இரா. செல்வராசு

கற்ற தமிழும் கையளவும்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.

தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது.

அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் தொடர்ச்சியிலும் அடங்கி இருக்கிறது என்னும் வழக்கிற்கேற்ப நமக்குப் பின்னான புலம்பெயர் சந்ததியினருக்கும் நம் மொழியையும் அடையாளத்தையும் கொண்டு செல்ல வேண்டுமே என்னும் கருக்கடையும் ஏற்படுகிறது.

இவ்விரு எண்ணங்களுக்கும் தூபம் போடுவதாகவும் அதே நேரத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவுவதாகவும் வார இறுதித் தமிழ்ப்பள்ளிகள் அமைந்திருக்கின்றன.

நாடெங்கும் தன்னார்வலர்கள் தமிழ்ச் சங்கங்களும், பள்ளிகளும், விழாக்களும் அமைத்து முயன்று வருவதைப் போன்றே எங்கள் பகுதியிலும் இப்போது ஒன்றிற்கு இரண்டாகப் பலபத்து மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாகி இருக்கின்றன.

இவையிருக்க, எங்கள் வீட்டிலும் சில வாதங்கள். எந்த மாற்றத்திற்கும் ஆரம்பநிலை எதிர்ப்புகள் இருப்பது இயல்பு தானே. எங்கள் மக்களும், இவ்வருடம் தமிழ்ப்பள்ளிக்குச் செல்வோம் என்று சொன்ன போது, “எதுக்குப் போகணும்”, “வீட்டிலேயே கத்துக்கலாம்”, “எதுக்காகக் கத்துக்கணும்”, என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்குப் பதில் சொல்லவும் நம் தமிழைத் தான் அழைத்து வரவேண்டியிருக்கிறது.  அதற்கு இவ்விடத்தில் வலு இருக்கிறதோ இல்லையோ நமக்குத் தெரிந்தது அவ்வளவு தானே! புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் கருத்துக்கு ஆதரவு தேடிக் “ ‘களவும் கற்று மற’ என்று வள்ளுவரே சொல்லி இருக்கார் தெரியுமா?”, என்றேன்.

“என்னது? வள்ளுவரா? அவரெங்கே அப்படிச் சொன்னார். அது ஒரு பழமொழிங்க”, என்று மொழிந்தார் மனைவி. பிள்ளைகளை வலியுறுத்தும் பேச்சு மறந்து போய்க் களவைப் பற்றி வள்ளுவர் சொன்னாரா என்னும் வாதத்தில் இறங்கிவிட்டோம்.

எங்கள் பள்ளியிலும் சென்று பிற ஆசிரியர்களிடம் இம்மாபெரும் ஐயத்தைச் சொல்லித் தீர்வு கேட்க, அங்கும் பாதிப்பேர் வள்ளுவர் கூற்றென்றும் மீதிப் பேர் இல்லையென மறுத்தும் இரு கட்சியாக நின்றனர். இணையத் தேடலில் பார்த்துக் கொள்வோம் எனச் சில நேரம் முயன்றும் அறுதியாய் இது வள்ளுவர் எழுதியது தான் என்பதற்குச் சான்றே கிட்டவில்லை. பிறகு தான் மூலத்திற்கே சென்று பார்க்கலாமே என்று வள்ளுவத்தை வைத்திருக்கும் சில தளங்களில் சென்று தேட, ‘களவு’ என்னும் சொல்லை வள்ளுவர் ஒரே ஒரு குறளில் தான் பாவித்திருக்கிறார். அது நிச்சயமாகக் கற்று மறத்தல் பற்றி அன்று.  நல்ல வேளை நான் பந்தயம் ஏதும் கட்டவில்லை!

ஆக, தமிழ்ப்பள்ளியானது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையக் கற்றுத் தருகிறது. இப்படித் தான் இன்னுமொரு நாள் நிலை-1ன் ஆசிரியை ஒருவர் ‘படங்காட்டிப் பெயர் சொல்லல்’ என்று சுவையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது Yak விலங்கின் படத்தைக் காட்டினால் என்ன சொல்வது என்று குழம்பியிருக்கிறார். (A for Apple,… என்னும் வரிசையில் இருக்கும் படங்களைக் கொண்டு வந்ததில் Y for Yakம் வந்துவிட்டது!). பிற ஆசிரியர்களிடமும் இது பற்றி  வினவினார். ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை.

“பாக்கறதுக்கு எருமை மாதிரி தானேங்க இருக்கு. சும்மா காட்டெருமைன்னு சொல்லுங்க”, என்றேன்.

தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத அவ்விலங்கைக் காட்டெருமை என்று அதன் தோற்றத்தை வைத்துச் சொல்லலாமே என்று நினைத்தாலும் அது ஒரு குறையான அனுமானம் தான்.

“அது எப்படிங்க? அப்போ Wild Buffaloவிற்கு என்னன்னு சொல்லுவீங்க? அது தானே காட்டெருமை?”, என்று அவர் எதிர்கேள்வி கேட்கவே, சரி அது ஒத்துவராது என்று விட்டுவிட்டோம். இப்போதெல்லாம் நாட்டிலே நிறையக் கேள்விகள் கேட்கின்றனர்!

இதை விட்டுவிடுவதா என்று பல அகரமுதலிகளிலும், இணையத்திலும், விக்சனரி, விக்கிப்பீடியா என்றும் தேடிப் பார்த்தும் Yak-ற்குச் சரியான சொல் சிக்கவில்லை. ஒரு வகையான திபெத்திய மாட்டுவகை என்றோ, கவரிமா என்றோ தான் இருந்தது.

எருமை மாதிரி இருக்கும் ஒன்றை மான் என்று எப்படிச் சொல்வது எனக் கேள்வி எழுந்தாலும் மானும் கொஞ்சம் எருமை மாதிரி தான் இருக்கும் என்பதைச் சில ஆண்டுகள் முன் நெடுஞ்சாலையில் எங்கள் வாகனத்தில் வந்து இடித்துக் கதவை உடைத்த ஒரு மானை வைத்து நான் உணர்ந்திருந்தேன்.  இருப்பினும் ‘மயிர் நீப்பின் உயிர் நீக்கும்’ தன்மை வாய்ந்த ஒன்றை எருமைக்கு நிகரான Yak என்று எப்படிச் சொல்வது? எப்படியோ தவறாகக் கவரிமான் என அகரமுதலிகளில் இடம்பெற்று விட்டது போலும் என நினைத்தேன்.

ஆனால் மேலும் தேடியதில் சிக்கியது ஒன்று:
"கவரிமா என்றொரு மானே கிடையாது. இமயத்தில் வாழும் காட்டுமாடு, சடை போன்ற முடி உடையது. கவரி என்றால் மயிர், மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே வாழும் இந்த மாடு உடலிலுள்ள மயிரை இழந்துவிட்டால் உயிர் துறந்துவிடும். இதையே வள்ளுவர் உவமையாக ‘மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்று குறிப்பிட்டார். பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ‘நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரை’ என்று கூறி இல்லாத ஒரு மான் இனத்தை உருவாக்கிவிட்டனர். "

உசாத்துணை:  ச.முகமது அலி எழுதிய ‘இயற்கை : செய்திகள், சிந்தனைகள்’ என்னும் நூல் பற்றிய விமர்சனக் குறிப்பு.

ஆக, யாக்கு என்பது கவரிமா என அறிவோம்.

மேலும், “பி.எல். சாமி அவர்கள் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்னும் நூலிலும், செந்தமிழ்ச்செல்வி என்னும் மாதிகையிலும் இது பற்றிக் குறித்துள்ளார்”, என்று தமிழ் விக்கியின் உரையாடல் ஒன்றில் கனடா பேராசிரியர் செல்வா குறிப்பிட்டுள்ளார்.

“Yak என்னும் விலங்கைத் தமிழர்கள் கவரி மான் என்று அழைதார்கள் என்பதை பி. எல். சாமி ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளார். எப்படி நரந்தம் புல் உண்டு, குளிரான இமயமலைப் பகுதியில் வாழ்கின்றது என்னும் செய்திகளைத் தொகுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் குறளிலே,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

என்னும் குறளில் வரும் கவரிமா இந்த Yak தான். எப்படி மயிரை நீக்கிவிட்டால், குளிர் தாங்கமாட்டாமல், கவரிமா இறந்து படுமோ, அதுபோல், மானம் இழந்தால் தம் உயிரைநீப்பர் மானமுடையவர் என்கிறார். இதனை அறியாமல் பலரும் ஒரு முடி விழுந்தாலும் உயிர் நீங்கும் மான் இனம் (கற்பனை) என்று பலர் பொருள் கூறியுள்ளனர் (தவறுதலாக). சங்க இலக்கியத்திலே பல இடங்களில் கவரி மா வாழும் இமயமலைப் பகுதியையும், அது உண்ணும் நரந்தம் புல்லையும் பற்றித் தெளிவான குறிப்புகள் உள்ளன. “

இப்படியாகப் பல இடங்களிலும் தொன்மை திரிந்த வழக்கை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையை மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளியின் சில மாதங்களிலே கற்றுக் கொண்டவற்றிற்கு இவை சில சான்றுகள் தாம். இன்னும் இலக்கணக் குறிப்புகள், இருபெயரொட்டுப் பண்புத்தொகை, குறிப்பு வினைமுற்று, அகரயீற்றுப் பெயரெச்சம் என அறிந்து கொண்டவை பலபல.

தமிழின் தொன்மை தொடர்வது அடுத்த தலைமுறையினருக்கு மொழியினை பயிற்றுவிப்பதில் மட்டுமன்று; நமது மொழியறிவின் குறைகளைக் களைந்து கொள்வதிலும், தொடர்பான பிற செய்திகளை அறிந்துகொள்வதிலும் கூட உள்ளது என்று எனக்கு மேலும் ஆர்வம் பிறக்கிறது. அதிகம் அறிய அறிய அறியாதது தான் அதிகரிப்பதாகவும் படுகிறது. அதனால் தானே நம் தமிழில் அன்றே சொல்லி வைத்தாள் ஔவைப் பாட்டி:  ‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’.

“என்னது? நிச்சயமா ஔவையார் தான் அதைச் சொன்னாங்களான்னு கேக்கறீங்களா? இருங்க, இணையத்துல கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா வந்து அதுக்குப் பதிலச் சொல்றேன்!”

கூகுளைத் தேடி ஓடினேன்.

“எந்த ஔவையார் பத்திக் கேக்குறீங்க? குறைஞ்சது மூணு பேராவது இருந்திருக்காங்க”, என்று கூகுளும் என்னை மறுகேள்வி கேட்கிறது!

பி.கு.: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ‘தென்றல்-முல்லை’ சித்திரைச் சிறப்பிதழில் (2012 ஏப்ரல்) வெளிவந்த கட்டுரை.

ஆழ்கடலில் வெடித்த பாறைநெய்க் கிணறு
முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.  அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக  எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.

அமெரிக்க மெக்சிக்கோ வளைகுடாவின் ஆழ்கடலில் 2010ல் ஏப்ரல் மாதம் பிரிட்டிசுப் பெட்ரோலியம் (பீ.பி) நிறுவனத்தின் பாறைநெய்க் கிணறு ஒன்று வெடித்துத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் (கரட்டு நெய்யைக்)  கடலில் கலக்க விட்டுக் கொண்டிருந்தது. கசிந்த கரிய பாறைநெய்யின் அணுமானித்த அளவு நாளுக்கு நாள் மாறி, உயர்ந்து ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பீப்பாய் அளவு (1000 BPD) என்று சொல்லப்பட்டதில் இருந்து அதிகபட்சம் அறுபத்தைந்து ஆயிரம் பீப்பாய் (65000 BPD) அளவுக்கு இருக்கலாமெனச் சொல்லப்பட்டது.  (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்). அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப் படுகிறது.

பாறைநெய்க் கசிவு கடல்பரப்பில் இருந்து கீழே ஒரு மைல் ஆழத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்கக் கரைகளையும் கூட வந்தடைந்தது.   வெண்மணல் கடற்கரைகளில் தார் உருண்டைகள் காணப்பட்டன.  கடல்வாழ் உயிரினங்கள், கடற்பறவைகள் மீது எண்ணெய்ப் பூச்சுக்கள்; தாவரம் மற்றும் புதல்களின் அழிவு; எனப் பாதிப்புகள் ஏராளம்.  எண்ணெய்யில் முங்கி்ய பறவைகள் பறக்க முடியாமலும், தமது உடல்வெப்பத்தைச் சூழலோடு இயைத்திருக்க முடியாமலும் இறந்து பட்டன. பாட்டில்மூக்கு டால்பின்கள், திமிங்கலம், கடலாமைகள் போன்ற உலகில் அருகிவரும் சில கடல்வாழ் பாலூட்டி இனங்களும் தாக்கத்திற்கு ஆளாயின.

பாறைநெய்யின் சில கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாய் இருக்குமென்பதால் அவற்றோடு நேரடித் தொடர்பில் வரும் உயிர்கள் பலவும் பாதிப்புக்குள்ளாகும்.

படம்: எண்ணெய்ப் பூச்சுக் கொண்ட பெலிக்கன் பறவைகள் (c) BP plc.

இவற்றோடு மீன்பிடி தொழிலையும் அது சார்ந்த வாழ்க்கையையும் கொண்டிருக்கும் இக்கடலோரப் பகுதி மக்களின் வாழ்வு முறைகளும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் கடலோரச் சிற்றூர்களும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. லூசியானா மாநிலம் இறால் மற்றும் பிற கடல் உணவுகளுக்குப் பெயர் பெற்ற ஒன்று.  வெடித்த கிணறு லூசியானாக் கரைகளில் இருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்த ஒன்று என்பதால் முதலில் பாதிப்படைந்தது இந்த மாநிலம் தான். அதோடு, அருகே இருக்கிற மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா மாநிலங்களிலும் கசிவின் தாக்கம் இருந்தது.

