பல மடங்கு கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்தவர் என்பதாலும் அவரைக் காக்கும் அவசியம் எனக்கு இல்லை.
//இதுபோன்ற கேள்விகளை அடுத்தவரைப் பார்த்து நாம் கேட்பதற்கு முன்னால் நம்மைப் பார்த்து நாமே ஒருமுறை கேட்டுக் கொள்வது நல்லது என்று ஈச்சமரத்து சித்தர் சமீபத்தில் கி.பி. 102ல் சொல்லியிருக்கிறார் என்று ‘கேயாஸ் தியரியும், சித்தர்களும்’ என்ற புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்
//
படிச்சாச்சில்ல, முதல் படி தாண்டிட்டீங்க. கொஞ்சம் முயற்சி செய்து கடைப்பிடிக்கவும் ஆரம்பிச்சா அடுத்தபடியும் தாண்டிடலாம். தாண்டினவங்க சொல்றோம், நம்பணும்:P முயற்சி வெற்றியடைய அந்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்.:-)
செல்லாவிற்கு:
இதை வளர்த்துக் கொண்டே போக விருப்பம் இல்லை என்றாலும் சில தெளிவுகள். இதில் அச்சம், தடுமாற்றம், ஐயப்பாடு எதுவும் பதிவர்கள் அடைய வேண்டியதில்லை.
செல்லாவை முன்னரும் தமிழ்மணம் தான் நீக்கியது. அது தான் தோன்றித்தனமான செயல் அல்ல என்பது எல்லோருக்கும் இதுவரை தெளியாதிருந்தால், இப்போது தெளிவாக இருக்கும். அதனால் அச்சம் வேண்டியதில்லை. (Fear).
இப்போதும் நீக்கச் சொல்லிய என் பரிந்துரையை இதுவரை யாரும் எதிர்க்கவில்லை (நிர்வாகக்குழுவில்). ஆதரித்தே சில குரல்கள் எழும்பியுள்ளன. அதனால், இன்று மதியம் 12 மணியளவில் (அமெரிக்க நேரம்) உங்கள் பதிவு நீக்கப் படும். அதனால் தடுமாற்றம் வேண்டியதில்லை. (Uncertainty).
உட்குழு விவாதங்களைப் பொதுவில் வைக்கவில்லை என்பதால் உயர்ந்த பீடமாகக் கருதவேண்டும் என்பதும், அது பிறரிடம் ஐயப்பாட்டை விளைக்கிறது என்பதும் அபத்த வாதம். இதனை மேலும் விளக்க அவசியமில்லை. (Doubt).
>> Am i reading in between your lines and spaces and even commas too much!!? >>
Absolutely! And Unnecessarily!
சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் என்னிடம் அலட்ட வேண்டாம். ஒருவர் எத்தனை காலம் இணையத்தில் இருக்கிறார், எங்கெல்லாம் என்ன செய்திருக்கிறார் என்பதை வைத்து எதை எடைபோடச் சொல்கிறீர்கள்? என்னுடைய ஈகோவைத் தட்டிவிட்டுக் கொள்வது போலத் தோன்றினாலும், நேற்று வந்த ஆர்குட் போலின்றி, நான் உங்களுக்கும் இரமணிக்கும் முன்பிருந்தே இணையத்தில் இருக்கிறவன். DOS/Win3 மட்டுமே பிரதானமாய் இருந்த காலத்தில் இருந்தே கணினி/இணையத்தில் தமிழைப் புழங்கியவன். அதனால் உங்கள் வாலாட்டல்களுக்கு வேறிடம் பாருங்கள். Just go away, Chella.
(பிறருக்கு: கடைசிப் பத்தியை நான் எழுதாமலே கூட விட்டிருக்கலாம் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்).
விரிவான விளக்கங்களுக்கு நன்றி.
இதைக்கூட இங்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் அல்லவே. இருந்தாலும் இங்கு ஒருவருமே நேர்மையானவர் என்று மார்தட்டி சொல்ல முடியாது.
தமிழ்மண நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்களில் எழுத்துக்களின் மூலம் மட்டுமே அவர்களது அறிமுகமும், அதனூடாக இன்னுமும் இருக்கின்ற மதிப்பும்…(பெயரிலி உட்பட)
அந்த சோ கால்டு அணுப்பாவை என்ற செல்லாவின் பதிவில் கூட பெயரிலி புதிய அலுவலுக்கு வாழ்த்து மட்டுமே சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டேன். அது வெளிவரவில்லை அது செல்லாவின் வழக்கம்.
இதுவரை நேரடியாக எவரும் என்னைப் பற்றி இங்கு கதைக்காவிட்டாலும் ஒரு காலத்தில் தமிழ்மணத்திற்கு ஆதவாக பதிவு எழுதியவர்களி நானும் ஒருவன் (2006) என நினைக்கிறேன். அதற்காக மட்டுமே இந்த இடைச்சொருகலும் கூட. மற்றவை பற்றி கதைக்க நேரமில்லை மேலும் என்னை நானே பொதுவில் நிறுத்தி தமிழ்மண நிர்வாகிகளை கேள்வி கேட்க தகுதியுமில்லை.
ஆனால் பெயரிலி நேர்மையானவர் அல்ல என்பது என்னுடைய கருத்து.
நன்றி.
Mayavarathaan’s blog submitted by him got approved and only one or two posts came in Thamizhmanam and after than none of his recent posts shows here.
He has got a mail from Thamizmanam that his blog is already added in Thamizmanam. Do you still says it is technical problem? Or all your Thamizmanam gang decided to block his blog?
Mayavarathaan knew how to leave Tamilmanam. So, he would know how to rejoin as well. Why are you (Name-aa mukkiyam) so worried?
(I am closing Comments for this post - won’t have access to reply for a while).