Feed on
Posts
Comments

Tag Archive 'புறப்பெயர்'

வணிகப்பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்களையும் தமிழ்ப்புலத்தில் சொல்லும்போது அவற்றை மொழிபெயர்க்கலாமா கூடாதா என்னும் கேள்வி குறித்துச் சிலநாள் முன்னர் ‘பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்’ என்று எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. ஒரு குறிப்பிட்ட பெயரை எடுத்து அலச இருப்பதால், ஒரு கட்டின் ஆய்வு அல்லது அலசல் என்போம். [Case என்னும் சொல்லுக்குத் தமிழில் கட்டு என முன்வைத்திருந்தார் இராம.கி. அதையொட்டி, Case analysis என்பதற்குக் கட்டு+ஆய்வு எனக் கட்டாய்வு என்று கொண்டேன். கட்டலசல் என்றும் கூறலாமோ?]. வேற்றுமொழி […]

Read Full Post »

Brand என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொரிம்பு என்றொரு சொல்லைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்திருந்தார் இராம.கி ஐயா. அவர் முன்வைக்கும் சொற்கள் சிலசமயம் ஆங்கிலச் சொல் ஒலிப்புக்கு நெருக்கமாக இருப்பதையொட்டிச் சிலர் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பிற தமிழ்ச்சொல் மூலங்களிலும் வேர்களிலும் இருந்து அவர் அவற்றை வருவித்துக் காட்டும்போது அவற்றில் பிடித்தவற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. பொரிம்பும் அப்படியான ஒன்றுதான். பொரித்தல் என்னும் வினை தமிழில் தீயிலிட்டோ, சூடுவைத்தோ, வறுத்தோ செய்யும் ஒரு செயலைக் குறிப்பது […]

Read Full Post »