படம்: கடல் நீரில் கலந்த எண்ணெய்

பீ.பி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெயரை பியாண்ட் பெட்ரோலியும் (Beyond Petroleum) என்று, பெட்ரோலியத்துக்கு அப்பால் என்னும் பொருள்படத் தனது பெயரை வெறும் (BP) பீ.பி என்று சுருக்கிக் கொண்டது.  பாறைநெய் தவிர, சோளத்தில் இருந்து எடுக்கும் எத்தனால், சூரிய ஒளி ஆற்றல் என்று மாற்று எரிபொருள்களை நோக்கிச் செல்கிறது என்று காட்டவும் இப்பெயர் மாற்றம்.  பெயர் மாறினாலும், இன்னும் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்றே பலராலும் நினைக்கப் படும் பீ.பி உலகின் மிகப் பெரிய தனியார் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று.  எக்சான் மோபில் (அமெரிக்கா), ஷெல் (டச்சு), டொட்டால் (பிரெஞ்சு), கனாக்கோ (அமெரிக்கா), செவ்ரான் (அமெரிக்கா) ஆகியவற்றோடு சேர்ந்து மாபெரும் (தனியார்) எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.  மத்தியக் கிழக்கில் முதலில் பாறைநெய்யைக் கண்டுபிடித்த நிகழ்வோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட நிறுவனம் இது.

பொதுவாகவே உலகின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மக்கள் மத்தியில் ஒரு நொசிவான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும், அவை இன்றைய ஆற்றல் தேவைகளை ஈடு செய்யப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.  உலக ஆற்றல் தேவை தற்போது நாளொன்றுக்கு ஏறத்தாழ 85 மில்லியன் பீப்பாய் அளவாக இருக்கிறது. அதில் 25 விழுக்காடு ஆற்றலை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேவையும் அது இன்னும் அதிகரித்தவண்ணமே இருப்பதையும் ஈடுகட்டத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நிலத்தடி மற்றும் கடலடியில் கிணறு துளைத்துப் பாறைநெய்யை உற்பத்தி செய்து வருகின்றன.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கிணறுகளின் வளம் குறைய ஆரம்பிப்பதாலும், இன்னும் தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், புதிய எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கவும், துளைத்து எடுக்கவும், பாறைநெய் நிறுவனங்கள் தமது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே இருக்கின்றன.  சுலபமான வழிகளிலே எண்ணெய் கிடைத்த காலம் போய், இன்று வெகு தொலைவு சென்றும், புதிய நுட்பங்கள் மூலமும் உற்பத்தியைப் பெருக்க வேண்டியிருக்கிறது.  ஆழ்கடலில் கிணறு துளைத்து அங்கிருந்தும் இந்தக் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் முயற்சியும் இதனோடு சேர்ந்ததே.

அமெரிக்காவின் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியிலும் பல கிணறுகள் ஏற்கனவே துளைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் பாறைநெய் அமெரிக்க உற்பத்தியில் 25 விழுக்காடு அளவிற்கு இருக்கும்.  உலகம் முழுதும் உள்ள ஆழ்கடல் கிணறுகளின் உற்பத்தியைச் சேர்த்தால், அவை சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தி அளவை எட்டிவிடும். கரையருகே கிணறு துளைத்தல் பல காலமாக நடந்து வந்தாலும், ஆழ்கடலில் எண்ணெய் தேடிச் சென்றது அண்மைய நிகழ்வு தான். கடல் பரப்பில் இருந்து 500 அடி ஆழத்திற்கும் மேல் செல்ல வேண்டியிருப்பின் அதனை ஆழ்கடல் கிணறு என்று சொல்வர்.

அமெரிக்க அரசு இந்தக் கடல் பகுதியைப் பல பகுதிகளாகப் பிரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு தொகைக்குக் குத்தகைக்கு விடும். அதன் பிறகு துளைத்தல் வெற்றி பெற்று எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டால், அதன் வருவாயில் ஒரு பங்கைக் கசராகவும் அரசு பெற்றுக் கொள்ளும். இந்தப் பணியினைச் செய்வதும், மேற்பார்வை பார்ப்பதும் மெட்டீரியல்சு மேனேஜ்மெண்ட் சர்வீசு (MMS) என்னும் அரசுத்துறை. இத்துறையில் இருந்த ஊழலும், அதிகாரத்தில் இருப்போர் இந்நிறுவனங்கள் அளிக்கும் ‘அன்பளிப்பிலும்’, கவனிப்பிலும், தாம் செய்யவேண்டிய பணியைச் செய்யாமலும், பாரபட்சம் காட்டி ஒப்புதல் அளிக்கத் தகுதியில்லாதவற்றிற்குக் கூட ஒப்புதல் அளித்ததும், பாதுகாப்பான செயல்பாட்டிற்கு உலை வைத்து விட்டது என்னும் குற்றச்சாட்டும் உண்டு. இந்த விபத்தின் பிறகு இத்துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.

லூசியானா கரையை ஒட்டி 40 மைல் தொலைவில் மிசிசிப்பிக் கேன்யன் பிளாக் 252 என்னும் பகுதியில் பீ.பிக்காக ஒரு சோதனைக் கிணறு துளைக்க, டீப்வாட்டர் ஒரைசான் (Deepwater Horizon) என்னும் துளைகப்பல் ஈடுபட்டது.   இந்தக் கப்பல் டிரான்சோசன் (Transocean) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஒப்பந்த முறையில் பிற நிறுவனங்களுக்காகக் கிணறு துளைத்தலில் ஈடுபட்டிருப்பது இவர்களின் முக்கியப் பணி. அதனோடு, ஏலிபர்ட்டன்(Halliburton) என்னும் நிறுவனமும் சில பணிகளைச் செய்யச் சேர்ந்து கொண்டிருந்தது.  வெடிப்பின் பின் இம்மூன்று நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. இருப்பினும் பெரும்பாலான பொறுப்பு பீ.பி நிறுவனத்தையே சேரும்.  பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர செய்யாமல் பீ.பியில் 2005இல் டெக்சசு சிட்டி தூய்விப்பாலையில் (Refinery) நடந்த விபத்தில் 15 பேர் மாண்டதும், 2006ல் அலாசுக்கா புழம்புவரிசையில் (Pipeline) கசிவு ஏற்பட்டதும் அவர்களின் மீது இன்னும் இருக்கும் கரும்புள்ளிகள்.

கிணறு துளைக்க வேண்டிய இடத்தில் கடல் ஐந்தாயிரமடி ஆழம் கொண்டது. சாதாரணமாக, நூறு அடிக்குக் கீழே மனிதர்கள் செல்வதில்லை. 350 அடிக்குக் கீழே சூரிய ஒளி கூட எட்டுவதில்லை. தொலை இயக்கி வண்டிகளையும் இயந்திரன்களையும் கொண்டு இங்கே 5000 அடிக்குக் கீழே உள்ள கடல் படுகையில் கிணறு துளைக்க ஆரம்பித்து, அதன் கீழே இன்னும் 18000 அடி வரை எண்ணெய் வளம் தேடித் துளைக்கின்றனர். கடலின் பரப்பில் இருந்து கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாகும். கடல் படுகையை ஒட்டிய அழுத்தம் பரப்பிலே இருக்கும் சூழ் அழுத்தத்தை விட 150~200 மடங்கு அதிகம் இருக்கும். அதோடு, துளைக்கிணற்றில் கீழே செல்லச் செல்லக் கடும்பாறைகளின் கீழே அழுத்தம் இன்னும் அதிகம் ஆகும். காட்டாக, சூழிய அழுத்தம் சுமார் 15 பவுண்டு (14.7 பவுண்டு/சதுர அங்குலம்) என்றால், கடல் படுகையில் 2200 பவுண்டு அழுத்தமும், கிணற்றினுள் 12000 பவுண்டு அழுத்தம் வரையிலும் இருக்கும். கிணற்றினுள் இதை விடவும் அதிகரித்த அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் உண்டு.

படம்: எண்ணெய்க் கிணறும் கசிவும் மாற்றுத் துளைகளும்

சூரிய ஒளி பரவாத மையிருட்டில் கடலடியில் உள்ள நிலையும் காட்சியும் பற்றி மனிதனுக்கு இன்னும் அதிகம் தெரியாதவை. வானவெளியின் நிலவைப் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூடக் கடல் ஆழங்கள் பற்றித் தெரியாது. இருப்பினும் இவ்வாழங்களில் சென்று இத்தகைய கிணறு துளைத்தல், பொறியியல் விந்தை தான். அபாயங்களும் தீவாய்ப்பும் நிறைந்த செயல் என்பதால் இங்கே கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன.  இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்பது தான் இந்நிறுவனங்களின் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டு.

எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், பீ.பி.யின் சோதனைக் கிணறு துளைத்தல் வெற்றியே பெற்றது. 13000 அடி தொலைவில் எண்ணெய் மற்றும் எரிவளி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இக்கிணற்றுப் பரப்பில் 50 முதல் 100 மில்லியன் பீப்பாய் அளவிற்குப் பாறைநெய் இருக்கும் என்று கணிக்கப் பட்டது. அதன் பிறகு இத்துளைகப்பலின் வேலை, கவனமாகக் கிணற்றை மூடிவிட்டுச் செல்வதே.  பிறகு வேறொரு சமயம் உற்பத்தியைத் தொடங்க வேறு கிணறுகள் துளைக்கப் படும்.

படம்:  வெடிப்பின் பிறகு பற்றி எரியும் துளைக்கப்பல் டீப்வாட்டர் ஒரைசான்.

இது போன்ற கடினச் சூழலில் செய்யும் வேலைக்கு ஒவ்வொரு நாளுக்கும் செலவு அதிகரித்தபடியே இருக்கும். நாளொன்றுக்குப் பல நூறாயிரம் (இலட்சம்) டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விரைவில் பணியை முடிக்க அழுத்தம் இருக்கும். ஏற்கனவே எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதால் விரைவில் கிணற்றை மூடிவிட்டுச் செல்ல பீ.பியின் மீதும் அதிகம் அழுத்தம் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.

கிணற்றை மூடச் சிமெண்ட் ஊற்றிக் காய வைக்க வேண்டும். அதற்குத் தேவையான நேரத்திற்குப் பிறகு, அழுத்தச் சோதனைகள் செய்து கிணறு சரியாக மூடப்பட்டதா என்று சோதனை செய்யவேண்டும். செலவைக் குறைக்கும் நோக்கத்திலும், என்ன நடந்து விடப் போகிறது என்னும் அலட்சியத்திலும், இச்செயல்களைச் சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டனர். அதோடு, இதன் செயல்பாட்டிலும், பீ.பியும், டிரான்சோசனும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் கொண்டிருந்தனர் எனவும் சொல்லப் படுகிறது. சிமெண்ட் வேலை செய்யும் ஏலிபர்ட்டன் மீதும் சிமெண்ட் சரியாக அமையவில்லை என்னும் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. முன்னர் இந்நிறுவனம் முன்னாள் துணையதிபர் டிக் சேனியின் தலைமையிலும் இருந்த ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு துளைக்கிணற்றிலும் படுகை மீது வெடிப்புத் தடுப்பி (Blow Out Preventer) என்னும் சாதனம் இருக்கும். அதிக அழுத்தத்தில் இருக்கும் துளைக்கிணறுகளில் விபத்துக்கள் மற்றும் வெடிப்புக்கள் ஏற்படுவது புதிதல்ல. அது போன்ற சமயங்களில் இந்த வெடிப்புத் தடுப்பியில் இருக்கும் தடுக்குகள் (Valves) உடனே மூடிக் கிணற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும். துளைசேறு (Drilling Mud) என்னும் ஒரு கலவையும் துளையினுள் கிணற்று அழுத்தத்திற்கும் மேல் அதிகமாக இருந்து ஒரு தடுப்பைக் கொடுக்கும். சிமெண்ட் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்தத் துளைசேற்றை எடுத்துவிட்டுக் கடல் நீரை விட்டுத் துளையை நிரப்பி விடுவர்.

இங்கே, சிமெண்ட் சரியாகக் காயாமல், கிணற்றை உறுதியாக மூடவிடாமலே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர் என்றும், அதிக அழுத்தம் கொண்ட துளைசேறை முன்னதாகவே வெளியே எடுத்துவிட்டதால், பாறைநெய் அழுத்தம் காரணமாகக் கிணறு வெடித்துக் கொண்டு கிளம்பிவிட்டது என்றும் ஒரு தேற்றம் உண்டு. அதோடு, அசாதாரணச் சூழல்களில் தன் வேலையைச் செய்து காக்க வேண்டிய

வெடிப்புத் தடுப்பியும் சரியாக வேலை செய்யாததால், கிணறு மூட முடியாமல் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.  இது சரியாக வேலை செய்யவில்லை என்றும் முன்னதாகவே சோதனைகளில் தெரியவந்தும் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

பாறைநெய்யோடு எரிவளியும் (மெத்தேன்) அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பதால், கிணறு கட்டுப்பாடின்றிப் போன போது, இவ்வெரிவளி பீறிட்டுக் கொண்டு வெளிவந்து, அவ்வாறு வரும்போது ஏற்படும் அழுத்தக் குறைவால் வேகம் பெற்றுக் கப்பல் வரைக்கும் வந்து சீறியது. அங்கே இருந்த இயந்திரங்களின் பொறி பட்டுத் தீப்பிடித்துக் கப்பலையே வெடிக்க வைத்து விட்டது. இரண்டு நாட்கள் எரிந்த தீ கப்பல் முழுவதையும் எரிந்து மூழ்கச் செய்தது. பணி புரிந்தோரில் 11 பேர் இருந்த இடம் தெரியாமல் இறந்தனர். மேலும் 17 பேர் காயமுற்றனர்.  நூற்றுக்கணக்கில் பிறர் தப்பிப் பிழைத்தனர்.

