இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மனிதம் தொலைந்த தருணங்கள்

June 11th, 2006 · 25 Comments

ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன்.

வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சிறுவனும் ஒன்பது வயதுச் சிறுமியும் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? உருவிக் கிடந்த குடலும், உதிரம் சிந்திக் கிடந்த உடலும், பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதிலும் அந்தச் சிறுமி…

நேரடிப் போரில் கூடக் கடைப்பிடிக்கக் கூடிய தருமங்களும், நெறிமுறைகளும் இருக்க, ஒரு பாவமும் அறியாத சிறியவர்களைத் துன்புறுத்திக் கொல்ல மனிதராய் இருப்பவர்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? போர்க்களத்தில் அல்லாமல் வீடு தேடிப் புகுந்து வன்புணர்ந்து கொள்ளப்பட்ட சகோதரிக்கும், துன்புறுத்தித் தூக்கிடப்பட்ட சகோதரனுக்கும் சுமார் எம் வயது தான் இருக்கும். ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு கொடுமையான முடிவு?

இலங்கை அரசும் சிங்களவரும் இவ்வளவு மூர்க்கமானவரா? இல்லை என்று நிரூபிக்கவேண்டுமாயின் இந்தக் கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டுகொண்டு தக்க தண்டனையைத் தரவேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. அப்படி இல்லாமல் மழுப்பப்படுமானால், இதை இலங்கை அரசின் அரசுசார் தீவிரவாதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

ஒரு அரசு இப்படி தனது நாட்டினரையே (அதில் ஒரு இனத்தைக் குறிவைத்து) கொடூரமாக அழிக்குமானால், உலகம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதற்குக் காரணம் அது நிறுவனப்படுத்தப் பட்ட அரசு என்பதும் ஒரு பொய்ச்சனநாயகம் அங்கு நிலவுவதுமா? குறைந்த பட்சம் அருகில் இருக்கும் பெரிய நாடு என்னும் நிலையிலும், தன் நாட்டின் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் என்பதாலுமாவது இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழனாய் இருந்தாலும் சரி, சிங்களனாய் இருந்தாலும் சரி, நேரடிச் சம்பந்தம் இல்லாத சிறுவர் சிறுமியர் மீது ஏவப்படும் வன்முறை நீங்க வேண்டும்.

தூக்கிலே தொங்கிக் கொண்டிருக்கிற அந்தப் பிஞ்சுகளைப் பாருங்கள். தனி மனிதர்களும், இந்தச் சமயத்திலும் அந்தக் கொடூரத்தைக் கண்ணுற்றபின்னும் சிறிதும் அதிர்ச்சியோ அனுதாபமோ இன்றி ‘அவர்கள் அப்படி’, ‘இவர்கள் இப்படி’ அதனால் தான் எந்தச் சம்பந்தமும் இன்றி விலகி இருக்கிறோம்’ என்றெல்லாம் கருத்துச் சொல்வதும் மனிதாபிமானமற்ற செயல் தான். சர்வதேச மிடையங்களும் அரசுகளும் இந்த நூற்றாண்டிலும் நடக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டும் காணாதிருக்குமானால் அவர்களுக்கு வேறு எந்தப் புனிதத்தளத்திலும் நின்று பரப்புரையாற்றவும் தார்மீக உரிமை கிடையாது.

இனியும் அதிக இரத்தம் சிந்தாமல், வன்முறைகளும், துப்பாக்கிக் குண்டுகளும் இல்லாமல், நிம்மதியான வாழ்க்கைமுறைக்கு விரைவில் ஈழம் திரும்ப வேண்டும்.

