இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

சொல்லாத காதல்

February 27th, 2006 · 7 Comments

Baden River, Swiss

என் மோனம் சொல்லாத
காதலையா
என் வார்த்தைகள்
சொல்லி விடப் போகின்றன?

வார்த்தைகள் மட்டுமல்ல
அன்று புதிதாய்க் கொய்த
வண்ண மலர்கள் கூடச்
சொல்ல உதவாது
என் காதலை.

கருகும்
நீரின்றித் துவளும்
நாட்பட உலரும்
ஒரு மலரைப் போன்றதல்ல
என் காதல்.

மலர்கள் சுமக்கும்
நுரை ததும்பியோடும்
நதிநீர்க் கடியில்
நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்
கறுவெண் மணல் போன்றது.

கங்குப்பொறியல்ல தோழி
அது ஒரு
கால நிகழ்ப்பு.

Baden River, Swiss

Tags: கவிதைகள்

7 responses so far ↓

  • 1 மீனா. // Feb 27, 2006 at 5:39 am

    அருமை!

    //மலர்கள் சுமக்கும்
    நுரை ததும்பியோடும்
    நதிநீர்க் கடியில்
    நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்
    கறுவெண் மணல் போன்றது.//

    வித்யாசமான எடுத்துக்காட்டு!

  • 2 செல்வராஜ் // Feb 27, 2006 at 5:00 pm

    மீனா, உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நீள யோசித்து எழுதினேன். ஒரு முயற்சி தான்.

  • 3 இராதாகிருஷ்ணன் // Feb 27, 2006 at 5:18 pm

    நன்றாயுள்ளது கவிதை!

    (வேறு: இன்னும் பெங்களூரில் உள்ளீர்களா இல்லை ஊருக்குத் திரும்பியாயிற்றா?)

  • 4 செல்வராஜ் // Feb 27, 2006 at 8:25 pm

    நன்றி இராதா. இப்பதிவில் படத்தில் இருப்பது ‘பாடன்’ நதி தான். தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    (நாங்கள் சனவரியில் ஊர் திரும்பி விட்டோம்.)

  • 5 krishnamurthy // Mar 1, 2006 at 10:17 pm

    ????!!!!

  • 6 Nithya // Mar 4, 2006 at 2:20 pm

    Selvaraj,

    Nice poem. Especially liked the first four lines.

    I have always liked to read poems but have never managed to write one.

    Good attempt. Keep them coming.

  • 7 mohamedalijlnnah // Dec 26, 2010 at 10:13 am

    காமம் நிமிடத்தில் நின்று மறையும்
    காதல் காலத்தில் ஒன்றி நிற்கும்

    காதல் வர காரணம் இல்லை
    மோதல் வர காரணம் உண்டு

    காதல் கவிதை எழுத அனுபவம் வேண்டும் என்ற விதி இல்லை காரணம் காதல் உயிருடன் ஒன்றியது.

    இறைவன் மீது கொண்ட காதல் சுவனத்தின் வழி