மூழ்கும் கப்பலில் இருந்து ஒரு நீண்ட குழாய் கிணற்றை இணைத்திருக்கும் என்பதால், கப்பல் மூழ்கிய போது அக்குழாயும் மூழ்கியது. ஒரு மைல் நீண்ட குழாய் மூழ்கும்போது மடங்கியதில் இரண்டு இடங்களில் உடையவும் செய்தது. இவ்வுடைப்புக்களில் இருந்தும், குழாயின் எல்லையிலும் எண்ணெய் கசிய ஆரம்பித்திருப்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லா விசயங்களையும் போலவே இப்பிரச்சினையிலும் அரசியல் தலையீடும் தாக்கமும் அமெரிக்காவிலும் உண்டு. பொதுவாகக் குடியரசுக் கட்சியினர் (Republicans) எண்ணெய் நிறுவனங்களின் சார்பானவர்கள் என்ற கருத்து நிலவினாலும், குடியரசு, மக்களாட்சி (Democrats) இரண்டு கட்சியினருமே தங்கள் தேர்தல் நிதிக்காக இவ்வெண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவது வழக்கமே. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இந்தக் கசிவுப் பிரச்சினையால் உண்டான அழுத்தம் அதிகம். ஒரு நுட்பப் பிரச்சினைக்கு அரசியல் என்ன தீர்வைச் சொல்லிவிட முடியும் என்றாலும், அவர் மீது வைக்கப் பட்ட விமர்சனங்கள் அதிகம்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே பகுதியைத் தாக்கிய அரிக்கேன் கட்ரீனாவின் போது சரியான நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத புஷ் உடன் இதனை இணைத்து இது ஒபாமாவின் கட்ரீனா என்று விமர்சனங்கள் எழுந்தன.

கட்ரீனாவிற்குப் பிறகு புஷ் தனது செல்வாக்கை இழந்தது போன்றே ஒபாமாவிற்கும் இந்த எண்ணெய்க் கசிவு அமையும் என்று கருதப்பட்டது. இந்த அழுத்தங்களினாலும், ஏற்கனவே சரிந்து வரும் தனது செல்வாக்கு மேலும் சரியாமல் தக்க வைத்துக் கொள்ளவும், இது குறித்துத் தான் மிகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியும் இது தனது கட்டுக்குள் தான் இருக்கிறது என்று அறுதியிட்டுக் கூறவேண்டியும் ஒபாமா பாதிப்படைந்த பகுதிகளுக்குச் சில முறைகள் பயணம் சென்று நேரடியாகப் பார்வையிட்டது மட்டுமின்றி, இதனால் பாதிப்படைந்த மக்களுக்கு பீ.பி நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், எத்தனை காலம் ஆனாலும் இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவோம் என்றும் கூறுகிறார்.

பீ.பி நிறுவனத்தைக் குறை கூறுவதா, அவர்கள் மீதே முழுப் பழியும் சுமத்துவதா, அல்லது அவர்களோடு இணைந்து இச்சிக்கலைச் சரி செய்ய முயல்வதா என்னும் ஆரம்பக் குழப்பங்களைத் தாண்டி, அவர்களிடம் இருபது பில்லியன் டாலர்களுக்கான ஒரு வைப்பு நிதியை ஒதுக்கும்படி செய்திருக்கிறார். இதனால் பாதிப்படைந்த மக்கள் சிறிது மகிழ்ச்சியுற்றாலும், தொழில் நிறுவனங்கள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் முதலீட்டைப் பணயம் வைக்கத் தயங்குவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது. ஏற்கனவே வீழ்ச்சியுற்றிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது நல்லதில்லை எனவும் சிலர் எண்ணுகின்றனர்.

கிழக்குக் கரையோரம் மேலும் பல எண்ணெய்க் கிணறுகளுக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்று இருந்த விவாதங்கள் இப்போது கிடப்பில் போடப் பட்டுள்ளன. ஆழ்கடல் கிணறுகள் துளைத்தலுக்கு சில காலம் இடைக்காலத் தடை விதிக்கப் பட்டிருந்து இப்போது அண்மையில் தான் அது நீக்கப்ப்பட்டது. கலிபோர்னியா, புளோரிடா மாநில ஆளுனர்களும் தத்தம் மாநிலங்களின் கரைகளை ஒட்டி ஆழ்கடல் துளைத்தக்குத் தாம் தெரிவித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகு இக்கும் தீவாய்ப்பும் (risk) கொண்ட ஒரு செயலில் ஏன் இறங்கவேண்டும் என்று தமது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கலிபோர்னிய ஆளுனரான ஆர்னால்டு சுவாசநகர் கூறுகிறார். (இவர் பல ஆங்கிலப் படங்களில் நடித்துப் பெயர் பெற்ற அதே ஆர்னால்டு தான்).

படம்: பீ.பி நிறுவனத்தாருடன் பேச்சு வார்த்தையில் ஒபாமாவும் பிற அரசு அதிகாரிகளும்.

கசிந்து கொண்டிருக்கும் எண்ணெய்யை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதையும், ஏற்கனவே கசிந்து கடலில் கலந்துவிட்டதை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்கு முன்னர் இது போன்ற சூழல்களில் இது போன்ற நடவடிக்கைகளில் அனுபவம் இல்லாத மனித இனத்திற்கு இது பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்தது. தற்காலிக முறைகள் எதிலும் முழுமையாகக் கசிவை நிறுத்த முடியாததால், மாற்றுத் துளைகள் இரண்டும் துளைக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக முதல் துளையினை அடைந்தால், அவற்றுள் சிமெண்ட் ஊற்றிக் கிணற்றை அடைத்து விடலாம் என்பது எண்ணம்.

இதற்கிடையிலே மேற்பரப்பில் ஏற்கனவே கசிந்த எண்ணெய்யைச் சுத்தம் செய்வதிலும், பாதிக்கப்பட்ட உயிரினங்களைக் காக்க முயல்வதுமாகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட இக்கால கட்டத்தில் இக்கசிவினால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்று பார்த்து வருகின்றனர். பீ.பியும், டிரான்சோசனும், ஏலிபர்ட்டனும் தங்களுக்குள் வழக்கு பழி என்று மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடலுக்குள் கசிந்த எண்ணெய் பயந்தபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் மாயமாகிப் போனதற்கு எண்ணெய் உண்ணும் நுண்ணுயிரிகள் காரணமா என்றும் ஆய்ந்து வருகின்றனர்.

காரியம் கெட்ட பிறகு சரிசெய்வதை விடச் சரியான செய்கைகளின் மூலம் இவ்விபத்தைத் தவிர்த்திருப்பதே சிறப்பானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாகத் துளைத்தலையே தடைசெய்வது ஒருவகையில் தீர்வாக இருந்தாலும், அதை உடனடியாகச் செய்வது வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தரும். இயலாத ஒன்று என்றே கூறலாம். பாறைநெய்யும் இயற்கை எரிவளியும் இன்னும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான மூலங்கள்.  வேறு மாற்று எரிபொருட்கள் குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் வரை இவை இன்னும் தேவையாகவே இருக்கும். இங்கு ஒரு கிணற்றில் விபத்து என்றாலும், உலகம் முழுதும் 14000 ஆழ்கடல் கிணறுகள் இருப்பதும், செயலாற்றுவதும் மனிதப் பொறியியல் திறமைகளுக்கு ஒரு சான்று என்பதை மறுக்க முடியாது.

எப்படி இருந்தாலும், உலகமும், மக்களும் தங்கள் ஆற்றல் தேவைகளைக் குறைத்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று. அதிக தேவை இருப்பதாலேயே இது போன்ற தீவாய்ப்புக்கள் நிறைந்த செயலில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட வேண்டியிருக்கின்றன என்பதால், தேவையைக் குறைப்பது முக்கியமானது. இந்த நிறுவனங்களும் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து குறைந்த கால ஆதாயத்திற்காகப் பெரும் சேதாரத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பீ.பி போன்ற நிறுவனங்கள் பொறுப்பான செயல்கள் மூலம் இத்தகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசும், அதன் துறைகளும் கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல் இல்லாமல், இந்நிறுவனங்கள் போதுமான பாதுகாப்புச் செய்கைகளை வைத்திருக்கின்றனவா, என்பதைக் கண்காணித்து வர வேண்டும்.  தமது செயல்பாட்டையும் சட்ட திட்டங்களையும் நீண்ட கால நன்மை கருதி வகுக்க வேண்டும்.

உசாத்துணை:

1. http://www.economist.com/node/16160853?story_id=16160853

2. http://www.slate.com/id/2256920?wpisrc=xs_wp_0001

3. Ultra-deep…Shell http://www.shell.com/home/content/media/news_and_library/press_releases/2009/parque_das_conchas_09122009.html

4. Deepwater conditions  http://www.shell.com/home/content/innovation/news/shell_world_stories/2007/deepwater/

5. http://www.nytimes.com/2010/12/26/us/26spill.html?_r=1&nl=todaysheadlines&emc=a2

மனதில் உறுதி வேண்டும்
2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு.

அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன்.

வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை.

நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.

இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் :-).  இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன்.

இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும்.

புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை.

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.

ஓம் ஓம் ஓம்!

குறிப்பு: வள்ளுவன் தமிழ் மையம் தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம்  நடந்த தமிழர் திருநாள் விழாவில், சலங்கை ஆர்ட்சு அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம்.

குத்துப்புள்ளி
செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம்.

ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர்.

அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள்.

"நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க"

"சரிங்கையா"

பல காலத்துக்கு அதை ஏன் ‘குத்துப் புள்ளித் தாள்’ என்று சொன்னார்கள் எனத் தெரியவே இல்லை. இது போன்ற ஒரு பாவனையை நான் வேறெங்கும் கவனித்தது கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான், நானாக அதன் பொருளை ஒருவாறு விளங்கிக் கொண்டேன். அதில் இருந்து ஒரு அழகான தமிழ்ச்சொல்லும் கிடைக்கும்.

ஆங்கிலத்தில் ‘To Do’ எனப்படும் செய்யவேண்டியன பட்டியல் போடும்போதோ, அல்லது ஒரு ஆவணக்கோப்பில் ஏதேனும் பட்டியல் போட வேண்டுமென்றாலுமோ, பொதுவாக இரண்டு முறைகள் உண்டு.

எண்களோ எழுத்துக்களோ முன்னிட்டு ஒழுங்கு முறையில் எழுதுவது.

எண்களேதும் இடாமல் Bulleted List என்று எழுதுவது.

அந்த ‘புல்லட்’களுக்குப் பல வடிவம் இருக்கலாம்

வட்டக்குறி, அம்புக்குறி, சதுரக்குறி, சிரிப்பான் எனப் பல.

கணினியிலன்றிக் கையில் வெற்றுத் தாள்களில் எழுதும்போது இயல்பாக வட்டக்குறி இட்டே பட்டியல் இடுவது வழக்கம். இந்த வட்டக்குறிக்கே குத்துப்புள்ளி எனப் பெயர் என்பது எனது முடிபு.  இங்கே புல்லட் என்பதைக் குண்டு, ரவை, தோட்டா என்றா சொல்ல முடியும்?  ஆக, புல்லட் என்பதற்குக் குத்துப்புள்ளி என்று அனைவரும் பயன்படுத்தலாம் என்று இதனால் அறிவிக்கிறேன்!

கூகுளில் கூடத் தேடிப் பார்த்தேன். மெய்யெழுத்துக்கு வைக்கும் புள்ளியைத் தான் சிலர் குத்துப்புள்ளி என்று வழங்கி வந்துள்ளனர். ஆனால், அதனை வெறும் புள்ளி அல்லது மெய்ப்புள்ளி என்று சொல்வதே போதுமானதும் ஏற்கனவே வழங்கி வருவதுமாகும். அதனால், குத்துப்புள்ளி என்றால் bullet (in a list) என்பதே. இந்தப் பயன்பாட்டை, பாவனையை வேறு யாரும் அறிந்திருந்தால் அது பற்றி அறியத் தந்து வலுச்சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (எத்தனை பொற்காசுகள் இக்கண்டுபிடிப்புக்குக் கிடைத்தாலும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம்  ). தவறெனிலும் சுட்டிக் காட்டுக. (ஆனால், அதற்குப் பரிசு ஒன்றும் கிடையாது).

குத்துப்புள்ளியிட்டுச் செய்ய வேண்டிய உருப்படிகளை (items) எழுதி வைத்தால் மட்டும் ஆயிற்றா? அதனைச் செய்ய வேண்டுமே. இல்லையெனில் பட்டியல் வளர்ந்து பெற்ற பிள்ளைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது மட்டும் தான் மிஞ்சும்.

நிற்க. நான் அப்படி ஒன்றும் மோசமானவனில்லை என்று சுயக்காப்பு வாதத்தையும் இங்கே வைக்க வேண்டும். அவ்வாறான ஒரு தோற்றப்பிழைக்கான காரண காரியத்தையும் அடுக்க வேண்டும். (மூச்! இங்கே நீங்கள் எதுவும் சொல்ல அனுமதியில்லை:-) ).

முதலில், செய்ய வேண்டியன பட்டியலில், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய வேலைகள் இருப்பின் அதை மீண்டும் மீண்டும் தாளில் எழுதி அடிக்க வேண்டும். ஒரு தாளில் பாதி அடித்தும் பாதி இன்னும் உயிரோடும் இருக்கும் போது ஒரு ஒழுங்கு நேர்த்தி கருதி, வேறோர் தாளெடுத்து இன்னும் மிச்சம் இருப்பதை மட்டும் எழுதி வைக்க வேண்டும். அல்லது சட்டைப் பையில் வைத்திருந்த காகிதம் வெய்யல், மழை, வியர்வை, போன்று வேறு பல காரணிகளால் பாழ்பட்டுப் போகும் போது, மீண்டும் புதிய தாள், இற்றைப்படுத்திய பட்டியல் என்று மாற்ற வேண்டும்.

இந்தக் காரணங்களால், தாளில் போடப்படும் பட்டியலுக்குச் சில குறைபாடுகள் இருக்கின்றன. கணினிகளும், கையடக்கக் கருவிகளும் வந்துவிட்ட இக்காலத்தில், மின்பட்டியல்கள் இவ்வேலையை மிகவும் எளிதாக்குகின்றன. ஒரு முறை செய்யவேண்டிய வேலை, காலத்தில் மீண்டும் மீண்டும் செய்யவேண்டியது என்று அமைத்து விடலாம். புதிய இடுகையை, இவ்வேலை முடித்தவுடன் உண்டாக்கு என்றோ, குறிப்பிட்ட தேதியில் மீண்டும் உண்டாக்கு என்றோ தொடக்கத்திலேயே அமைத்துவிடலாம்.