Tags: சமூகம்

25 responses so far ↓

  • 1 நசிகேதன் // Jun 11, 2006 at 1:59 am

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18455

  • 2 சுந்தரவடிவேல் // Jun 11, 2006 at 5:08 am

    //இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.//
    அரசாங்கத்தின் தூண்களான நம் பத்திரிகைகள் இச்செய்தியைப் பற்றி மூச்சுக் கூட விடாமலிருக்கும்போது நம் அரசாங்கத்தின் நிலைப்பாடு மறைமுகமாக உணரப்படுகிறது. அவர்களுக்குத் தனிமனிதர்களின் வாழ்விலும் சாவிலும் அக்கறையில்லை 🙁
    ஆனால் மக்களுக்கு அரசிடமும் பத்திரிகைகளிடமும் சொல்லும் வலுவிருக்கிறது, அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

  • 3 DISPASSIONATED DJ - » ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்காய்…! // Jun 11, 2006 at 9:56 am

    […]

  • 4 தாணு // Jun 11, 2006 at 11:37 am

    //ஒரு பாவமும் அறியாத சிறியவர்களைத் துன்புறுத்திக் கொல்ல மனிதராய் இருப்பவர்க்கு எப்படி மனம் வந்திருக்கும்// மனம் கனத்துப் போய்விட்டது செல்வராஜ்.

  • 5 வாசன் // Jun 11, 2006 at 11:55 am

    நீங்கள், சுந்தரவடிவேல் மற்றும் கொழுவி எழுதிய இது சம்பந்தமான பதிவுகளை படிக்க நேரிட்ட பின் பல சிந்தனைகள் சுழன்று சென்றன ; பின் மறைந்தன, வினாக்களை மட்டும் விடைகளாக கொடுத்து விட்டு.

    1. இணையத்தில் நாம் அடிக்கடி வருத்தப்படுவதால் என்ன பயன்..

    2. எத்துனை காலம்தான் வருத்தங்களை வெளியிட்டு பின் மறப்பது..? நாம் (தமிழர்கள்) வசிக்கும் நாடுகளின் இறையாண்மைகளுக்கு பங்கம் விளைக்காமல், முடிந்த உதவிகளை என்று செய்ய துணியப் போகிறோம்..

    3. தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு படுகொலைகள் பற்றி உடனடி விழிப்புணர்வு கொணர என்ன செய்யலாம்..

    4. மு.க, வைகோ, மருத்துவர் இராமதாசு, திருமாவளவன் போன்றோர் மற்றும் வெகு முக்கியமாக – அதிபர் அப்துல் கலாம் – இவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதாக ஞாபகம். இவர்களில் ஒருவருக்கு – சொரணை இருந்தால், அதனை எப்படி தட்டியெழுப்புவது…

    5. பழ நெடுமாறன் ( இந்திரா காந்தி உயிரை குண்டர்களிடமிருந்து காப்பாற்றியவர்) போன்ற நல்லோர்களின் எண்ணங்கள், உப்பு போட்டு சாப்பிடும் தமிழரிடையே பரவ என்ன செய்யலாம்..

    நன்றி.

  • 6 குழைக்கட்டான் // Jun 11, 2006 at 12:08 pm

    அக்கறையுடன் பதிவிட்ட உங்கள் பதிவுகளாவது ஒரு சில தமிழக மக்களை சென்றடைய
    உதவும் என்று நம்புகிறோம். நன்றி.

  • 7 வெற்றி // Jun 11, 2006 at 2:09 pm

    அன்பின் செல்வராஜ் அண்ணா,

    //சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். //

    உண்மைதான் செல்வராஜ் அண்ணா. நாளுக்கு நாள் ஈழத்தில் இருந்து வரும் செய்திகளைப் பார்த்து என்ன
    செய்வதென்று அறியாது, பல இரவுகள் தூக்கமுமின்றி , மனம் எதிலும் ஓர் ஈடுபாடின்றி வேதனையில் துவழுவதே என் வாழ்க்கையென ஆகிவிட்டது.

