• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments

என்னைப் பற்றி

Jun 5th, 2005 by இரா. செல்வராசு

என் பெயர் இரா. செல்வராசு.

தமிழகத்தின் எண்ணற்ற கிராமங்களில் ஒன்றில் பிறந்தாலும், வளர்ந்ததும் பள்ளிப் பருவமும் முழுதும் ஈரோடு என்னும் சிறு நகரில்.

சென்னையில் வேதிப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டமும், அதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களும் பெற்று, இப்போது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வு+பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். வேதிப் பொறியியல் துறையில் செயற்கட்டுறுத்தல் (Process Control), போல்மமாக்கல் (Modeling), உகந்தப்படுத்தல் (Optimization) பிரிவில் எனது பணி. கணினித் துறையில் ஆர்வமும் ஈடுபாடும் என்றும் உண்டு.

தற்போது அமெரிக்காவில் தெக்சாசு மாநிலத்தில் இருப்பிடம். தமிழ் எழுத்தில் என்றும் ஓர் ஈடுபாடு உண்டு. என் எண்ணக் கிறுக்கல்கள் என இங்கே வலைப்பதிந்து வந்தேன். அது இப்போது விரிவெளித் தடங்கள் என வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவராகவும், தமிழ்மணத்தை ஏற்று நடத்தும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறேன்.

என்னைத் தொடர்பு கொள்ள மின்முகவரி:
mail __at__ selvaraj __dot__ us

வலைப்பதிவினுள் மீள

12 Responses to “என்னைப் பற்றி”

  1. on 14 Feb 2009 at 12:19 pm1thanu

    Hello Selvaraj
    How are u.? saw ur new blog, when voting n tamilmanam. convey my regards to wife and children
    Thanu

  2. on 02 Nov 2009 at 2:06 am2தேவராஜன்

    அருமையான தடய பதிவுகள்
    வாழ்த்துக்கள்!

  3. on 07 Feb 2010 at 3:51 am3Ravi

    Your blog and tweets are impressive.

    Compliments to you

  4. on 13 Feb 2010 at 2:15 pm4முகமதலி ஜின்னா

    எல்லாம் அருமையான கட்டுரை தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா.

    I have more friends in Erode. Dr. Amanullah and his brother-in-law k.K.A.Jafer Ali who is my best friend and college mate.

    Your service to the people must be appreciated.

    With regards,
    அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா.

    please visit:-தொடுப்பகம் பாருங்கள்

    * NIDUR SEASONS
    * nidurseasons.com
    * seasons nidur (wordpress)
    * SEASONS–NIDURs
    * SEASONS-NIDUR
    * seasonsali
    * seasonsnidur
    * seasonsnidursite

  5. on 13 Feb 2010 at 11:36 pm5முகமதலி ஜின்னா

    sir,

    I will be thankful to you if you are kind enough to allow me to
    republish some of your articles which has been published in your site http://blog.selvaraj.us. I am waiting for your favourable reply.

    With regards,

    please visit:-தொடுப்பகம் பாருங்கள்
    #
    Blogroll

    * நீடூர் சீசன்ஸ் (ப்ளாக்)NIDUR SEASONS
    * நீடூர் சீசன்ஸ் Nidur Seasons.com
    * SEASONS–NIDURs
    * SEASONS-NIDUR
    * seasonsali
    * seasonsali
    * SEASONSNIDUR
    * SEASONSNIDUR
    * seasonsnidur
    * seasonsnidursite

  6. on 12 Mar 2010 at 10:24 pm6ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.

    வணக்கம் திரு செல்வராஜ்

    1. உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள தாங்கள் அனுப்பிய இந்த வலைதள முகவரி முதல் ஆச்சரியம்.

