Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! " பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ? "அந்த [...]

Read Full Post »

இரண்டு, இரண்டரை வாரப் பயணமாக ஊர் போய் வந்தவனைப் பார்த்து, “ஊரெல்லாம் எப்படியப்பா இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டிருந்தால், ஒருவேளை “அப்படியே தாங்க இருக்கு”, என்று நான் கூறியிருந்திருக்கலாம். இன்னும் சிலரிடமோ “சுத்தமா மாறிப் போச்சுங்க” என்று முற்றிலும் முரணாகக் கூறியிருப்பேன். இரண்டு நிமிடத்தில் என்ன சொல்லவென்று யோசித்து “ஒரே கூட்டமாக இருக்குங்க” என்றோ, “இந்த வருடம் அதிக மின்வெட்டு இல்லை” என்றோ கூடக் கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஊருக்குள் மொத்தமாக இருந்த பத்து வீட்டில் பட்டணத்துப் [...]

Read Full Post »

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் [...]

Read Full Post »

வள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய முரசொன்று மூலையில் டம்ட டம்ட டம் கொட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தலைநகரத் தமிழர் கூட்டம் சிறிதாகப் புத்தாண்டை வரவேற்கப் பட்டோடும் பிறவோடும் குழுமியிருந்தது. மணியொலியும் முரசொலியும் நாசிகளில் ஏறிய நறுமணமும் ஒருபுறம் புற அறிவைச் சீண்டிக்கொண்டிருக்க, அவற்றினூடாக ஒரு அமைதியை நாடி மனம் மிதந்து கொண்டிருந்தது. தங்க விசிறியும் சாமரமும் வீச, அலங்கரிக்கப்பட்ட முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு [...]

Read Full Post »

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசம் உண்டு. அது, வாழுகின்ற மண்ணின் வாசமா, கண்ணிற்படுகிற காட்சிகளின் தொகுப்பா, காட்சிமாந்தர் எழுப்பும் ஒலிக்கோவையா, நாவூறக்கிட்டும் தனிப்பட்ட சுவையா, அல்லது இவையெல்லாம் கலந்த ஏதோ ஒரு உணர்வா? திருநெல்வேலியின் பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் பேரூர் சிற்றூர் கிராமம் எதுவானாலும் சரி, சிறு பொழுதேனும் தன்நிலை மறந்து திளைக்க வைக்கிற வாசம் எல்லா ஊருக்கும் உண்டு. குடிக்கிற தண்ணீருக்கு அலைந்தவனாகவோ கொளுத்துகிற வெய்யலின் சூடு தாங்காமல் வாளிநீரினுள் [...]

Read Full Post »

Next »