    //
    நேரடிப் போரில் கூடக் கடைப்பிடிக்கக் கூடிய தருமங்களும், நெறிமுறைகளும் இருக்க, ஒரு பாவமும் அறியாத சிறியவர்களைத் துன்புறுத்திக் கொல்ல மனிதராய் இருப்பவர்க்கு எப்படி மனம் வந்திருக்கும்?//

    சிங்கள அரசு புலிகளைக் கொல்ல வேண்டும் என்றால் கொல்லட்டும். காரணம், புலிகள் மரணத்தை எந்த நேரத்திலும் தழுவத் தயாராக இருப்பவர்கள். ஆனால் அப்பாவித் தமிழர்களை, அதுவும் இந்த இளம் பிஞ்சுகளைக் கொல்வதை என்னவென்று சொல்வது.
    வேதனையான விடயம் என்னவென்றால், உலகத்திற்கே கொல்லாமை எனும் தத்துவத்தைப் போதித்த புத்தபிரானின் பெயராலேதான் இந்த சிங்களப் பயங்கரவாதம் நடந்தேறுகிறது.

    //இலங்கை அரசும் சிங்களவரும் இவ்வளவு மூர்க்கமானவரா? இல்லை என்று நிரூபிக்கவேண்டுமாயின் இந்தக் கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டுகொண்டு தக்க தண்டனையைத் தரவேண்டும்.//

    1958 முதல் தமிழர்களைக் கொல்வதும், உலகைப் பேய்க்காட்ட சும்மா விசாரனைக்குழுக்கள் அமைப்பதும் சிங்கள அரசுகள் அரங்கேற்றி வரும் நாடகங்கள்தான். சிங்கள தேசத்திடம் இருந்து நீதியை எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனம்.

  • 8 Arumugam // Jun 11, 2006 at 2:47 pm

    இதைத் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல ஒருப் பத்திரிகைக்குக் கூடவ துணிவில்லை….

    ஆந்திரா பொறியாளர் சத்திய நாராயண தாலிபான்களால் கொலை செய்யப் பட்டபோது வறிந்துகட்டிக் கொண்டு செய்தி வெளியிட்ட தமிழகப் பத்திரிக்கைகள் நம் தமிழ் பேசும் மக்கள் கொடூர கொலைசெய்யப் படும்போது மவுணம் சாதிக்கின்றன.

    தமிழ் நாட்டுப் பத்திரிகைக்களுக்கும் மனிதத் தன்மை கூடவாயில்லை……

  • 9 johann // Jun 11, 2006 at 4:45 pm

    எங்கள் மக்கள் படும் கொடுந்துயர் பற்றிய, தங்கள் சிந்தனைக்கு நன்றி! எப்போது விடிவு இவர்களுக்கு!!! எல்லா மிருகங்களிடமுமிருந்து…..
    யோகன் – பாரிஸ்

  • 10 selvanayaki // Jun 11, 2006 at 7:39 pm

    ///சர்வதேச மிடையங்களும் அரசுகளும் இந்த நூற்றாண்டிலும் நடக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டும் காணாதிருக்குமானால் அவர்களுக்கு வேறு எந்தப் புனிதத்தளத்திலும் நின்று பரப்புரையாற்றவும் தார்மீக உரிமை கிடையாது///

    well said.

  • 11 Nithya // Jun 12, 2006 at 9:31 am

    இது ரொம்பக் கொடூரம் தான். எதற்காக அப்பாவி மனிதர்களைக் கொல்ல வேண்டும்? ஆனாலும் இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன – Rwanda, Darfur – போன்ற இடங்களிலும். அங்கெல்லாம் பெண்களைக் கற்பழிக்கும் அசிங்கம் வேறு. எல்லோருக்கும் அவரவர் பிரச்சினை, யார் போய் மற்ற எல்லோருடைய பிரச்சினையைத் தீர்த்து வைப்பது? எண்ணெய் இருந்தாலாவது பரவாயில்லை. ஒன்றும் இல்லையென்றால் எதற்கு involve ஆக வேண்டும்?!

