இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

சில வலைப்பதிவு நுட்பங்கள்

March 6th, 2004 · 6 Comments

தமிழ்வலைப் பதிவுகள் இன்னும் சிலமேலானநுட்ப விஷயங்கள் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துக்கள்(அ) பின்னூட்டங்கள் பகுதிகளோடு விளையாடிய கூட்டம், பிறகு செய்தியோடைத் தொழில்நுட்பத்தில் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தது. பல பதிவுகள் செய்தியோடைகளை அமைத்து விட்டாலும், இன்னும் சிலவற்றில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில பதிவுகள் மட்டுமே இருந்த காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள்பக்கம் வந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. பக்கங்கள் அதிகமாக அதிகமாகRSS என்னும் செய்தியோடைகள் மிகவும் அவசியமாகின்றன. வலைப்பதிவுகள் படிக்க எனக்கு இனி ஷார்ப்ரீடர்போன்ற திரட்டி நிரலிகளே பிரதான இடைமுகமாக இருக்கப் போகிறது. பலரும் இது போன்ற நிரலிகளையே பாவிக்க ஆரம்பித்துள்ளனர். பார்க்க வெங்கட், காசி, பரி, பத்ரி


இன்னும் அந்தச் செய்தியோடை வசதி செய்யாமல் இருப்பவர்கள் சற்று முயன்று செய்து விட்டார்களெனில் நலம். புதிதாய் வருபவர்களும் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் வலைப்பதிவுகள் குறித்த பல நுட்பங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளத் தகவல்களை ஒரு இடத்தில் திரட்டும் முயற்சியும் அதே சமயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வ.கே.கே என்று ஆரம்பமான முயற்சிகள் இன்று வெங்கட் அமைத்துக் கொடுத்த விக்கியில் வந்து நிற்கிறது.

நேற்றும் இன்றும் அந்த விக்கிப் பக்கங்களுக்குச் சென்று நான் சற்றே விளையாடிப் பார்த்தேன். பிறகு வ.கே.கேவுக்காக நான் உருவாக்கிய கருத்துக்கள் பகுதி பற்றிய கேள்வி-பதில் தொகுப்பை சிறு திருத்தங்களோடு விக்கியில் ஏற்றிவிட்டேன். ஒரு மாறா நிலையில் இருந்த இந்தப் பகுதியை இனி பார்க்கும் எவரும் அதிகத் தகவல்கள் தந்தும், தவறுகளைத் திருத்தியும் சரி செய்யலாம். யூனிகோட்-UTF பற்றியும் எழுதச் சொல்லி பத்ரி தூண்டியிருக்கிறார். அதையும் ஒரு நாள் செய்ய எண்ணம். இப்போதைக்கு வலைப்பக்க மூலத்தில் Content-Type-ஐச் சரியாக எப்படி அமைப்பது என்பது பற்றி ஒரு குறிப்பை எழுதி இருக்கிறேன்.

ஓ, மறந்து விட்டேனே, இந்த விக்கிப் பக்கங்களுக்கும் ஒரு செய்தியோடை இருக்கிறது. உங்கள் அபிமானத் திரட்டி நிரலியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் தொடர்தல் பற்றியும் சமீபத்தில் முயற்சிகள் அதிகமாகி உள்ளன. Haloscanஇல் அந்த வசதி செய்து கொடுத்த பின் பல தளங்களில் அதனைப் பாவிக்க முடியும். பத்ரி அது பற்றி எளிமையாய் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். மூவபிள் டைப் ஆட்களிடம் இருந்து தான் இந்த நுட்பம் வெளிவந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். பத்ரி எடுத்துக் காட்டியிருக்கும் வசதிகளோடு இன்னும் ஒன்று. ஒரு தலைப்பை (அ) பகுதியை ஒட்டிய தகவல் சேர்க்கைச் சாதனமாகவும் இந்தப் பின்தொடர்தல் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, தமிழ் வலைப்பதிவு நுட்பங்கள் என்று ஒரு தலைப்பில் ஒரு பகுதியை (அ) பதிவை உருவாக்கி விட்டு, அதன் பிறகு இது பற்றி எழுதுபவர்கள் எல்லாம் அந்தப் பதிவுக்குப் பின்தொடரும் சுட்டி கொடுத்து விட்டால், அந்தப் பதிவு இந்தத் தகவல்களின் சேர்க்கையாக அமையும். அவரவர் பதிவில் எழுதிக் கொண்டாலும் அவற்றை எல்லாம் தொகுத்து வழங்கும் சுட்டிகளாக இது அமையும். இந்த வசதியின் முனைப்பில் தான் பின்தொடர்தல் நுட்பம் முதலில் உருவாக்கப் பட்டாலும் இன்னும் பரவலான இது போன்ற முயற்சிகள் வரவில்லை என்று தெரிகிறது.

எனது பதிவில் சுட்டிகளை மூவபிள் டைப் தானாகவே பொறுக்கி எடுத்து அவற்றின் பின்தொடர் சுட்டிகளைக் கண்டுபிடித்து பிங் செய்தியை அனுப்பும் வசதியைச் செய்ய முயன்றிருந்தேன். (என் வேலை பெரிதாய் இல்லை. சும்மா ஒரு டிக் மட்டும் தான்!) ஆனால், அதில் சில சிக்கல்கள் இருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தப் பதிவில் இருந்து இரண்டு மூன்று பேருக்காவது பின் தொடர்தல் சுட்டி செல்ல வேண்டும். வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.

Tags: கணிநுட்பம்

6 responses so far ↓

  • 1 காசி // Mar 8, 2004 at 12:03 am

    செல்வா,
    உங்கள் ஸ்டைல்ஷீட்டில் letter-spacing: .2em-ஐ எடுத்துவிடுங்கள். ஃபயர்ஃபாக்ஸ் அதனாலும் எழுத்தை உடைக்கிறது.

  • 2 ராதா // Mar 9, 2004 at 4:03 pm

    SharpReaderல் காசியின் வலைக்குறிப்பு (நியூக்ளியஸ்) அருமையாக முழுவதும் தெரிகிறது. ஆனால் பத்ரியின் (ப்ளாக்ஸ்பாட்) பதிவுகளை முழுவதும் காணமுடியவில்லையே?! கவனித்தீர்களா?

  • 3 ராதா // Mar 9, 2004 at 4:03 pm

    ஓ! இருமுறை சொடுக்கத் தவறிவிட்டேன். இப்போது நன்றாகத் தெரிகிறது. SharpReader-ஐத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

  • 4 Kasi // Mar 11, 2004 at 9:03 am

    செல்வராஜ், என் தனி அஞ்சல்கள் கிடைத்ததா?

  • 5 valaippoo // Mar 6, 2004 at 9:03 pm

    உங்க வலைப்பூவுல இதெல்லாம் இருக்கா . ?
    சில நாட்களாய் காசி. வெங்கட்,பத்ரி , செல்வர&#30…

  • 6 கண்ணனின் வலைமொட்டுகள் // Mar 8, 2004 at 4:03 am

    பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை

    பின்தொடருதல் பற்றி தெரிந்‌துகொள்ளவேண்&#2…