இப்படி ஒரு பட்டியல் போடவேண்டும் என்றே கேசியோவின் கைக்கருவி ஒன்றை தொண்ணூறுகளில் வாங்கி வைத்திருந்தேன். ஓரிரண்டு வருடம் நல்ல உழைப்பைத் தந்த அக்கருவி, பொட்டுபொசுக்கென்று ஒரு நாள் உயிரை விட்டது. ஊழ்வினையின் காரணமாய் அதில் இருந்த தரவுகள் வேறு எங்கும் சேமிக்கப்படவில்லை. கணினிக்கு இணைக்கும் வழிவகைகள் அன்று அதற்குக் கிடையாது.

ஏதோ, இக்கருவிக்கும் முன்னரான தாள்களில் அமைந்த திட்டத் தரவுகள், முகவரிகள் போன்றவற்றை இன்னும் வைத்திருந்ததால் (நாம் தான் பழையதை அவ்வளவு எளிதில் தூக்கி வீசிவிட மாட்டோமே  ), மீண்டும் பொறுமையாக என்னால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது.

அதன் பிறகு, 1995/96 காலகட்டத்தில், பால்ம் பைலட் என்னும் செங்கல் எடையில் ஒரு கருவி சந்தைக்கு வந்தது. கணினிக்கு இணைப்புக் கொடுத்துத் தரவுகளைக் கைக்கருவியிலோ கணினியிலோ ஏற்றிக் கொள்ளலாம்; ஆக, ஒரு பிரதி சேமிப்பில் இருக்கும் போன்ற நற்காரணங்களால், அதிலும் ஒன்றை வாங்கி வைத்தேன். அதுவும் ஓரிரண்டு வருடங்கள் உழைத்துப் பின் உடைந்து போக, பால்ம்-2 (அ) 3, பிறகு பால்ம் Z22 என்று பலவும் வாங்கினேன். முகவரிகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள உதவிய அளவிற்குச் செய்யவேண்டியன பட்டியலுக்கு இவை பெரிதாய் உதவவில்லை. இதற்கான காரணம் கருவியன்று, கருத்தா தானே என்பது தெளிவாய் இருந்திருக்க வேண்டும்.

கையிலே ஒரு தாளிலே குத்துப்புள்ளியிட்டு எழுதி, அதனைச் செய்து முடித்தபின் பேனாவைக் கொண்டு அழுத்தம் திருத்தமாக அதனைக் கோடிட்டு அடித்து நீக்குவதில் இருக்கும் அந்த நிறைவு, மின்கருவிகளில் தெரியும் பொட்டியில் ஒரு ‘டிக்’ பொட்டு வைத்து அது தானாக அவ்விடுகையை நீக்குவதிலோ, அடித்துக் காண்பிப்பதிலோ இருக்கவில்லை. அதனால் மீண்டும் தாள்/பேனா/கை முறைக்கே மாறிக்கொள்ளலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் பிராங்க்ளின் கவி என்னும் மொட்டைதலையர் ஒரு புதிய முறையைக் கொண்டு வந்து புகழ் பெற்றும் வணிகம் செய்தும் பரப்புரை செய்து கொண்டிருந்தார்.

சரி, அதையும் செய்து பார்ப்போமே என்று ஓரிரண்டு வருடங்கள் இறங்கிப் பார்த்தேன். சுருக்கமாகச் சொன்னால், அவரது முறையில் வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்று நம்மைக் கேட்டுக் கொன்டு அதனை ஒரு முதன்மைப் பட்டியலில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் இருந்து இந்த மாதம் என்ன செய்து முடிக்கலாம் என்று மாதப்பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை அதனைப் பரிசீலித்து, அதிலிருந்து செய்யவேண்டியவை பற்றிய பட்டியல் எடுத்து எவற்றை என்று செய்வது என்று அந்த வாரம் முழுவதுக்கும் அந்தந்த நாளுக்குரிய நாட்காட்டிப் பக்கத்தில் எழுதிக் கொள்ள வேண்டும். அவற்றையும் முக்கியமானது, செய்தால் நல்லது, செய்யாவிட்டாலும் பரவாயில்லை (:-) ) போன்ற வகைப்படுத்திக் குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் செய்ய முடியவில்லை என்றால், அவற்றை எடுத்து மறுபடி வேறு எப்போது செய்யவேண்டும் என்று எண்ணி அந்த நாளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு எளிமையான சிறு பட்டியலையே வைத்துக் கொண்டு கட்டி அழ முடியாதவன், இத்தனை வேலை செய்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? நானும் எழுதிய ஒன்றையே திரும்பத் திரும்ப அடுத்தடுத்த நாட்களில் எழுதியது தான் மிஞ்சியது. இதை எப்படி இரண்டு வருடங்கள் செய்தாய் என்று கேட்காதீர்கள். நாம் தான் எதையும் எளிதாய் விட்டுவிடும் ஆள் அல்லவே.

இணையம் பரவலான காலத்தில் இணைய தளங்களிலேயே இப்படிப் பட்டியலிட்டுக் கொள்ளும் வசதி வந்து குவியத் தொடங்கிவிட்டது. நானும், அதில் ஒவ்வொன்றையும் போய்ப் பார்த்து முயன்று கொண்டிருக்கத் தொடங்கினேன். அவர்களும் வேண்டிய வேண்டாத வசதிகளை எல்லாம் தொடர்ந்து தரவே முயன்று கொண்டிருந்தார்கள். அதில் கடந்த சில ஆண்டுகளில் பரிசோதித்த சில:

RememberTheMilk.com

Gubb.net

Google Tasks

இதற்குள் ஆப்பிள் வெளியிட்ட ஐபோனைக் கண்டு மயங்கி பால்ம்-ஐ விட்டு அதற்குத் தாவினேன். முகவரிகளைச் சேர்த்து வைக்கவும், காலண்டர் எனப்படும் நாட்காட்டி/நினைவுபடுத்தியினைப் பயன்படுத்தவும், செய்யவேண்டிய பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதெல்லாம் அதனை வாங்க நியாயப்படுத்திய காரணங்கள். ToodleDo.com என்னும் வலைத்தளத்தினையும் அதன் இணையான ஐபோன் செயலியையும் வைத்திருக்கிறேன் (இங்கே பயன்படுத்துகிறேன் என்று சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மிக நுட்பமான ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும்  ).

அண்மையில் டேவிட் ஆலன் என்பார் ஒருவர் ‘செய்வன செய்து முடித்தல்’ (Getting Things Done) என்று அவரும் ஒரு திட்டத்தையும் அதற்கான புத்தகங்கள், அறிவுரைக் கூட்டங்கள் என்று தானொரு வணிகம் செய்து வருகிறார். எனது அலுவலகத்தில் ஒரு குழுவில் அதுபற்றிக் கேட்கப் போக, அங்கு அவர் எழுதிய புத்தகம் கொடுத்தார்கள். அவர் கூறும் முறை கேட்க நன்றாகத் தான் இருந்தாலும், அதனைச் செயல்படுத்த இறங்கலாமா என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. எளிமையாக இல்லாத எதுவும் நிலைக்காது. அதனால், அவர் கூறுவதில் இருக்கும் சில நல்லவற்றை, பிடித்தவற்றை எடுத்து நமது சொந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு வகையில், செய்கிறோமோ இல்லையோ, திட்டங்களைப் பட்டியலில் போட்டு வைத்துக் கொண்டாலே, அவற்றை நினைவு வைத்திருக்கிறோமா, மறந்துவிட்டோமா என்பன போன்ற மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளவேனும் குறைந்தபட்சப் பயனை இப்பட்டியல்கள் தருகின்றன என்பேன்.

இப்போது குத்துப்புள்ளித்தாள், ஐபோன், டூடுள்டூ போன்ற பலவற்றையும் கலந்து கட்டி ஆடிவருகிறேன். இவையெல்லாம் சொந்த வேலைகளுக்கு. அலுவலக வேலைகளுக்குத் தனியாக மைக்ரோசாவ்ட் அவுட்லுக், சேர்ப்பாயிண்ட்டு, எக்சல் பட்டியல் என்று அதன் கதை தனியாக நீளும்.

இவ்வாறாகப் பட்டியல் போடும் முறைகளையே ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளும் அளவிற்குத் திறம்படச் செய்து வரும்போது, என்னையும் என் பட்டியல்களையும் பார்த்துக் கிண்டல் செய்வது நியாயமா என்று நீங்கள் தான் கூறவேண்டும்.

புதியன புகுதலும்
புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! "

பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?

"அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்"

எப்போதோ ஒரு முறை இயூஸ்டன் நாசாவிற்குச் (NASA, Houston, Texas) சுற்றுப் பயணம் போயிருந்தபோது அது போன்ற இடத்தைப் பார்த்ததாய் மங்கலாய் நினைவு. அப்போது அவள் பிறந்திருக்கவில்லை.

ஈர்ப்பின்றி ஓரிடம் புவியில் எப்படி இருக்க முடியும்? ஈர்ப்பற்ற தன்மைக்கு நெருக்கமாகச் சமன்படுத்திக் கொடுக்கும் சமலாக்கி (simulator) இருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை. என் சிந்தையைக் கலைத்துச் சத்தம் வந்தது.

"அப்படி ஒரு இடம் இருந்தா அங்க போலாம்ப்பா… எங்களக் கூட்டிட்டுப் போங்க!"

"சரி, சரி. தேடிப் பாக்கறேன். இல்லாட்டி இயூஸ்டன் பக்கத்துல இருக்கற நண்பர்கள் கிட்டக் கேட்டுப் பாக்கறன்".

இப்படித் தான் பல விசயங்கள் செய்கிறேன், பார்க்கிறேன், என்றும், பிறகு என்றும் தள்ளிப் போட்டுத் தள்ளிப் போட்டு, இதெல்லாம் இப்போது இவர்களுக்கு ஒரே கிண்டலாகப் போய்விட்டது. அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால், சிலசமயம், "மறந்துட்டீங்களா அப்பா?" என்றால், "இல்லடா, என் பட்டியல்ல போட்டு வச்சுருக்கேன்" என்று சொன்னால், "ஓ! போச்சு! அந்தப் பட்டியலுக்குப் போச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான். மறந்துரலாம்" என்று நக்கல் பேச்சால் என்னை அடிப்பார்கள்! புதியதாகச் செய்ய வேண்டியது ஒன்றைப் பற்றிய பேச்சென்றால், "ஓ! வேண்டாம்ப்பா. தயவு செஞ்சு அந்தப் பட்டியல்ல மட்டும் போட்டறாதீங்க", என்பர்.

இதனாலேயே மறவாமல் அது பற்றித் தேடிப் பார்த்தாலும், நாசாவிலோ வேறெங்குமோ அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை அலுவல் காரணமாகக் கனடா சென்று திரும்புகையில் தற்செயலாகக் குளோபு & மெயில் (The Globe and Mail) என்னும் அந்நாட்டுச் செய்தித்தாளில் காற்றுத் தூம்பு (Wind Tube/Tunnel) பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். ஸ்கை-வென்ச்சர் என்று ஓரிடம் கியூபக் மாநிலத்தின் மொன்ட்ரியால் நகரில் இருப்பதாக அறிந்தேன். இணையத்தில் மீண்டும் தேடியதில் அது போல் ஃபுளோரிடாவில் கூட உண்டு என்பது தெரிய வந்தது.

இரண்டுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதும் செலவு அதிகமாகும் என்றும் தயங்கினேன். என்னவோ இவள் தான் பொறுப்பேற்றுக் கொள்வது போல், "செலவு பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. Spare no expense" என்கிறாள். அந்த விளையாட்டுப் பேச்சும் எனக்குப் பிடித்திருந்தது. சென்ற வேனிற்கால விடுப்பில் மொன்ட்ரியாலுக்கு ஒரு பயணத் திட்டம் போட்டோம்.

மகள்களை விட நான் தான் உற்சாகமாக இருந்தேனோ தெரியவில்லை. அல்லது அவர்களது உற்சாகம் தான் என் மீது தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை. கனடாவின் குடிவரவு வாயிலில் "கனடாவில் என்ன பண்ணப் போறீங்க?" என்றதற்குக் கூட நான் "ஸ்கை-வென்ச்சருக்குப் போறோம்" என்று சொன்னேன். என்னவென்று தெரியாமல் சற்று யோசனையாய் விழியுருட்டிப் பார்த்தவரிடம், பக்கத்தில் இருந்த மனைவி தான், "ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்" என்று சொல்லி எங்கள் இருவரையுமே காத்தார். தங்கும் விடுதியில் கூட "ஸ்கை-வென்ச்சர்"க்கு வழி சொல்லுங்க என்று கேட்டபோது, "எந்தப் பகுதியிலங்க இருக்கு?" என்று எங்களிடமே திருப்பிக் கேட்டபோதே எனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இடமென்று நான் நினைத்தால், உள்ளூரிலேயே யாருக்கும் தெரியவில்லையே.

ஒருவழியாகக் காலையில் நேரமே கிளம்பிச் சாப்பிடாமல் கூட, மொன்ட்ரியாலின் புகழ்பெற்ற செயிண்ட் வியட்டர் பேகல் (St.Viateur Bagel) வாங்கிக் கொண்டு வழியிலேயே சாப்பிட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தால்,

"இன்னிக்கு நீங்க தான் முதல்ல வந்திருக்கீங்க. உங்களத் தவிர இன்னும் ஒரு குழு தான் இருக்கு. ஆனா, இன்னொரு அரை மணி கழிச்சு வாங்க, இன்னும் திறக்கவே இல்லை", என்று எம் ஆர்வத்திற்கு அணைபோட்டுத் தடுத்தார்கள்.

மணிக்கு நூறு மைல் வேகத்தில் காற்றூதி (blower) கொண்டு செலுத்தப்படும் காற்றில் பறப்பது போல் மிதப்பது பரவசமாகத் தான் இருந்தது. விண்வீழ் விளையாட்டு வீரர்கள் இது போல் தான் உணர்வராம். மொத்தமாக, பாடங்கேட்டதும், நாலு பேரும் இரண்டு முறை மிதந்ததும், சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

"இந்தச் செலவு செஞ்சு இங்க வந்ததுக்கு, பேசாம, இலண்டன், பரீ (Paris)னு போயிருக்கலாமாட்ட இருக்குதே", என்றார் மனைவி.

வெளியே வரும்போது பிடித்திருந்ததா என்று கேட்டபோது, "நான் நெனச்ச மாதிரி இல்லப்பா; ஆனா இதுவும் நல்லாத் தான் இருந்துச்சு" என்றாள் மகள். மற்றவளோ தோளை மட்டும் குலுக்கினாள்!