    ஆனால் இதற்கு என்ன தீர்வு? போய் போய் சண்டை போடுவதா? மனிதர்களின் சிந்தனை மாற வேண்டும். யாருக்கும் யாரும் துன்பம் தரக் கூடாது.

    இதைப் பற்றி எழுதியதற்கு நன்றி.

  • 12 muthu(tamizhini) // Jun 12, 2006 at 9:45 am

    தூக்கத்தை மறக்கடிக்கும் கொடுமையாக புகைப்படங்கள். இதைவிட கொடுமை தமிழர் என்று தம்மை சொல்லிகொள்பவர்களின் பாராமுகம்.

  • 13 அருள் குமார் // Jun 12, 2006 at 10:24 am

    கொடூரத்தின் உச்சமிது.

    //ஆனால் மக்களுக்கு அரசிடமும் பத்திரிகைகளிடமும் சொல்லும் வலுவிருக்கிறது, அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
    //
    குறைந்தபட்சம், சுந்தரவடிவேல் அவர்கள் சொல்வதையாவது நாம் செய்யவேண்டும்.

  • 14 Thangamani // Jun 12, 2006 at 2:41 pm

    ///சர்வதேச மிடையங்களும் அரசுகளும் இந்த நூற்றாண்டிலும் நடக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டும் காணாதிருக்குமானால் அவர்களுக்கு வேறு எந்தப் புனிதத்தளத்திலும் நின்று பரப்புரையாற்றவும் தார்மீக உரிமை கிடையாது///

    ‘ஸ்ரீலங்கா ரத்னா’ கிடைத்திருக்கிறது ஒருவருக்கு. இப்படி கரும்பு தின்ன கூலி கிடைக்கையில் தார்மீக உரிமை எங்கிருந்து வருகிறது!

  • 15 saravana // Jun 12, 2006 at 4:42 pm

    pls. write to CM M.K and other party leaders.
    we are dying everday. we need a voice from India.

  • 16 saravana // Jun 12, 2006 at 4:52 pm

    BBC Tamil also works against Sri lanka tamils.

    we need voice from our brothers.

  • 17 Arumugam // Jun 12, 2006 at 5:07 pm

    Your article has been published on this following web site.

    http://www.wtruk.com/NewsFeatures4.html

    Your message will reach the tamils all over the world.

  • 18 செல்வராஜ் // Jun 12, 2006 at 11:28 pm

    ஆறுமுகம், உலகத் தமிழர் வானொலி தளத்தில் வெளியான தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் பலரையும் சென்றடைய அது உதவும் எனில் மகிழ்ச்சியே.

    வாசன், முக்கியமான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள். குறைந்தபட்சமாக இந்தச் செய்தி தமிழகத் தமிழர், மற்றும் பிறருக்குச் சென்றடைய வேண்டும் என்பதாலும், ஈழத்தமிழருக்கு ஒரு ஆறுதலாய் இருக்கட்டும் என்பதாலும் இது போன்று பலர் எழுதுவது பயனுள்ளதாய் இருக்கும். முதன்மை மிடையங்கள் இது பற்றிக் குரலெழுப்பத் தவறிவிட்டதை மீறி, வலைப்பதிவுகள் மாற்று ஊடகங்களாய் நூகக் குரல்களாய் ஒலிப்பதும் வருங்காலத்தில் சக்தி வாய்ந்திருக்கும். மிடையங்களுக்கும் அரசுகளுக்கும் சொல்ல மக்களுக்கு இருக்கும் சக்தியென சுந்தரவடிவேல் சொல்வதன் அங்கமாகவும் இதனைப் பார்க்கலாம்.

    இதையும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கச் சொல்லும் உங்கள் கருத்துக்களும் முக்கியமானவை. வேறு யோசனைகள் இருப்பினும் தெரிவியுங்கள்.