    2. எம்.எஸ்.உதயமூர்த்தி போலவே அமெரிக்காவில் வாழ்ந்தாலும் எண்ணங்கள் முழுவதும் தமிழர் தமிழ் மொழி மேல் இருப்பது அடுத்த ஆச்சரியம்.
    3. பல முறை தமிழ்மணத்தில் வரும் பதில் கடிதங்கள் மூலம் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகள் இன்றளவில் எனக்கு ஒரு விதமான வெட்கத்தையும் தயக்கத்தையும் தான் உருவாக்கிக் கொண்டுருக்கிறது. இந்த அளவிற்கு ஆழ்ந்த புரிந்துணர்வுடன் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டுருக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
    4. கரிசல்காட்டு கதைகள் படிக்கும் போது அந்த இடத்திற்குள் நாம் சென்றது போல் உணர்வுகள் முழுமையாக மாறியிருக்கும். உங்கள் இடுகையின் எழுத்து மற்றும தள வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.
    5. ஈரோடு என்றாலே சற்று அதிக அறிவை தந்து விடுமோ?

    புரிந்துணர்வுடன் உங்களை தொடரும்
    ஜோதி கணேசன்
    தேவியர் இல்லம் திருப்பூர்

  7. on 27 Jun 2010 at 4:40 am7ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.

    ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கும் போல. இன்று காலை வலைச்சரம் சீனா அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்த அழைப்பு விடுக்க முதலில் யோசித்தது இந்த வலை தளமே. காரணம் நீங்களே விரைவில் புரிந்து கொள்வீர். பின்னூட்டத்தில் பெயரைப் பார்த்ததும் சிறிது குழப்பம். காரணம் நீங்கள் இதுவரைக்கும் எங்கும் பின்னூட்டம் இட்டு பார்த்தது இல்லை. உங்கள் முகவரியைத் தொடர்ந்து உள்ளே வந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. எவருக்கோ? எப்போழுதோ? என்னுடைய எழுத்துக்கள் தேவையாய் இருக்கும் என்று ஒரே நோக்கத்தில் எழுதிக்கொண்டுருப்பது உங்களுக்குக்கூட பிடித்தமானதாய் இருக்கிறது என்ற இந்த பின்னூட்டம் மூலம் கண்டதில் அதிக மகிழ்ச்சி.

  8. on 09 Aug 2010 at 5:03 am8ரகுநாதன்

    நீங்களும் விக்கிப்பீடியரா…மகிழ்ச்சி…

  9. on 13 Aug 2010 at 10:45 am9ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.

    ஊரில் இருந்தால் பேசக்கூடாதா?

  10. on 01 Sep 2010 at 3:10 am10பாபுராஜ்

    வாழ்த்துக்கள் செல்வராஜ். நல்ல நல்ல விசயங்களை பற்றி எழுதுங்க. எங்களுக்கும் புது விசயங்கள் சொல்லுங்க. உங்க தளத்தின் நல்ல விசயங்களை சுட்டு எங்கள் தலத்தில் போட முயற்சி செய்யறோம். வாழ்த்துக்கள்
    கோயம்புத்தூர்
    http://www.subamatrimonial.com
    http://www.softeccomputer.com

  11. on 11 Oct 2010 at 1:10 am11துரை. வேலுமணி

    வணக்கம், தங்களை பற்றி தெரிந்து கொண்டதில் எமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு. காரணம் சொல்ல தெரியவில்லை. நன்றி.

    வாழ்த்துக்களுடன்
    துரை.வேலுமணி, கோவை

  12. on 23 Jan 2016 at 9:43 am12மு.தணிகாசலம், கரூர்.

    “எண்ணக் கிறுக்கல்கள்” ன்னு மாப்ள நீங்க(ள்) சொல்றது தன்னடக்கம்தானே?

    என்னதான் இருந்தாலும், நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணம் மற்றும் உணர்வு அலைகளை சற்றும் பிசகாமல் அப்படியே அடுத்தவர்கள் மனதுக்குள் செலுத்துவது என்பது எழுத்துக் கலை.

    இன்னும் சொல்லப்போனால் எழுத்துக்களை எண்ணங்களாக வடிக்கும் கலை.

    கிறுக்கப்படும் பலவிதமான கோடுகள் ஒருங்கிணைந்து ஓர் ஒழுங்குள்ள ஓவியமாக ஆகுமானால் அந்த கோடுகளை கிறுக்கியவர் ஓர் ஓவியர்.