மூலம்: Espuma y nada más -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) ஆங்கிலத்தில்: Just Lather, That’s All -டானல்டு யேட்சு (Donald A. Yates) தமிழில்: நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj) உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. […]
Category Archive for 'இலக்கியம்'
ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்
Posted in இலக்கியம் on Sep 29th, 2011
ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன் (தமிழில்: இரா. செல்வராசு) தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா, பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்; அவளின் தெய்வீகத் தெரிவதனில் இனியென் றும் ஊடுருவாதீர். தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை அசைவேதும் இன்றிக் காண்பாள்; அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே மண்டி யிடினும் நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள் தெரிவென்பது ஒன்றே. தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள் கல் லெனவே. Source: Emily Dickensen The Soul Selects… பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு […]
இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்) நேரம்: மாலை […]
“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது. பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் […]
கவிஞர் செல்வநாயகியின் பனிப்பொம்மைகள்
Posted in இலக்கியம் on Sep 20th, 2005
கொங்கு மண்ணின் மணம் வீச இனிய நடையில் வரும் இவரது கட்டுரைகளும் பதிவுகளும் பலரையும் கவர்ந்தவை. ஒரு வழக்கறிஞரான இவர் கவிதைகளும் வடிப்பவர் என்பது திண்ணையில் வெளிவந்த ஒரு பொங்கல் கவிதை பார்த்தபோது தான் எனக்குத் தெரிந்தது. மரத்தடி, திண்ணை, திசைகள் உட்பட இணையத்தில் பல இடங்களிலும் வெகு காலமாய் எழுதி வருபவர். ஒரு மேடைப் பேச்சாளருமாக அறியப்படும் கவிஞர் செல்வநாயகியின் முதல்ப் புத்தகம் – பனிப்பொம்மைகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் […]