இனிய தோழி சுனந்தாவிற்கு…! – முன்னுரை –
Posted in கடிதங்கள் on Jun 24th, 1993
முதல் பாகம் / முன்னுரை ‘தம்பிக்கு’, ‘தங்கைக்கு’, என்ற தலைப்பில் மு.வ. அவர்கள் எழுதிய கடித இலக்கியங்களால் கவரப்பட்டும், கடிதங்கள் எழுதுவதன் பால்எனக்கு இருந்த/இருக்கின்ற ஆர்வத்தினாலும், நானும் ஒரு கடித இலக்கியம் எழுத முயற்சிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.என்னுள் இருந்த அந்த அக்கினிக் குஞ்சு வளர்ந்து வளர்ந்து ஒருநாள் திடீரென்று ஒரு ஒளிப் பிழம்பாய் மாற, என் ‘இனிய தோழிசுனந்தாவிற்கு’ கடிதம் உருவானது.