Feed on
Posts
Comments

Category Archive for 'தமிழ்'

“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது.
பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் […]

Read Full Post »

செருப்பிற்காகக் காலை வெட்டு என்று இராம.கி அவர்கள் சும்மா சொல்லவில்லை என்பதைச் சற்றுப் பொறுமையாக ஆய்ந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். திரு.விஜய் செருப்பைத் தவறாக மாட்டிக்கொண்டு, செருப்பைக் குறை சொல்ல வேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதற்கு முன் வாய்ஸ் ஆன் விங்ஸின் கீதா கயீதா ஆன கதை போன்றவற்றைப் பார்த்திருக்கலாம். இராம.கி அவர்கள் இட்ட தேட்டைச் சிக்கல் பதிவிற்கும் அங்கிருந்து சுட்டி இருக்கிறது.
யூனிகோடு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பவர் என்னும் முறையில் விஜய் போன்றவர்கள் இராம.கி […]

Read Full Post »

சுவீடன் போய் வந்தது பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார், “அது ஒரு பெரிய நாடு அல்லவா?” என்று. ஒரு நாடு சிறியது பெரியது என்று எதை வைத்துச் சொல்வது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலோ, மக்கட்தொகையை வைத்துப் பார்த்தாலோ சுவீடன் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. இவர்களின் மக்கட்தொகை மொத்தமாய் ஒன்பது மில்லியனுக்கும் குறைவே. ஒப்பிட்டுப் பார்க்க, தமிழகத்தில் மட்டும் சுமார் அறுபத்தி இரண்டு மில்லியன் பேர் இருக்கிறோம்.

பொருளாதார நிலையை வைத்து, வாழ்க்கைத் […]

Read Full Post »

சிக்கல் மாண்ட்ரீஸர் கையெழுத்துத் தமிழ் பற்றி முக்கியமான கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பி இருக்கிறார். ஆங்கில ஒலியியல் வழியாய்த் தமிழில் தட்டச்சு செய்வது (புதிதாகத் தமிழ் கற்றுக் கொள்பவர்களது) மொழிவளத்தைக் குறைக்குமா? கையெழுத்துத் தமிழே கற்றுக் கொள்வது அவசியந்தானா? தமிழ்நாட்டிலேயே வளரும் இந்தத் தலைமுறையினர் கணினி வழியாகவேனும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதா?
புதிதாய் எழுதப் பழகுபவர்கள் ஆங்கில ஒலிவடிவத்தின்படி எ-கலப்பை மூலம் எழுதுவது குறையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அப்படிப் பழகும் போது ஒலிவடிவிலேயே […]

Read Full Post »

Blog என்ற சொல்லிற்குச் சரியான தமிழாக்கம் என்னவென்று வெங்கட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வலைப்பூ கவித்துவமாய் இருக்கிறதே என்றாலும் நுட்பத்தைச் சரியாகக் குறிக்காமல் இருக்கிற காரணத்தால் அது வேண்டாம் என்னும் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மற்ற இரு சொற்களான வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டும் சரியே. நானும் இது நாள் வரை மாற்றி மாற்றி இரண்டையும் பாவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டுமெனில், […]

Read Full Post »

« Prev - Next »