"ஆமாங்க. அவ்வளவு ஒண்ணும் மோசமில்ல" என்றார் மனைவி. எனக்கென்னவோ, "நான் மொதல்லயே சொன்னேன்" என்று தான் கேட்டது

"அடப் போங்கப்பா, புதியன புகுதல் பற்றி எங்காளுங்க அன்னிக்கே சொல்லி இருக்காங்க. புதிய அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை", என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

உங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்ள, இங்கே:

கிரந்தம் (இயன்றவரை) தவிர்
"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான்.

தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் பழக்கத்தில் நான் பார்த்திராத என் தாத்தாவின் பெயரான ‘ராசா’ வை ஒட்டித் தான் எனக்கும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், முப்பது நாற்பது வருசத்திற்கும் முன்பே நவீனமாகிப் போன நாட்டில் என் பெயரிலும் ராஜ் என்று தான் அந்த ஒட்டு சேர்ந்து கொண்டது. உண்மையில், எனக்குப் பெயரை வைக்கும்போது ராசு என்று சொன்னார்களா ராஜு என்று சொன்னார்களா எனத் தெரியவில்லை.

எனது ஆத்தா, அம்மாயி, தாத்தா எல்லோரும் என்னைச் ‘செல்வராசு’ என்று தான் அழைப்பார்கள். தம் காலத்தின் கடைசி நாட்கள் வரைக்கும் "செல்வராசு, எப்பாயா வருவ?" என்று கேட்டுக்கொண்டே இருந்த அந்தக் குரல்களில் ஒரு வாஞ்சை இருக்கும். மிக நெருக்கம் தரும். எனது வீட்டில் மட்டுமல்ல. என் நண்பர்களின் வீட்டிலும் ஆத்தாக்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள். பள்ளி விடுப்பு நாட்களில் நண்பன் செந்தில் வீட்டுக்குப் போனால், அவனது ஆத்தாவும் அம்மாயியும் கூட என்னைச் ‘செல்வராசு’ என்று தான் சொல்வார்கள்.

"டேய் செந்திலு, செல்வராசு வந்துருக்கான். சீக்கிரமா வாடா" என்று சத்தமிட்டு அவனை அழைப்பார்கள். இன்னொருவன் என் வீட்டுக்கு வரும்போது, "டேய் ஷிவா" என்று யாரும் இதுவரையும் அழைத்ததில்லை. "என்ன சங்கரு? அம்மா நல்லாருக்காங்களா?" என்று தான் பேசுவார்கள்.

இப்போதும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் ராசாவையன் கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். அருகில் தான் சொந்த ஊர், சனம், அப்பா வாழ்ந்து இப்போது குட்டிச் சுவராய் இருக்கும் வீடு எல்லாம் இருக்கும்.

அங்கும் நேரில் பார்த்தவுடன் ஊர்ச்சனம், "வாங்காயா, வாப்பா" என்று வரவேற்பார்கள். "செல்வராசு, எப்பாயா வந்த?" என்று விசாரிப்பார்கள்.

இருந்தும் பழகிப் போனதால் செல்வராஜ் என்றே நான் எழுதி வந்தேன்.

நான் பள்ளியில் படித்த போது ‘சுதந்திரம்’ என்றொரு தமிழ் ஆசிரியர் இருந்தார். இந்தியா சுதந்திரம் வாங்கிய அன்று பிறந்தார் என அவர் வீட்டில் அப்படிப் பெயர் வைத்தார்களாம். சுதந்திரமாக வளர்ந்த தமிழய்யா நன்கு நெடுநெடுவென்று வளர்ந்து நெட்டையாக இருப்பார். அவரின் பேச்சும், சிரிப்பும், கிண்டலும், கலகலப்பும் அவருடைய வகுப்பைச் சுவாரசியமாக வைத்திருக்கும். இப்போது அவர் பற்றி நிறைய மறந்து விட்டது. எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. சுதந்திரம் ஐயா ஒரு முறை எனக்குப் பேச்சுப் போட்டிக்குப் படிக்க எழுதிக் கொடுத்தவர், அந்தத் தாளில் என் பெயரைச் செல்வராசு என்றோ செல்வராசன் என்றோ எழுதியிருந்த ஞாபகம். அப்போது தான் முதலில் வடமொழி நீக்கி எழுதுதல் என்னும் கருத்தைப் பற்றித் தெரிந்தது.

அப்புறமும் என் பெயரில் ராஜ் என்றே தான் இருந்தது. எதையும் அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்கிற ஆள் அல்லனே நான். அதோடு, அது பற்றியெல்லாம் நான் அதிகம் யோசித்துப் பார்க்கவில்லை. கல்லூரி முடித்து அமெரிக்க வந்தபிறகு ஒருநாள் நான் ‘சந்தோஷம்’ என்று எழுதியிருந்த ஒரு கட்டுரை/கடிதம் பார்த்துவிட்டு நானறிந்த அக்கா ஒருவர்:

"ஏப்பா? நல்லா எழுதற ஆனா ஏன் வடமொழியில எல்லாம் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கே?" என்று கேட்டார்கள். எனக்குச் சற்றுக் குழப்பம் தான். அவரிடமே கேட்டேன்:

"மொத்தமா வடமொழி எழுத்துன்னு எப்படிங்க்கா ஒதுக்கறது. எம் பேர எழுதறதுக்கே வேணுமே". பரணியக்காவுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டுவிட்டார்கள்.

பிறகும் பெரிதாக நான் இது பற்றி ஆராய்ந்தோ எண்ணியோ பார்க்காமல் இருந்தேன். இருப்பினும், இணையம் வழியாகப் படித்ததிலும் கவனித்ததிலும், மணிப்பிரவாள நடை பற்றியும், சில மக்கள் தேவையில்லா இடத்திலும் இக் கிரந்த எழுத்துக்களத் தூவி விடுவதையும் பார்த்தேன். சிலர் அறிந்தேயும் பலர் அறியாமலும் அப்பழக்கத்தை அடைந்திருக்கலாம்.

பிறமொழியில் இருந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்வதையும், கடன் வாங்கிக் கொள்வதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால், முதலில் தமிழிலேயே அதற்கு இணையான சொல் இருக்கிறதா? அதனையே ஆள முடியுமா? இல்லை ஆக்க முடியுமா? என்று பார்த்துவிட்டுப் ஏற்றுக் கொள்ளலாம். தொல்காப்பியனே வடசொல், திசைச்சொல் என்று அவற்றை ஏற்றுக் கொள்ளும் வழிமுறையைக் காட்டி இருப்பது போல், தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதுவதும் புளங்குவதும் புழங்குவதும் போதுமே?

இல்லையெனில், இன்னும் செயலாளர் போன்ற நல்ல சொற்களுக்குக் காரியஸ்தன் என்று எழுதுவதைத் தான் பார்க்க வேண்டியிருக்கும். அவஸ்யம் ஸ்வாமி என்பது போல், என்னுடைய பதிவுக்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் நண்பர் கூட எழுதுவதைக் கண்டிருக்கிறேன். அவசியம் அப்படித்தான் எழுத வேண்டுமா சாமி? என்று எனக்குத் தோன்றும். ஆனால், ஒன்றும் சொல்வதில்லை.

ஆக, கிரந்தம் என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்துச் சரியே என்று எனக்கும் பட்டதால் அதை ஏற்றுக் கொண்டு இயன்றவரை அதனைத் தவிர்த்து எழுத ஆரம்பித்தேன். குறைந்தபட்சம் தமிழை எழுதக் கிரந்தம் தேவையில்லை. இப்படி ஒரு எழுத்து முறையும், அந்த ஐந்தாறு எழுத்துக்களும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? எப்படியேனும் தமிழ் எழுத்துக்களை வைத்தே Jefferson–ஐச் செஃபர்சன் என்று எழுதியிருக்க மாட்டோமா?

இருப்பினும் அயலகப் பெயர்கள், அறிவியல் சொற்கள் இவற்றை எழுதப் பல இடங்களில் கிரந்தப் பயன்பாட்டிற்குப் பழகிவிட்டோம் என்பதால் ஐதரசன் என்று எழுதினால் குழப்பமாகத் தான் இருக்கும். ஒரு கட்டுரையில் ஏரி பாட்டர் என்று எழுதிப் பார்த்தபோது குழப்பம் தரும் என்று ஹேரி பாட்டர் என்று மாற்றிக் கொண்டேன். கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு ஹைட்ரசன் என்று எழுதலாம், ஹைட்ரஜன் என எழுதத் தேவையில்லை. இதுபோன்ற சுவாரசியமான உரையாடல்களையும் கருத்துக்களையும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அவ்வப்போது பார்க்க முடியும். கிரந்தம் தவிர்த்து எழுத நினைப்பவர்கள் அங்கு எழுதும்போது அவர்கள் தமிழ்த்தாலிபான்கள் என்பன போன்று எதிர்கொள்ளும் தாக்குதல்களும் அதிகம். அவற்றையும் மீறித் தமிழ்ச்சூழலில் கிரந்தம் தவிர்த்து எழுதுவோர் இன்று அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். பார்க்க: புல்வெளி.காம்

முடிந்தவரை கிரந்தம் கலக்காத தமிழில் எழுத எல்லோரும் முயலலாமே. அட! ஒரு நிமிடம் பொறுங்கள். அதெல்லாம் முடியாது என்பீர்களானால் நான் உங்களை ஒன்றும் சொல்லப் போவதில்லை. இயன்ற வரை நான் அப்படி இருக்கப் போகிறேன். அது பற்றி நீங்கள் பெரிது பண்ண வேண்டாம் எனவும் கேட்கிறேன். இதனால் எல்லாம் தான் எனது பெயரையும் தமிழில் எழுதுவதைச் செல்வராசு என்று அண்மையில் மாற்றிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால், பழகிப் போன ஒன்றில் இருந்து மாறுவது முதலில் எளிதாய் இல்லை. ஆனால், இப்போதெல்லாம் எந்த வித்தியாசமும் தெரியாமல் மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.  நீங்கள் என்னைச் செல்வராஜ் என்றோ செல்வராசு என்றோ உங்கள் விருப்பம் போல் விளித்துக் கொள்ளலாம்.

நுரை மட்டும் போதும்: கதையின் கதை
எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.

Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள்.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் - என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி.

நுரை மட்டும் போதும் (Just Lather, That’s All) என்னும் இந்தக் கதையே இவரது கதைகளில் மிகவும் அறியப்பட்ட ஒன்று. ஒரு வகையில் இவரது கதை அண்மைய சில நிகழ்வுகளுக்கு உருவகமாகப் படுகிறது எனக்கு. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு நாவிதனை, ஒரு சாதாரணனை, ஒரு இராணுவத்தானைக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டால் என்ன என்று எண்ண வைத்து ஒரு மனப்போராட்டத்திற்கு ஆளாக்கும் அளவுக்கு நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது சகாக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதைப் பார்த்த போதும், சக உயிரைப் பறிக்க முடியாதென்னும் நிலையில் இருப்பவனை ஒரு விளிம்பு நிலையில் காட்டும் கதாசிரியன், அந்த விளிம்பைத் தாண்ட அவனைத் தள்ள வேண்டியது அதிகமில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவனைக் கொல்வதும் சுலபமான ஒன்றல்ல என்பதை அந்தப் படைவீரனையும் கொண்டே சொல்லிச் செல்கிறார். படைவீரனோ, அரசோ, தனது மக்களையே கொன்றழிப்பதை அரச/அதிகார வன்முறை என்று தானே எடுத்துக் கொள்ளமுடியும்? எழுதியதைச் சற்றே மாற்றிக் கதையின் நாயகன் பகைவனின் கழுத்தினுள் கத்தியை இறக்குவதாய் முடித்திருந்தால் அப்போதும் அவன் செய்தது சரி என்றோ தவறு என்றோ வாசகனால் மதிப்பிட்டிருக்க முடியுமா? சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை இக்கதை கிளறுகிறது, என்றாலும் இங்கு நான் சொல்ல வந்தது அவையுமல்ல.

இந்தக் கதையை நான் அறிந்தது, எனது மகள் நிவேதிதா மூலம். இங்கே பள்ளிகளில் இக்கதை மிகவும் படிக்கப் படும் ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற சிறந்த கதைகளையும் படித்து, அது குறித்த அலசல்கள், கேள்வி பதில்கள், அது தூண்டும் சிந்தனைகள், கதை பற்றிய விமர்சனங்கள் என்று பல நடக்கின்றன. இத்தனைக்கும் இவை அனைத்தும் ஏழாம் வகுப்பிலேயே நடக்கிறது.

மொழிக் கல்வி தானே என்று இங்கே யாரும் அசட்டையாக இருப்பதில்லை. இலக்கியமாக இருந்தாலும் சரி, இலக்கணமாக இருந்தாலும் சரி, மிகவும் ஆழ்ந்தும், விரிவாகவும் படிக்கிறார்கள். மொழி என்ன வாழ்க்கைக்கு உதவவா போகிறது, "சோறு போடுமா?", என்று அலட்சியப்படுத்தும் கேள்விகள் இங்கு கேட்கப் படுவதில்லை.

ஒரு சான்னட் 14 வரிகள் கொண்டது, ஒரு ஹைக்கூவிற்குப் 17 அசைகள் என்று எண்ணி எண்ணி இங்கு பள்ளி மாணவ மாணவியர் கவிதைகளும் எழுதிப் பயில்கின்றனர். ஏன்! மூன்றாம் நிலையில் இருக்கும்போதே poetry café என்று நந்திதாவின் வகுப்பில் (இரண்டாண்டுகள் முந்தைய நிகழ்வு) நடந்த ஒரு நிகழ்விற்குப் பெற்றோரை அழைத்து மாணவர்கள் எழுதிய கவிதைகளை இது இது இன்ன வகைக் கவிதை என்று பலவற்றையும் அவர்களையே படித்துக் காட்டச் சொல்லிச் சிறப்பாகச் செய்தனர்.

"யாப்பு, அசை, சீர், தளை இதெல்லாம் கஷ்டங்க", என்று யாரும் புகார் செய்வதுமில்லை.

