தீபாவளி 2008
Posted in வாழ்க்கை on Oct 27th, 2008
“தீபாவளியா? அது எப்பவோ வந்துட்டுப் போயிருச்சே”, என்று வீரப்பன் சத்திரத்துப் பேருந்து நிறுத்தத்தில் மூன்றாம் எண் நகரப் பேருந்து குறித்துப் பேசுவது போல, சலனமின்றிச் சென்றுவிட்ட புலம்பெயர் தீபாவளிகளும் பண்டிகைகளும் சில உண்டு. இந்திய, தமிழக மக்கள் நிறைய வசிக்கும் பெருநகர்க்குப் பெயர்ந்ததும், அதிகரித்த தொலைத்தொடர்பு, இணைய வசதிகளும் இப்போதெல்லாம் அப்படி முழுவதுமாய் மழுங்கடித்து விடுவதில்லை. ஏதோ ஒரு வழியில் ‘இந்த வாரம் தீபாவளி’ என்று முன்னதாகவே தகவல் வந்துவிடுகிறது. இருப்பினும் சக்கரத்துச் சுழற்சி போன்ற வாழ்வு […]