Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

கிழிந்த வாழையிலை ஒட்டிக் கொண்டிருந்த தண்டெடுத்து மண்டபத்துக் குரங்கை ஒருவர் துரத்தியதை வேடிக்கை பார்த்தபடி பண்ணாரியம்மன் கோயில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அர்ச்சனைக்கு நட்சத்திரம் என்னவென்று கேட்ட அர்ச்சகரிடம் என்னுடையதும் மனைவியினதும் நினைவு இருந்து கூறிவிட்டாலும் மகள்களது நட்சத்திரம் சரியாக நினைவில்லாததால், நானும் மனைவியும் ஒத்தையா இரட்டையா என்று குத்துமதிப்பிட்டுச் சொன்ன நட்சத்திரங்களைக் கூட வந்த நண்பரே கூட ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பெயர் மட்டும் போதும் நாமக’ என்று ஏதோ சொல்லிக் கொண்டார் அர்ச்சகர். ஈரோட்டில் இருந்து […]

Read Full Post »

மான்ஹைம் தவிர அருகே இருக்கிற ஹைடல்பர்க், லாடன்பர்க் என்னும் சிறு நகரங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த மூன்று ஊர்களும் ரைன், நெக்கர் என்னும் இரு நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையை இங்கே அழகாகப் பயன்படுத்துகின்றனர். இம்மூன்றையும் இணைக்கும் பொது வாகன வசதி இங்கு நன்றாக இருக்கிறது. ரயிலோ, பேருந்தோ, டிராம்வண்டியோ ஏறிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சுற்றி வந்த ஒரு ஞாயிற்றுப்பொழுதில் ஒருபுறம் தெரிந்த மலைத்தொடர்க் காட்சிகள் அருமை. உள்ளேயோ ஜெர்மனின் வயதான குடிகளின் தொண தொணப் பேச்சு. […]

Read Full Post »

ஜெர்மனி என்றாலே ஹிட்லரும், மொடமொடச் சீருடை அணிந்த கடுகடு முகப் போர்வீரர்களும், கரடுமுரடாய் ஒரு மொழியும், உலகப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களும் நினைவுக்கு வந்தாலும், அதன் மென்மையான ஒரு பக்கத்தை எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற பூக்களும் பூச்செடிகளும் காட்டுகின்றன. நகர மையப் பகுதியாக இருந்தாலும் சரி, அடுக்கு மாடிக் குடியிருப்புக்களாய் இருந்தாலும் சரி, சின்னதாய்க் கிடைக்கிற சந்து பொந்துகளில் கூடப் பூச்செடிகள் பூத்துக் குலுங்கி ஜெர்மனி பற்றிப் புதிய செய்திகளைத் தெரிவிக்கின்றன. “ஆமாம், மக்கள் இவற்றிற்கு நிறையத் […]

Read Full Post »

மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா இன்று முதல் மைசூரில் ஆரம்பம். மகிஷுர் என்பதன் திரிபான மைசூரில் இன்னும் மிச்சமிருக்கிற மகாராஜா ஸ்ரீகந்த தத்தா நரசிம்மராஜ உடையாரும் அவருடைய தேவியாரும் கையில் கங்கணம் கட்டிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வருடா வருடம் நடைபெறும் இந்தத் தசராத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் என்று கேள்வி. பத்தாம் நாள் அரச பேரூர்வலங்களும் கோலாகலங்களுமாய் இனிதாய் இருக்கும் என்று அறிந்ததால், அடுத்த பத்தாம் நாள் அங்கு […]

Read Full Post »

சுமார் மூன்றடிக்கு மூன்றடி அளவில் அமைந்திருக்கும் ஒரு தொட்டியின் முன் நண்பரோடு சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்தேன். மூன்று அல்லது நான்கு அடி ஆழமிருக்கும் என்று கணித்த அந்தத் தொட்டியில் தண்ணீர் நிறைந்திருந்தது. அதில் மிதந்து கொண்டிருந்த வண்ண வண்ணப் பூக்களில் ஓரமாய் ஒதுங்கி இருந்த செம்பருத்தியை எனக்கு அடையாளம் தெரிந்தது. ஒரு கணம் முன்பு கொட்டப்பட்ட சிறு மஞ்சளும் குங்குமமும் மெல்லப் பரவிக் கொண்டிருந்தன. என் இடது கையில் ஒரு ஒடுங்கிய வெண்கலத் தட்டு. இது நாள் வரை […]

Read Full Post »

« Prev - Next »