"ஒற்று, சந்தி இவையெல்லாம் இல்லை என்றால் என்ன அழிந்துபட்டது? காலத்துக்கு ஏத்தமாதிரி நம்ம எழுத்து, இலக்கணம் எல்லாத்தையும் மாத்தணுங்க", என்று வியாக்கியானங்கள் பேசுவதில்லை.

நிவேதிதா இந்தக் கதை பற்றிய வீட்டுப்பாடத்தில் என்னிடம் ஏதோ கேள்வி கேட்டபோது, அதைப் படித்துவிட்டுக் கதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன். நான் ஒரு நாள் இதை மொழிபெயர்க்கப் போகிறேன் என்றும் சொன்னேன். இது போல நிறையச் சொல்லி இருக்கிறேன் என்பது வேறு விசயம். வர்ஜீனியா மாநிலத்தின் வரலாற்றை அவள் படிக்கும் போது, நானும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறேன். Give me liberty or give me death என்று அறைகூவிய பேட்ரிக் ஹென்றியை அவளின் வழியாகத் தான் அறிந்தேன். தாமசு ஜெப்பர்சன், வாசிங்டன், ஏமில்ட்டன் போன்றோரையும் பற்றிப் படிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டதும் என் மகள்கள் மற்றும் அவர்களது பள்ளிப் பாடங்கள் வழியாகத் தான். ஏனையவற்றை இதுவரை செய்யாது போனாலும் இவ்வாரம் இக்கதையைத் தமிழாக்கம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியே.

இப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும்.

நுரை மட்டும் போதும் - எர்ணான்டோ டேய்யசு
மூலம்:

Espuma y nada más  -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez)

ஆங்கிலத்தில்:

Just Lather, That’s All  -டானல்டு யேட்சு (Donald A. Yates)

தமிழில்:

நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)

உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, "வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு" என்று நாற்காலியில் அமர்ந்தான்.

அவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள்! வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது.

"குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்" என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

"ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க".

"எத்தன பேரப் பிடிச்சீங்க?"

"பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட".

என் கையில் நுரை ததும்பிய மட்டையைப் பார்த்து நாற்காலியில் பின் சாய்ந்தான். அவன் மீது இன்னும் துண்டு போர்த்த வேண்டியிருந்தது. சந்தேகமே இல்லை. நான் நிலைகுலைந்து போயிருந்தேன். பெட்டியில் இருந்து ஒரு துண்டை எடுத்து அவனது கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனது கட்சிக்கு ஆதரவாளன் என்று என்னை நினைத்துவிட்டானோ தெரியவில்லை.

"நாங்க அன்னக்கிச் செஞ்சத வச்சு இந்த ஊரே ஒரு பாடம் கத்துக்கிட்டிருக்கணும்"

வேர்த்திருந்த அவனது கழுத்தின் அடியில் முடிச்சிறுக்கத்தைச் சரிபார்த்துக் கொண்டே, "ம்" என்றேன்.

"அது ஒரு அருமையான ஆட்டம், இல்லியா?"

"ரொம்ப அருமை", பூச்சு மட்டையை எடுக்கத் திரும்பியபடி சொன்னேன்.

ஒரு ஆயாசத்தோடு கண்களை மூடி, சோப்பு நுரையின் குளுகுளுத் தழுவலுக்காகக் காத்தபடி அமர்ந்திருந்தான். இவ்வளவு நெருக்கத்தில் அவன் என்னிடம் சிக்கியதில்லை. தூக்கில் தொங்கிய நான்கு போராளிகளைப் பார்க்க மொத்த ஊரையும் அந்தப் பள்ளியின் முற்றத்திற்கு அணிவகுத்து வர அவன் உத்தரவிட்ட அன்று ஒரு கணம் நேருக்கு நேர் அவனைப் பார்க்க நேர்ந்தது. ஆனால் சிதிலமாக்கப்பட்ட உடல்களின் காட்சியால், அதற்கெல்லாம் காரணமானவனின் முகத்தைப் பார்க்க இயலாமல் போய்விட்டது. அந்த முகத்தை இப்போது என் கைகளில் பிடிக்கப் போகிறேன். நிச்சயமாக, அப்படி ஒன்றும் அழகற்ற முகம் அல்ல அவனுடையது. வயதைச் சற்றே கூட்டிக் காட்டிய அந்தத் தாடியும் அப்படியொன்றும் பொருத்தமில்லாமல் எல்லாம் போகவில்லை. அவன் பெயர் டோரசு. கேப்டன் டோரசு. கற்பனா சக்தி நிரம்பியவன்; இல்லையெனில் வேறு யார் போராளிகளின் நிர்வாண உடல்களைத் தூக்கிலிட்டு, அவர்கள் உடல்களின் சில பாகங்களை மட்டும் குறியாக்கிப் பயிற்சி நடத்துவார்? சோப்பு நுரையின் முதல் பூச்சைப் பூச ஆரம்பித்தேன். கண்களை மூடியபடியே அவன் தொடர்ந்தான்.

"தூக்கம் சொக்குது. முயற்சியே செய்யாம அப்படியே தூங்கிருவேன். ஆனா இன்னிக்கு மத்தியானம் செய்யறதுக்கு நிறைய இருக்குது".

நுரை பூசுவதை நிறுத்திவிட்டு, ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு, "என்ன துப்பாக்கிச் சூடா?" என்று கேட்டேன்.

"அந்த மாதிரி ஏதோ தான். ஆனா, கொஞ்சம் மெதுவாக" என்றான்.

அவனது தாடியின் மீது நுரை பூசும் என் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அவனால் அதனை உணர முடியாது என்பது எனக்குச் சாதகமானது தான். ஆனாலும், அவன் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று விரும்பினேன். அவன் உள்ளே நுழைவதை எம் குழுவினர் சிலர் பார்த்திருக்கலாம். ஒருவருடைய கூரையின் கீழே எதிரி இருப்பது சில கட்டாயங்களை விதிக்கிறது. அவனுடைய தாடியையும் பிறருடையதைப் போலவே, கவனமாக, மென்மையாக நான் சிரைக்க வேண்டும். எந்தவொரு துளையும் ஒரு துளி இரத்தத்தைக் கூட வெளிப்படுத்திவிடாத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாடிமயிரின் சிறுகொத்துக்கள் சவரக்கத்தியை அலைக்கழிக்காமல் இருக்கும்படி கவனமாக இருக்கவேண்டும். என் புறங்கையை அவன் முகத்தில் தடவும் போது எந்த மயிரும் தட்டுப்படாதவண்ணம் அவனுடைய சருமத்தைச் சுத்தமாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆம், நான் மறைவாய் இருக்கும் ஒரு போராளி தான்; இருப்பினும் நான் மனசாட்சியுள்ள நாவிதனும் கூட. எனது தொழில்சுத்தத்தின் மீது பெருமை உள்ளவன். இந்த நான்கு நாள்த் தாடி எனக்குச் சரியான சவாலைத் தருகிறது.

சவரக் கத்தியை எடுத்து, அதன் இருபக்கக் காப்பு மூடியையும் திறந்து, கூர்மையான பிளேடை வெளிப்படுத்தி அவனது ஒரு பக்கக் கிருதாவின் கீழிருந்து என் வேலையை ஆரம்பித்தேன். கத்தி அருமையாக வேலை செய்தது. அவனது தாடி மயிர் நெகிழ்வற்றுக் கடினமாய் இருந்தது. நீட்டமாய் இன்றிக் கெட்டியாக. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் எட்டிப்பார்த்தது. நுரையும் மயிர்த்துண்டுகளும் கலந்த குவியல் பிளேடின் மீது திரளும்போது எழும் தனித்த ஒலியை எழுப்பியபடி சவரக்கத்தி சுழன்றது. கத்தியைச் சுத்தம் செய்ய ஒரு நிமிடம் நிறுத்தினேன். பிறகு கத்தியைத் தீட்ட மீண்டும் தோல்வாரினை எடுத்தேன். ஏனெனில் நான் என் தொழிலைச் சுத்தமாகச் செய்பவன். இதுவரை கண்களை மூடி இருந்தவன், மெல்லத் திறந்து, போர்த்தியிருந்த துண்டின் அடியிலிருந்து தன் ஒரு கையை வெளியே எடுத்து சவரம் செய்யப்பட்ட ஒரு புறத்தைத் தடவிப் பார்த்துவிட்டு, "இன்னைக்கு மாலை ஆறு மணிக்குப் பள்ளிக்கூடத்துக்கு வா", என்றான்.

"அன்னைக்கு மாதிரியேவா?" திகிலுடன் கேட்டேன்.

"இல்ல. அத விட இது நல்லா இருக்கும்"

"என்ன பண்ணப் போறீங்க?”

"எனக்கு இன்னும் தெரியல. ஆனா, நல்லா கொண்டாடுவோம்னு மட்டும் தெரியும்", என்று சொல்லிவிட்டு மீண்டும் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

எனது கையில் தீட்டிய கத்தியோடு அவனை நெருங்கினேன். "அவங்க எல்லோரையும் தண்டிக்கப் போறீங்களா?" சற்றே பம்மியபடி துணிந்தேன்.  "எல்லோரையும்".

அவன் முகத்தில் சோப்பு நுரை காய்ந்து கொண்டிருந்தது. நான் விரைந்து செயல்பட வேண்டும். கண்ணாடியில் தெருவை நோக்கினேன். அது எப்போதும் போன்றே இருந்தது: மளிகைக் கடையும் அதன் இரண்டோ மூன்றோ வாடிக்கையாளரும். பிறகு கடிகாரத்தைப் பார்த்தேன்: மதியம் இரண்டரை மணி. கத்தி கீழ்நோக்கி இறங்கியது. இப்போது அடுத்த கிருதாவில் இருந்து கீழே. கெட்டியான நீல நிறத் தாடி. சில கவிஞர்களைப் போன்றோ பாதிரிகளைப் போன்றோ இவனும் இதனை வளர்த்திருக்க வேண்டும். அது இவனுக்கு நன்றாகப் பொருந்தி இருக்கும். நிறையப் பேருக்கு அடையாளம் தெரியாமற் போயிருக்கும். அது அவனுக்கு வசதியாய் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். இப்போது கழுத்துப் பகுதியை மென்மையாகச் சிரைத்துக் கொண்டிருந்தேன். அங்கே, நிச்சயமாகக் கத்தியைத் தேர்ந்தமுறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அங்கே முடி மென்மையாக இருக்கும் என்றாலும் சுருள் சுருளாகச் சுருண்டு கிடக்கும். சுருட்டைத் தாடி. நுண்ணிய மயிர்த்துளைகளில் ஒன்று லேசாகத் திறந்து கொண்டாலே ஒரு முத்து இரத்தம் வெளியே தெரியக் கூடும். ஆனால், என்னைப் போன்ற ஒரு நல்ல நாவிதன், தன் எந்தவொரு வாடிக்கையாளனுக்கும் அப்படி ஒன்று நேர்வதை அனுமதிக்காமல் பெருமை கொள்வான். இவனோ முதல்த் தர வாடிக்கையாளன்! எங்களில் எத்தனை பேரைச் சுட இவன் உத்தரவிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரை வெட்டிச் சிதைக்க உத்தரவிட்டிருக்கிறான்? இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருப்பதே நல்லது. நான் அவனது பகைவன் என்பதை டோரசு அறிந்திருக்கவில்லை. அவனுக்கும் தெரியாது. பிறருக்கும் தெரியாது. வெகு சிலருக்கே தெரிந்த ஒரு இரகசியம் அது. அப்போது தான் அவன் ஊருக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரட்சியாளர்களிடம் தெரிவிக்கவும், ஒவ்வொரு போராளி-வேட்டைப் பயணத்திலும் அவன் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்பதை அறிந்து தெரிவிக்கவும் முடியும். அதனால் தான் அவன் என் கைகளில் சிக்கி இருந்தும் அமைதியாக விட்டுவிட்டேன் - உயிரோடும் சவரம் செய்தும் - அனுப்பிவிட்டேன் என்பதை விளக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.

தாடி இப்போது கிட்டத்தட்ட முழுதும் போய்விட்டது. பார்க்கச் சற்று வயது குறைந்தவனாகத் தெரிந்தான். உள்ளே வந்தபோது இருந்ததை விட இப்போது கடந்து போன ஆண்டுகளின் பாரம் குறைந்தவனாகத் தெரிந்தான். நாவிதர் கடைக்குச் செல்லும் எல்லோருக்கும் நிகழும் ஒன்றாகத் தான் இருக்கும். என்னுடைய கத்தியின் வீச்சில் டோரசு புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறான். அவனது புத்துணர்ச்சிக்குக் காரணம் நான் தான். நானே சொல்லிக் கொள்வதாய் இருந்தாலும், நான் ஒரு நல்ல நாவிதன், இந்த ஊரிலேயே சிறந்தவன். இன்னும் கொஞ்சம் நுரை பூச வேண்டும், இங்கே, தாடைக்குக் கீழே, குரல்வளையின் மேலே, புடைத்த பெருநரம்பின் மேலே. எப்படிச் சூடாகி விட்டது! என்னைப் போன்றே டோரசும் வேர்த்துப் போயிருப்பான். ஆனால் அவன் எதற்கும் அஞ்சவில்லை. தன்னிடம் சிறைப்பட்டவர்களை இன்று மதியம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாத அமைதியான மனிதன். ஆனால் என்னாலோ, இந்தக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவன் சருமத்தின் மீது வீச்சும் மறுவீச்சுமாகவும், இவனது நுண்துளைகளின் வழியே குருதி வழிந்துவிடக்கூடாதே என்று முயன்று கொண்டும், சரியாகச் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஒழிக இவன் இங்கு வந்ததற்கு, நான் ஒரு புரட்சியாளன்; போராளி; கொலைகாரன் அல்லன். ஓ, இவனைக் கொல்வது தான் எவ்வளவு எளிது. அதற்குத் தகுதியானவனும் தான். என்ன? அப்படித்தானா? இல்லை! சாத்தானே! வேறொருவனைக் கொலைகாரனாகும் தியாகத்தைச் செய்ய வைக்க யாருக்கும் தகுதியில்லை. அதனால் கிடைக்கும் நன்மை தான் என்ன? ஒன்றுமில்லை. பிறகு வேறு யாரோ வருவார்கள். அதன் பின் இன்னும் வேறு சிலர். முதலாமவர் இரண்டாமவரைக் கொல்ல, பின் அவர்கள் மற்றவரை என்று இந்தக் கதை எல்லாமே ஒரு இரத்தக் கடலாகும் வரை தொடர்ந்து நிகழும். நான் இவனது தொண்டையை எளிதில் வெட்டி எறிந்துவிடலாம், கீச்! கீச்! புலம்புவதற்கான நேரத்தைத் தரவேண்டியதில்லை. கண்களை மூடி இருப்பதால், பளபளக்கும் எனது கத்தியின் கூர் முனைகளையோ, பளீரிடும் என் கண்களையோ இவ்ன் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், நான் ஒரு உண்மையான கொலைகாரனைப் போலவே நடுங்குகிறேன். அவனது கழுத்தில் இருந்து இரத்தம் கொப்பளித்துத் தெறிக்கும். இந்தத் துண்டின் மீது, நாற்காலி, என் கரங்கள், தரை என எல்லாப் பக்கங்களிலும் பாயும். நான் கடையின் கதவைச் சாத்த வேண்டியிருக்கும். வெதுவெதுப்பாகவும், அழிக்கமுடியாமலும், கட்டுப்படுத்தமுடியாததாகவும், இவனது இரத்தம் தரை வழியே சிறுகச் சிறுகப் பெருகி வெளியே சாலையை அடைந்து, ஒரு செந்தாரையாய் ஓடும். ஒரு பலமான வீச்சு, ஒரு ஆழ்வெட்டு போதும். அவனுக்கு எந்த வலியும் இன்றித் தவிர்க்கலாம். அவன் துன்புறப் போவதில்லை. ஆனால் உடலை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? எங்கே அதை ஒளித்து வைப்பது? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒரு அகதியாய், தூரமாக, வெகு தூரமாக, ஓடவேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுபிடிக்கும் வரை பின் தொடர்வார்கள்.

