இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு

January 18th, 2012 · 16 Comments

மூலம்: Espuma y nada más  -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) ஆங்கிலத்தில்: Just Lather, That’s All  -டானல்டு யேட்சு (Donald A. Yates) தமிழில்: நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)       உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. […]

[Read more →]

Tags: இலக்கியம் · சிறுகதை

ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்

September 29th, 2011 · Comments Off on ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்

ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன் (தமிழில்: இரா. செல்வராசு) தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா, பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்; அவளின் தெய்வீகத் தெரிவதனில் இனியென் றும் ஊடுருவாதீர். தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை அசைவேதும் இன்றிக் காண்பாள்; அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே மண்டி யிடினும் நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள் தெரிவென்பது ஒன்றே. தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள் கல் லெனவே. Source: Emily Dickensen The Soul Selects… பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு […]

[Read more →]

Tags: இலக்கியம்