    அப்துல் கலாமிற்கு நான் ஒரு மடல் அனுப்புகிறேன்.

  • 19 செல்வராஜ் // Jun 12, 2006 at 11:31 pm

    Text of mail I sent to Dr. Kalam today.

    To
    The President of India.

    Plight of Tamil Children in Sri Lanka!

    Dear Dr. Kalam,

    I am a Tamil from Tamilnadu, currently living in the USA. I wish to bring to your notice the crimes against young children in Sri Lanka committed by the Sri Lankan military in their war against Tamil Tigers.

    It goes against all war conventions and humanitarian considerations to hunt these young children, kill them and mutilate their bodies.

    I have written about it in my blog (in Tamil, Unicode) in the following URL:
    http://blog.selvaraj.us/archives/204
    and several other Tamil bloggers of Tamilnadu and Eezam origin have written about this.

    I am not asking for any politically sensitive action pertaining to Tamil tigers, although they seem to be the only source that the Tamils can rely upon. But as the largest neighbouring state and having people of the same race who is being meted out these unfortunate treatment, I believe it is a moral responsibility for India to voice her concerns and condemnation to this barbarious attacks on innocent people and children.

    On behalf of the Tamils of the world, I urge you to take necessary steps to issue India’s protests at the very least, and any other actions that you deem fit to avoid such incidents in the future. Any action you could take now could save a few Tamil children in the future. And children are all they have to look towards their future.

    Sincerely,
    R. Selvaraj.

  • 20 அருள் குமார் // Jun 13, 2006 at 12:43 am

    நல்ல முயற்சி செல்வராஜ்.

    நாங்கள் ஏதாவது செய்யவேண்டுமென்றால் சொல்லுங்கள். இதே விஷயத்தை பலரும் சொன்னால் மதிப்பிருக்கும் என நினைக்கிறேன். கலாம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியப்படுத்துங்கள். நாங்களும் இதைச்செய்கிறோம்.

    நன்றி.

  • 21 செல்வராஜ் // Jun 13, 2006 at 9:21 am

    அருள் குமார், பார்க்க: President of India

    மின்முகவரி: presidentofindia@rb.nic.in

  • 22 Jeypal // Jun 13, 2006 at 10:01 am

    My heartfelt thanks for your concerns and writings. I am an Eelam Tamil and I am very happy to see our Tamil Nadu brothers writing about the killings in SL. Your writings actually take away some of the axiety from us and make us relieved a bit. Thank you so much. Please write to the media in Tamil Nadu and let the common public know about this.

    Thank you again,

    Anpudan,
    Jeyapal

  • 23 B MURUGAN // Nov 28, 2007 at 4:42 am

    dhinam dhinam sethu madium yen ezha thamizh makkaluku naan evvaaru udhavalaam dhayavu koornthu mele ulla mugavariyil theriyapaduthaum, yenkal manamum dhinam dhinam Aadhankapatukondirukirathu mannikkaum

  • 24 செல்வராஜ் 2.0 » Blog Archive » I Support Tamil Eelam // Oct 25, 2008 at 11:53 pm

    […] மனிதம் தொலைந்த தருணங்களில் இருந்து தலைமுறைகளைக் காப்போம். […]

  • 25 Mohanraj // Dec 7, 2008 at 7:51 am

    India wont help to Tamil People. Inidian politicients india makkalukkuea help panna mattanga…. Appadi help pannanumunua Inga irrukira Elam brotherskku (agathi mugamilla irrukiravangalukku) vote irundha potti pottu help pannunvanga…

    India help pannaiti kuda parava illa… Srilankan govtmentukku support pannama irundha podum…
    Tamilnattila irrukira makkalukku… Elathil nadappadhu ennaneenea theriyarathu illai…. 🙁 … Sonnalum puriyarathum illai….
    Innum paditha sagatararkalukkea… tiviravatatukkum…suthandhira porattatukkum vidiyasam therivathillai 🙁