"இவன் தான் கேப்டன் டோரசைக் கொன்றவன். இவனிடம் சவரம் செய்துகொண்ட போது கோழயாகக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்".

அப்புறம் மறுபக்கம் வரும்.

"நமக்காகப் பழி தீர்த்தவன். நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய பெயர் இவனது. (இங்கு தான் என் பெயரைச் சொல்வார்கள்). நம்மூர் நாவிதன். நமது பக்கம் சேர்ந்து போரிட்டவன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை."

இதையெல்லாம் வைத்து என்னாவது? கொலைகாரனோ? வீரனோ? என் விதி இந்தப் பிளேடு முனையில் இருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சம் திருப்பலாம். கத்தியை இன்னும் கொஞ்சம் அழுத்தி உள்ளே இறக்கலாம். தோல்ப் பகுதி ஒரு பட்டுத்துணியைப் போல, இரப்பரைப் போல, இந்த வாரினைப் போல வழி விட்டு ஒதுங்கிவிடும். மனிதனின் தோல் போல மிருதுவான வேறு எதுவும் இல்லை. அதை அடுத்து வெளியே சிந்தத் தயாராக இரத்தம். இது போன்ற ஒரு கத்தி என்றும் தோற்பதில்லை. என்னுடையதில் மிகவும் சிறப்பானது. ஆனால், ஐயா, நான் ஒரு கொலைகாரன் ஆக எனக்கு விருப்பமில்லை. நீ என்னிடம் சவரம் செய்துகொள்ள வந்தாய். நான் என்னுடைய வேலையைக் கௌரவமாகச் செய்வேன்… என் கரங்களில் இரத்தம் வேண்டாம். நுரை மட்டும் போதும். நீ ஒரு கொலைகாரன்; வெட்டியான். நான் வெறும் நாவிதன். உலக இயல்பில் அவரவர்க்கு அவரவர் இடம் உண்டு. அது தான் சரி. அவரவர்க்கு உரிய இடம்.

இப்போது அவனது தாடையும் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் இருந்தது. எழுந்து அமர்ந்து கண்ணாடியைப் பார்த்தான். கைகளால் முகத்தைத் தேய்த்துப் புதிது போலிருப்பதை உணர்ந்தான்.

"நன்றி" என்று சொல்லிவிட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தனது கச்சை, துப்பாக்கி, தொப்பி நோக்கிச் சென்றான். நான் மிகவும் வெளுத்துப் போயிருக்க வேண்டும். எனது சட்டை முழுக்க நனைந்திருந்தது போல் உணர்ந்தேன். டோரசு, தன் கச்சையை இறுக்கிக் கொண்டு, துப்பாக்கியை உரையில் நேர்ப்படுத்திக் கொண்டு, தலையைக் கோதிச் சரிசெய்து கொண்டு தொப்பியைப் போட்டான். என் வேலைக்குக் கட்டணமாய்க் கொடுக்கத் தன் கால்சராயின் பையில் இருந்து சில்லறைக் காசுகள் பல எடுத்துக் கொடுத்தான். பிறகு வெளிக்கதவை நோக்கி நகர ஆரம்பித்தான். கதவின் விளிம்பில் ஒரு கணம் தயங்கி, என்னை நோக்கித் திரும்பினான்:

"நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால், கொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனக்குத் தெரியும், நம்பு" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கலானான்.

ooOoo

பழையன கழிதலும்
"பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ" என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது கதை இங்கு செல்லவும் செல்லாது. தேவையும் இல்லை.

நன்னூல்க்காரர் இதை எனக்கென்றே எழுதி வைத்திருக்கவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. எதையும் எளிதில் விட்டுவிட முடியாமல் சேர்த்து வைக்க முயலும் நான், அண்மையில் இந்தப் பழையன விட்டுவிடுதலில் கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒரு சுதந்திர உணர்வு. பழந்தமிழன் சொல்லி வைத்துப் போன ஒன்றை இப்படியாகச் செய்ய வைத்த பழி பாவத்தை எனது அலுவத்தார் மீது தான் போட வேண்டும்.

வருடத்தில் ஒரு நாளைப் பழையன கழிதலுக்கென்றே ஒதுக்கி வைத்து, அன்று காலை மதியம் எல்லாம் உணவும் தந்து, இன்று முழுதும் நீங்கள் வேலையே செய்ய வேண்டாம்; ஆனால், நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற பழைய கோப்புக்கள், திட்ட ஆவணங்கள், புத்தகங்கள், கணிப்பொருட்கள், இன்ன பிற ஆகாதவை என எல்லாவற்றையும் பரிசீலித்து, முக்கியமானவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டு மற்றவற்றைக் கடாசி விடுங்கள் என்று அறிவித்தினர். இது ஏதோ ஒரு முறை மட்டும் நடப்பதல்ல. வருடா வருடம் ஈற்றுக் காலாண்டில் இந்தப் பண்டிகை நடக்கும்.

நானும் கல்லூரிக் காலத்தில் இருந்து சேகரித்துப் பெட்டி பெட்டியாகச் சென்ற இடங்களில் எல்லாம் தூக்கி அலைந்து கொண்டிருந்த சிலவற்றை அவ்வருடம் அலுவப்போகியில் எறிந்துவிட்டேன். நேரம் இருக்கும்போது படிக்கலாம் என்று மாதா மாதம் தேக்கி வைத்த நுட்ப இதழ்கள் பல ஆண்டுகளில் மலையெனக் குவிந்து கிடந்தன. சில ஆவணங்கள்/கோப்புகள் என்னிடம் இருக்கிறது என்பதே மறந்து போயிருந்தது. சில ஆய்வு அறிக்கைகள் மிகவும் பழசாகி விட்டிருந்தது. அதைவிட முன்னேறிய அறிக்கைகள், தரவுகள் முதலியன தேவைப்படும்போது இணையம் முதலான பிற தரவுதளங்களில் எளிதில் பெற முடிந்தது. சிலவற்றில் குத்தி வைத்த குண்டூசி கூடத் துருப்பிடித்துக் கிடந்தது. சில, இனி வாழ்நாளில் என்றும் தேவைப்படாதது. மொத்தத்தில் அது ஒரு விட்டு-விடுதலையாகும் அருமையான உணர்வாய் இருந்தது. நீங்களும் கூட முயன்று பாருங்கள்.

உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ள, அந்தப் பழக்கத்தை அப்படியே வீடு வரை இழுத்து வந்தேன். கால காலமாய்ச் சேர்த்து வைத்த சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துத் தூக்கி வீசிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும், இன்னும் அந்தப் பத்தாம் நிலையில் வரைந்த விலங்கியல், புதலியல் ஆய்வு ஆவண ஏடுகளை விட்டுவிட முடியாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். மண்டி போட்டுக் கொண்டு புள்ளி புள்ளியாய் வைத்து வரைந்து அலங்கரித்த அந்த நினைவுகளும் எறிந்துபடுமோ என்று தயக்கம். அந்த நாள், இடம், பொருள், வாசனை என்று அனைத்திற்கும் சாட்சியாக இருந்து மனதில் படங்களாகச் சேகரித்து வைத்திருப்பனவற்றை இழந்து விடுவோமோ என்று அச்சம். குறைந்த பட்சம், அதற்கு முன்னர் என் மனைவி, மக்களிடம் அதனைப் பகிர்ந்து கொள்ள மாட்டோமா என்ற கவலைகள். மனைவிக்கோ தனது சொந்தச் சரக்குகள் நிறைய இருப்பதில் இதற்கெல்லாம் நேரம் கிட்டாது. வளர்ந்து வரும் மக்களின் கவனங்களை ஈர்க்க வேறு பல ஈடுபாடுகள் போட்டிக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் உணர ஆரம்பித்திருப்பதில், இப்போது கொஞ்சம் மனம் வந்து இப்பழையனவற்றைப் பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறேன். நம்புங்கள். இது உண்மை தான். இளநிலைப் பொறியியல் அரையாண்டுத் தேர்வுகளுக்காகக் கொடுக்கப் பட்டிருந்த தேர்வறை நுழைவுச்சீட்டுக்களை எல்லாம் இத்தனை ஆண்டுகள் ஆச்சே இனித் தேவைப்படாது என்று சென்ற வருடமே எறிந்துவிட்டேன்!  எல்லாமே போச்சே!

இதிலே வீட்டினுள்ளேயே போட்டி வேறு. நான் தான் நிறையச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மனைவி குற்றம் சாட்டுவதும், ‘அப்படியா, இங்கே வா, இதெல்லாம் யாருது’ என்று அவருடைய மூட்டைகளைச் சுட்டி நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். "அதெல்லாம் என்னோடது. முக்கியமானது. நீ தொடாதே" என்று வீராப்புகள் வேறு. ஆனாலும், இந்தப் பழக்க வழக்கம் எம்மக்களிடமும் தொற்றிக் கொள்ளுமோ என்று இப்போது கவலைப் பட வேண்டியிருக்கிறது. நிவேதிதாவிடம் பிரச்சினை இல்லை. அவளுடைய பள்ளிச் சரக்குகளை அவளை விட நாங்கள் தான் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நந்திதாவிடம் இருந்து எதையேனும் பிடுங்குவதற்குச் சாம தான தண்ட பேதங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. ஏதேனும் ஈனியல் தொடர்பாய் இருக்குமோ என்னவோ!

இவை இருக்க, ஒரு நாள் எனது பள்ளி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தபோது பழைய நண்பர்கள் தொடர்பு விவரங்களை எல்லாம் சேகரிக்க வேண்டும், யார் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், என்றெல்லாம் சேகரிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இத்தனை ஆண்டுகளில் யார் யாரெல்லாம் உடன் படித்தவர் என்பது கூட மறந்து விட்டிருந்தது. என்ன செய்ய? நாம் என்ன செய்து காக்க நினைத்தாலும், கடந்து போகும் ஆண்டுகள் சில பல நினைவுகளையும் கரைத்துவிட்டே தான் செல்கின்றன.

பிறகொரு நாள் என் புதையல் மூட்டைகளில் ஒரு அட்டையைக் கண்டு பிடித்தேன். அதில், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் உடன் படித்த அனைவரது பெயரையும் அவர்கள் பள்ளி முடித்து என்ன செய்யப் போனார்கள், எந்தக் கல்லூரிக்குப் படிக்கப் போனார்கள் என்றும் எழுதி வைத்திருக்கிறேன். இதெல்லாம் தேவையில்லை என்று ஒரு நாள் தூக்கி எறிந்திருந்தால் இன்று அது ஒரு இழப்பாகத் தானே இருந்திருக்கும்? இது தான், இந்த அச்சம் தான் இன்னும் பலவற்றைக் கட்டிக்கொண்டே இருக்க வைக்கிறது.

ஆனாலும், பழைய மூட்டைகளை விடுத்து வாழும் சுதந்திர உணர்வும் ஈர்ப்பதாகத் தான் இருக்கிறது. அதனால் என்ன? படங்களையும், பட்டியலையும், ஆவணங்களையும் எண்ணிமக் கோப்புகளாக வருடி வைத்துக் கொள்ளலாம். இப்படிக் கணினிக் கோப்பாகவும் சேர்த்துச் சேர்த்து வைப்பதையும் ஒருநாள் கழிக்கத் தான் வேண்டும். இவை இடங்களை அடைப்பதில்லை என்றாலும், ஒரு கட்டுக்குள் இன்றி மனத்தகைவுகளுக்குக் காரணங்களாய் இருக்கலாம்.

மீண்டும் எனது நிறுவனக் கொள்கை ஒன்றே இங்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. அண்மையில் அறிவித்த திட்டத்தின் படி இனிமேல் எங்கள் அலுவக் கணிகளில் ஒரு வருடத்திற்கும் மேல் மாற்றாத கோப்புக்களை வைத்திருந்தால், நீக்கி விட வேண்டும் என்பதே. இல்லையெனில், தானாக ஓடும் ஒரு நிரல், அவற்றைக் கண்டுபிடித்து கவனத்தை ஈர்க்கும். ஒரு எச்சரிக்கைக் காலம் தந்து தானாகவே அவற்றை அழித்து விடும். இவையெல்லாம் தகவல் மேலாண்மை என்னும் பெருந்திட்டத்தின் கீழ் வரும் பல கூறுகள்.

