இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ராக்சுபரி தத்துவம்

August 29th, 2006 · 6 Comments

ராக்சுபரி தத்துவம் (தமிழில்: செல்வராஜ்)

  • ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாகவும், தம் திறமைகளில், ஆர்வங்களில், அனுபவத்தில் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபட்டவர்களாகவும் இருக்கலாம்.
  • குழந்தைகளின் தொடர் வளர்ச்சிக்கு அவர்களுக்கென்று தேவைகள் இருக்கின்றன என்பது இனங்கண்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இத்தேவைகளுள் உடல் நலத்திற்கானதும், அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை, வெற்றி, சக வகுப்பினரினதும் ஆசிரியர்களினதுமான கவனிப்பு எல்லாம் அடக்கம்.

D2 Medal

  • குழந்தைகளின் நல் மனநலத்திற்கும், அவர்களுக்கு ஒரு சாதனையுணர்ச்சியை உண்டாக்குவதற்கும் சாதகமான ஒரு கட்டமைப்பு அவசியம்.
  • பல குழந்தைகளுள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான குறிக்கோள்களை எய்துவதற்கு வெவ்வேறு காலகட்டம் ஆகலாம்.
  • குழந்தைகள் பாராட்டுரைக்கும் ஊக்குவிப்புக்கும் சரியான முறையில் தூண்டப் பெறுவர்.

D2 Cartwheel

  • ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொதிவான கற்கும் சூழலில் சுயவளர்ச்சியனுபவம் பெறவேண்டும். அச்சூழல் கலை, இசை, இலக்கியம், விளையாட்டு, உடல்நலக் கல்வி இவற்றின் வெளிப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் மக்களாட்சியில் தனது குடியுரிமைக்கான பொறுப்புணர்ச்சியும், உரிமைகளும், தனது குமுகாயம், தேயம், உலகம் பற்றிய பெரும் புரிந்துணர்வும் தேவை.

N2 Art

  • குழந்தைகள் தம்மைத் தாமே நன்கு புரிந்து கொள்ளவும், பிற குழந்தைகளுடனும் பெரியவர்களுடனுமான தமது உறவையும் நன்கு புரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

* * * *
இது எங்கள் புறநகர்ப் பகுதியின் நான்கு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான ‘ராக்சுபரி’யின் மாணவர் கையேட்டில் (Roxbury Philosophy என்று) இருக்கும் ஒரு பக்கத்தின் தமிழாக்கம்.

தலைவாரிப் புதுத்துணி அணிந்து, தோட்பை சுமந்து, புன்னகையோடு தன் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்ற வாரம் முதல் செல்ல ஆரம்பித்திருக்கிறார் என் சின்ன மகள்.

Bus to School

முதல்நாள் வழியனுப்பச் சென்ற என்னிடம் கையசைத்து ஏறும் முன் அவர் சொன்னது:
“‘I am so excited, I am not even scared appaa!”

Tags: கண்மணிகள்

6 responses so far ↓

  • 1 நிர்மல் // Aug 29, 2006 at 11:47 pm

    அருமையான குறிக்கோள்கள். சிறு பிள்ளைகளை பொறுப்பான சமூகத்திற்கு தயார் செய்யும் வகையில் உள்ளது.

  • 2 Vimala // Aug 30, 2006 at 4:44 pm

    Parenting is getting tougher these days. Both parents and kids have to deal with lot of things.

    Look at the confidence and happiness in her eyes.

  • 3 செல்வராஜ் // Aug 30, 2006 at 8:25 pm

    கருத்துக்களுக்கு நன்றி நிர்மல். விமலா, உண்மை தான். அது பற்றி இன்னொரு பதிவு கூட எழுத எண்ணம் இருக்கிறது.

    ‘Scare’ பற்றிச் சொன்னது பள்ளியைப் பற்றி இல்லையாம். வழியில் கண்ட பூச்சி பற்றியதாம். இன்று என்னைத் திருத்துகிறாள்! மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிப் போய்விட்டது 🙂

  • 4 நிர்மல் // Aug 30, 2006 at 9:58 pm

    பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடம் செய்து ஓப்புவிக்கும் இடமாக இல்லாமல் ஆக்கபூர்வமான எதிர்கால சமுதாயத்துக்கான படிக்கற்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    அன்பு குழந்தைகள் தெளிந்த அறிவும், சீரான சிந்தனையும் கொண்டிருப்பின் அதை விட மகிழ்ச்சி இருக்க முடியாது

  • 5 செல்வராஜ் // Aug 31, 2006 at 12:16 pm

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நிர்மல். அத்தகைய தெளிந்த அறிவும் சீரிய சிந்தனையும் கொண்டவர்களாக உருவாகச் சரியான சூழலை அமைத்துக் கொடுப்பது முக்கியம். சில சமயம் பெற்றோர்களுக்கும் முழுமையாகப் புரிபடாத புலப்படாத ஒன்றாக இருக்கிறது. அதையே மேலே விமலாவும் சொல்லியிருப்பதாய் நினைக்கிறேன்.

    குழந்தைகளிடம், ‘நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்’, என்றும் அதேசமயம் ‘நீயாகவும் சிந்திக்க வேண்டும்’ என்றும் சொல்லும் இருநிலைகளுக்கிடையே ஒரு சமநிலை இருப்பதை உணர்வது தான் சிக்கலான விஷயம்.

    ஆக்கபூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் பணியில் பள்ளிகளின் பங்கு மகத்தானது. பள்ளிச் சூழலிலும் அனுபவத்திலும் பெற்றோர்கள் பங்கு கொள்வதும் நலம் பயக்கும். தினசரி அவசரத்தில் மறந்து விடுகிறது என்றாலும் அவ்வப்போது விழித்துக் கொண்டு, ‘இன்னிக்கு என்ன பண்ணீங்க?’ என்று கேட்க முயல்கிறேன். 🙂

  • 6 Vimala // Aug 31, 2006 at 3:00 pm

    Exactly, we want to give the best if not the better environment for them to grow up as an individual. In the mean time we do not want them to be forced into anything…as we(I) think we should let them go by their nature.
    But we cannot do that in all situations and it is difficult at times. Sometimes I feel I am confused.