Feed on
Posts
Comments

Category Archive for 'கணிநுட்பம்'

தமிழ்-உலகம் யாஹூ மின்குழுமத்தில் யூனிகோடு பற்றிய கலந்துரையாடல் நடக்கிறது என்று அறிந்து நானும் சென்று அங்கு உறுப்பினனாய் ஆனேன். யூனிகோட்டிற்கு மாற இன்னும் தயக்கம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஆனால் சிலர் சொல்லும் காரணங்கள் சரியானதாக இல்லை. உதாரணத்திற்கு அகர வரிசைப் படுத்த இது சரியில்லை என்று ஒரு கருத்து. ஆனால், யூனிகோடு என்பது சகலத்திற்கும் தீர்வான ஒரு சர்வ நிவாரணி அல்ல. இது அடிப்படையாய் எழுத்துக்களுக்கு(உண்மையில் எழுத்து வடிவங்களுக்கு) ஒரு எண்ணைச் சமன்படுத்தும் ஒரு அட்டவணை தான். […]

Read Full Post »

தமிழ்வலைப் பதிவுகள் இன்னும் சிலமேலானநுட்ப விஷயங்கள் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துக்கள்(அ) பின்னூட்டங்கள் பகுதிகளோடு விளையாடிய கூட்டம், பிறகு செய்தியோடைத் தொழில்நுட்பத்தில் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தது. பல பதிவுகள் செய்தியோடைகளை அமைத்து விட்டாலும், இன்னும் சிலவற்றில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில பதிவுகள் மட்டுமே இருந்த காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள்பக்கம் வந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. பக்கங்கள் அதிகமாக அதிகமாகRSS என்னும் செய்தியோடைகள் மிகவும் அவசியமாகின்றன. வலைப்பதிவுகள் படிக்க எனக்கு இனி ஷார்ப்ரீடர்போன்ற திரட்டி நிரலிகளே பிரதான […]

Read Full Post »

SharpReader

RSS பற்றிப் பல காலமாய்ப் படித்து ஆய்ந்து கொண்டிருந்தாலும், இத்தனை நாட்களாய் ஒரு திரட்டியைப் பயன்படுத்தாமல் இருந்தேன். ஒரு நல்ல திரட்டியாக வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கையில் குமரகுரு SharpReaderன் புதிய வெளியீடு பற்றி எழுதி இருந்தார். Atom ஓடைகளையும் அது இப்போது படிக்கிறது என்றார். BlogSpot இப்போது இலவசப் பதிவுகளுக்கு Atom ஓடையைத் தருவதால் இனி SharpReaderஐப் பாவித்துப் பெரும்பாலான தமிழ்ப் பதிவுகளைப் பார்க்க முடியும் என்று இன்று தான் இறக்கிக் கொண்டேன். எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் எந்த […]

Read Full Post »

தமிழ் வலைப் பதிவுகளுக்காக அ/கே/கே அல்லது வ/கே/கே என்று அடிக்கடியும் வழக்கமாகவும் கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து வைக்கும் வேலையில் இறங்கச் சிலர் சில மாதங்கள் முன்னர் முன்வந்தோம். அதில் கருத்துக்கள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், விமரிசனங்கள், என்று பலவாறாகக் கூறப்படும் பகுதி பற்றி நான் தயார் செய்ய முன்வந்திருந்தேன். ஒரு நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டதால் முன்னரே இதனை முடிக்க முடியவில்லை. அதுவே எனது அதிகாரபூர்வமான சாக்கு !! அதனை இப்போது முடித்து முதல் படியை […]

Read Full Post »

எனது திரட்டிப் பக்க முயற்சி. தமிழ் வலைக்குறிப்புக்கள் அதிகமாகி வரும் இன்னாளில், புதிதாய் யார் எழுதியிருக்கிறார்கள் என்று அதிக நேரம் விரையப்படுத்தாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் வலைக்குறிப்பர்கள் தங்களது பக்கங்களுக்கு செய்தியோடை ஏற்பாடு செய்ய வேண்டும். Blogger-ல் இப்போது அந்த வசதி தரப்பட்டுள்ளது. இரண்டாவது, செய்தியோடைத் திரட்டிகள் கொண்டு பிறரது தளங்களைக் கவனித்துக் கொள்ளலாம். அவரவர் தனித்தனியாக செய்தியோடைத் திரட்டிகள் வைத்துக் கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் NewsMonster […]

Read Full Post »

« Prev - Next »