இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'தமிழ்'

வாங்க தமிழ் எழுத்த மாத்தீருவோம்

June 15th, 2010 · 16 Comments

அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க. ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன். ‘கேள்’னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் ‘கேன்’னு படிச்சுது பொண்ணு. என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் அவளக் […]

[Read more →]

Tags: தமிழ்

ஒருங்குறியும் தமிழ் எழுத்தும்

November 11th, 2007 · 10 Comments

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதிலாக 247 எழுத்துக்கள் (மற்றும் சில வடமொழி எழுத்துக்கள் ~ கிரந்தம்) என்று தான் படித்திருப்பீர்கள். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, ஆய்தம் ஒன்று சேர்த்து ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தியேழு. இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்கள். இந்தக் கொத்தில் (set) சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் முழுதாய் ‘எழுத்து’ என்றே […]

[Read more →]

Tags: கணிநுட்பம் · தமிழ் · யூனிகோடு

பூங்காவில் இளங்குமரனார்

July 29th, 2007 · 5 Comments

“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது. பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் […]

[Read more →]

Tags: இலக்கியம் · தமிழ்

ஒருங்குறிச் செருப்பு

February 24th, 2006 · 3 Comments

செருப்பிற்காகக் காலை வெட்டு என்று இராம.கி அவர்கள் சும்மா சொல்லவில்லை என்பதைச் சற்றுப் பொறுமையாக ஆய்ந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். திரு.விஜய் செருப்பைத் தவறாக மாட்டிக்கொண்டு, செருப்பைக் குறை சொல்ல வேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதற்கு முன் வாய்ஸ் ஆன் விங்ஸின் கீதா கயீதா ஆன கதை போன்றவற்றைப் பார்த்திருக்கலாம். இராம.கி அவர்கள் இட்ட தேட்டைச் சிக்கல் பதிவிற்கும் அங்கிருந்து சுட்டி இருக்கிறது. யூனிகோடு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பவர் என்னும் முறையில் விஜய் போன்றவர்கள் இராம.கி அவர்கள் கூறும் […]

[Read more →]

Tags: தமிழ் · யூனிகோடு

சுவீடன்: மொழியும் நாடும்

June 23rd, 2005 · 37 Comments

சுவீடன் போய் வந்தது பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார், “அது ஒரு பெரிய நாடு அல்லவா?” என்று. ஒரு நாடு சிறியது பெரியது என்று எதை வைத்துச் சொல்வது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலோ, மக்கட்தொகையை வைத்துப் பார்த்தாலோ சுவீடன் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. இவர்களின் மக்கட்தொகை மொத்தமாய் ஒன்பது மில்லியனுக்கும் குறைவே. ஒப்பிட்டுப் பார்க்க, தமிழகத்தில் மட்டும் சுமார் அறுபத்தி இரண்டு மில்லியன் பேர் இருக்கிறோம். பொருளாதார நிலையை வைத்து, வாழ்க்கைத் […]

[Read more →]

Tags: தமிழ் · பயணங்கள் · பொது