காலகாலமாய்க் கூடை கூடையாகச் சேர்த்து சேர்த்து வைத்த பொறியாளர்கள் இது கண்டு பொங்கி முறையிட்டுப் பார்த்தார்கள். இது போல் பெரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மனசு தயாராய் இருப்பதில்லை. ஆனால், பெரிய நிறுவனத்தில் இந்தப் பொங்கலுக்கெல்லாம் வேலையே இல்லை. அப்படிப் பயனுள்ள கோப்பாக இருந்தால் எல்லோருக்கும் உதவும் வண்ணம் பொதுவான பகிர்வலையில் சேர்த்து வை என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் சரி தான் என்று ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். முன்பு போல் வந்தவை, அனுப்பியவை பட்டியலில் அலுவ மடல்கள் அனைத்தையும் பெரும்பாலும் சேர்த்து வைத்த பழக்கம் போய், அவசியம் இருக்கும் மடல்கள் தவிர பிறவற்றை அழித்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்தப் பழக்கத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் தான். ஆனால் படங்களும், அசைபடங்களுமாய்ப் பழைய வடிவங்களில் இருக்கிற நினைவுகளைப் புதிய எண்ணிம முறைகளுக்கு மாற்றிவிட்டுத் தூக்கிப் போடலாம் என்று தள்ளிப் போட்டு வருகிறேன். ஆனால், நான் கேட்கவே போகாத பழைய பாட்டு ஒலிநாடாக்களை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் புரியவில்லை.

பழையன கழிதல் என்றால் இப்படியாகச் சேர்த்து வைத்து குப்பைகளை விடுப்பது மட்டுமல்ல. புறவெளியில் மட்டுமின்றி, அகவெளியிலும் பழையனவற்றைக் கழித்து விட்டுப் புதியனவற்றைச் சேர்க்கலாம்.

மனசுக்குள்ளே சிலவற்றை மறக்கலாம். மன்னிக்கலாம். மாற்றிக் கொள்ளலாம். புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். புத்துணர்ச்சி கொள்ளலாம். எதிலாவது ஈடுபடலாம். ஏன் புத்தாண்டுக்குத் தீர்மானங்கள் கூடச் செய்து பார்க்கலாம். நடக்கலாம். பறக்கலாம். சிறக்கலாம்.

போதும் போதும் என்னும் அளவிற்குப் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்னும் சொற்றொடரையும் இத்தனையாண்டுகளில் படுத்தி எடுத்துவிட்டதில், அதைக் கூடச் சில காலத்துக்குச் சொல்லாது இனி விட்டு வைக்கலாம்.

தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல்
தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம்.  இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம்.  இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே.  வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும்.

இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம்.  புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

திரும்பிக் கணக்குப் பார்க்கும் போது தான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகி விட்டது தெரிகிறது.

“ஆமா, நீங்க இதுவரை நட்சத்திரமா இருந்ததே இல்லையே? ஏன் ஒரு முறை நீங்கள் இருக்கக் கூடாது?” என்று ஒரு நாள் சங்கர் என்னைக் கேட்டே விட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன், இதன் முந்தைய வடிவான ‘வலைப்பூ ஆசிரியர்‘ ஆக ஒரு வாரம் இருந்திருக்கிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். பலிக்கவில்லை. ‘தேவைப்படும் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஏறத்தாழ ஐந்து வாரம் முன்பே எச்சரிக்கை மணியை அடித்தும் வைத்தார்.  நானும் ஒரு தமிழ்மண நிர்வாகியாக இருப்பதால் இந்தத் தனிச்சலுகையை ஆட்சேபிக்காமல் விட்டுவிடும்படியும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.   இருந்தும் என்ன பயன்? தேர்வுக்குக் கடைசி நாளிரவு படிக்கும் கதையாக இந்த வார இறுதியில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முதலில், என்னைப் பற்றி அறிமுகமாகச் சொன்னதில் சிலவற்றை இன்னும் சற்று விரித்துச் சொல்ல நினைக்கிறேன். ஏற்கனவே அறிந்த சிலர் தவிர இத்தனையாண்டுகளில் புதிதாக வலையுலகம் வந்தவர்கள் என்னை அறிந்து கொள்ள இது உதவலாம்.

நான் தமிழகத்தில் ஈரோட்டைச் சேர்ந்தவன்.  ஆனால், ஊரை விட்டு, நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழும் ஒரு அயலகத் தமிழன்.  வளர்பருவத்தில் முழுதும் ஈரோடு நகரத்திலேயே வளர்ந்திருந்தாலும், தமிழகத்தின் எண்ணற்ற கிராமங்களுள் ஒன்றில் பிறந்தவன் என்று எனது கிராமத்துத் தொடர்பைத் தொட்ட குறை விட்ட குறையாக ஏனோ இன்னும் மிச்சம் பிடித்து வைத்துக் கொள்ளவே தோன்றுகிறது.

எனது பெற்றோர்கள் கொங்கு நாட்டின் குக்கிராமங்களில் விவசாயக் குடும்பங்களில் பிறந்து தங்கள் வாழ்நாளில் கிராமங்களில் இருந்து நகரத்திற்குப் புலம் பெயர்ந்தவர்கள். பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் சொகுசான வாழ்க்கை முறையாக இருந்த காலத்தைச் சேர்ந்தவர்கள். ‘அஞ்சாவது வரைக்கும் படிச்சது போதும். ஆடு மேய்க்க ஆள் வேணும்’ என்று அம்மா நின்றுவிட்டதாய்ச் சொல்வார்கள். கொஞ்சம் ஆழ விசாரித்தால், “அவங்கல்லாம் ஒன்னும் சொல்லல. நாந்தான் போமாண்டீட்டன்” என்று உண்மை வெளிவரும்.

அப்பா பக்கத்து உண்மையோ இன்னும் கூட எனக்குச் சரியாகப் புலப்பட்டதில்லை. சிறுவயதில் தந்தையை இழந்து ஒற்றைத் தாயின் வளர்ப்பில் சிரமத்தின் இடையே வளர்ந்தவர் பெயருக்குப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார் என்பதும் வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டத்தில் எப்படியோ பள்ளியிறுதிப் படிப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கிறார் என்றுமோ கதை வளரும். ஆக, பள்ளிப்படிப்பு மட்டும் படித்த அப்பா என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு நீதிமன்ற ஊழியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

தலைமுறையில் முதன்முதலில் கல்லூரிக்குச் சென்று படித்தவர் மாமா, ஒரு கல்லூரியில் வணிகத்துறைப் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்.  இரவு நேரத்தில் தொலைபேசி அலுவலகம், சீட்டுக்கடை என்று வேலைக்குச் சென்றுவிட்டுப் பகலில் கல்லூரி சென்று படித்த அவரது காலத்தை நானே அறிவேன். அவரது வழிகாட்டலில் தான் நான் படித்து வளர்ந்தேன்.

இவற்றை எல்லாம் சொல்லக் காரணம், தமது காலத்தில் கல்வி கற்கச் சிரமப்பட்டாலும், என்னுடைய கல்விக்கும் வளர்ச்சிக்கும் எந்தச் சிக்கலும் இடையூறுமின்றி இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த அரணில் கவலையற்றுத் தொடங்கியது என் பயணம். இன்றைய எனது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் அதற்குக் காரணமாய் இருக்கும் கல்விக்கும், வித்தாய் இருந்தவர்கள் என்று சற்று நினைத்துப் பார்க்கிறேன்.

தொழில்முறையில் நான் ஒரு வேதிப் பொறிஞன்.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்பொறியியல், அதன் பின்னர் அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் பல்கலைக்கழகத்தில் முதுநிலையும் முனைவர் பட்டப்படிப்பும் முடித்துப் பின் வேதிப்பொறியல் துறையிலேயே கடந்த பதினாறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

இங்கு புதிதாகச் சந்திக்கும் இந்திய/தமிழக நண்பர்களிடம், “இல்லீங்க, நான் சாஃப்டுவேர் துறையில் இல்லை; ஒரு வேதிப் பொறிஞன்” என்று சொல்லிக் கொள்வதும், அவர்கள், “ஓ! அப்படியா… மென்பொருள் துறையைச் சாராத ஒருவரை இப்போத் தான் பாக்கறேன்” என்று வியப்பதும், சற்று மிகையாக இருந்தாலும் ஒருவித அர்த்தமற்ற பெருமையை எனக்குத் தரும்.

தற்போது ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவப்பொறியியல் துறையில் பணி செய்து வருகிறேன்.  பாறைநெய் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்னைப் பற்றிய ஒரு குறிப்பைப் படித்துவிட்டுப் ‘பாறைநெய்’னா என்னங்க என்று கேட்டார். பெட்ரோலியம் என்பதன் தமிழாக்கமே பாறைநெய் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி, தமிழ்ச்சூழலில் அதனைப் பரவலாக்க என்னால் ஆன சிறு துரும்பைக் கிள்ளி வைத்திருக்கிறேன்.

இன்னும் என் துறை சார்ந்த பலவற்றை எழுத எண்ணமும் ஆசையும் இருக்கிறது. ஆனால், களிப்பாறை வளிமம் என்று விக்கிப்பீடியாவில் எழுத முடிவதை எளிமையாக எப்படிப் பொதுவில் எழுதுவது என்பது சவாலாகத் தான் இருக்கிறது. கரட்டுநெய் என்று எழுதுவதைப் பார்த்துவிட்டு மதிவாணன் போன்ற நண்பர்கள், “டேய், யாருக்காக எழுதுகிறாய்? இன்னும் எளிமையா எழுதுடா” என்கிறார்கள். எளிமையாகவும் அதே நேரம் ஆழமாகவும் எழுதவேண்டும் என்று தான் நானும் எண்ணுகிறேன்.

தற்போது, வாசிங்டன் டிசி அருகே மனைவி,  இரு மகள்களுடன் வசித்து வருகிறேன். எனது பெண்கள் இருவரும் அமெரிக்காவில் பிறந்து வளரும், தமிழைத் தட்டுத் தடுமாறிப் பேசும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.  அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை ஊட்டுவது எப்படி என்பதும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. ஊருக்குச் சென்றிருந்தபோது சந்தித்த உறவுகள், “கொழந்தைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுங்க. இல்லாட்டி பூராவும் மறந்தே போயிரும். நம்ம பலக்கவலக்கமெல்லாம் எதுவுமே தெரியாமப் போயிரும்” என்று எளிதில் சொல்லி விடுகிறார்கள். இவ்வருடம் எங்களூரில் வள்ளுவன் தமிழ் மையம் என்றொரு தமிழ்ப்பள்ளியில் நானும் மனைவியும் சேர்ந்து உதவுகிறோம். ஊரார் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்தால் தம் பிள்ளையும் தாமாகத் தமிழ் கற்றுக் கொள்ளுமாம்!

வலைப்பதிவுகளுக்கும் முன்பே,  தமிழ் இணையத்தில் செய்திக் குழுமங்கள், மடலாடற் குழுக்கள், இணைய இதழ்கள் என்று பலவற்றில் அதிகமில்லையென்றாலும் அவ்வப்போது எழுதிய அனுபவம் உண்டு.   தற்போது ‘விரிவெளித் தடங்கள்’  என்னும் இவ்வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.  ஏன்? எதற்கு? எப்படி? அண்மைய ஆண்டுகளில் எழுதுவது குறைந்து போனதற்குப் பல காரணங்கள். அதனைப் பட்டியலிட்டு விவரிக்கவே தனிக்கட்டுரை வேண்டுமென்பதால் இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

எனது வலைப்பதிவில் சமூகம், அனுபவங்கள், பயணங்கள், நுட்பக்கட்டுரைகள் என்று பலதரப்பட்ட வகைகளிலும்,  சில சமயம் கொங்கு வட்டார வழக்குகளிலும்,  பிற சமயம் கணிநுட்பம்,  வேதிப் பொறியியல் என்று துறைசார்ந்தும் எழுத முனைகிறேன்.

கடந்த காலத்தில் எனது பதிவுகளில் வெளியான சில இடுகைகள் தொகுக்கப்பட்டு ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகளாக  ‘மெல்லச் சுழலுது காலம்‘  என்னும் ஒரு நூலாக வடலி பதிப்பகம் வழியாக 2010ல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்மணம் தளத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நிர்வாகக் குழுவிலும் நுட்பக் குழுவிலும் பங்களித்து வருகிறேன்.  இன்றும் தமிழ்மணத்தைத் தொடர்ந்து இயக்கி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் (டி.எம்.ஐ) என்னும் இலாப நோக்கற்ற அமெரிக்க அமைப்பின் அமைப்புக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன்.  தலைவராகவும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள ஆசை தான் என்றாலும் ஏதோ தடுக்கிறது. சில சோதனையான சோர்வான நேரங்களில் இதையெல்லாம் செய்து என்ன சாதித்தோம் என்ற அயர்வு ஏற்படினும், ஒருவகையில் இதுவும் பயனுள்ள ஒன்றே; இன்றில்லையேனும் ஒருநாள் இதன் பயன் தெரியும் என்று சுயமாய் ஊக்கப்படுத்திக் கொண்டு தொடர்கிறோம். தமிழ்ச்சூழலில் நாலுபேர் சேர்ந்து தொடர்ந்து இத்தனையாண்டுகளாக ஒன்றைச் செய்துவருகிறோம் என்பதே ஒரு சாதனையாகத் தான் தெரிகிறது.

டி.எம்.ஐயின் பூங்கா இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராய் இருந்துவந்தேன். ஒரு வருடத்திற்கும் மேல் வந்து நின்று போன இதழை மீண்டும் வெளிக்கொணர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொள்ளும்போதும் அதற்கான சரியான வாய்ப்பும் நேரமும் இன்னும் அமையாமல் இருக்கிறது. இப்போதைக்குச் சொந்த வலைப்பதிவிலேனும் எழுத்தைத் தொடர்வோம் என எண்ணுகிறேன்.

நிறைய எழுத எண்ணம் இருக்கிறது. இருப்பினும் அதனைச் சரிவர நிறைவேற்றாமல் வாழ்வோட்டத்தில் ஓடிக்கொண்டிருப்போரில் ஒருவனாகவும் இருக்கிறேன்.  வருடத்திற்கு ஒன்றிரண்டு இடுகைகளை மட்டுமே எழுதுகிற அண்மைய நிலையை நட்சத்திர வாரத்தோடு ஆரம்பிக்கும் இவ்வருடமேனும் மாற்றுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்! மாற்றும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.