Comments on: சில திருத்தங்களும் சீர்திருத்தங்களும்

By: Badri
கணினி vs கணிணி -> ஜெயபாரதி (ஜெ.பி) எழுதிய ஒரு புத்தகத்தில் [இணையத்தில் அவர் எழுதியதைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது] இதைப்பற்றி எழுதியுள்ளார். அப்படியானால் இது அகத்தியம் ஆவணப்பகுதியில் இருக்கும். தமிழ்ச்சொற்களில் ‘ணி’க்கு அடுத்து வருவது இரண்டு சுழி சமாச்சாரமாகவே இருந்து வந்துள்ளது. பல எடுத்துக்காட்டுகள் தருகிறார். எனவே ‘கணினி’தான் சரியானது என்கிறார். நானும் தெரிந்துகொள்ளுமுன்னர் பல இடங்களில் கணிணி என்று பயன்படுத்தியுள்ளேன். ஆனால் இப்பொழுது கை தானாகவே கணினி என்றுதான் எழுதுகிறது.

By: Kasi
செல்வராஜ்,

நான் இங்கு கொஞ்சம் தாமதம். மன்னிக்க.

இன்று என் வலைப்பதிவில் ஒரு மறுமொழியாக நானும் கிட்டத்தட்ட இதே வகையில்தான் எழுதியுள்ளேன். முதல் மூன்று விஷயங்களும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்று. அவற்றை அங்கீகரித்துவிடலாம். அதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? தெரியவில்லை

நாலாவது ஒரு யோசனை. பலரும் விவாதிக்கவே. ஆனால் அதுபற்றி சிந்திப்பது நல்லதென்று தோன்றுகிறது.

‘கணினி’ என்னவோ என்னைக் குழப்பவில்லை. (தாமதமாக கணினித்தமிழ் அறிமுகமானதால் கிடைத்த பலன்) வாய்விட்டு சொல்லிப்பாருங்கள் ‘கணிணி’ எவ்வளவு கடினமாயிருக்கிறதென்று தெரியும்.

அடுத்த பதிப்பு என்றது ஒரு கற்பனை. அதாவது இன்ரைக்கு நாம் காணுவது இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்காது என்பதை லேசாக இடித்துரைக்கும் ஒரு சீண்டல், அவ்வளவே. ஒருவேளை உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள ஒரு தமிழக அரசு, இவற்றையெல்லாம் ஆராய்ந்து னெறிப்படுத்தினால் அடுத்த பதிப்பு வரலாம். அப்போது குழந்தைகளுக்குப் தொடக்கப்பள்ளியிலேயே இந்த திருத்தங்கள் போதிக்கப்பட்டால் விரைவில் (ஒரு 10-20 வருடத்தில்) பயனுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

அன்புடன்,

-காசி

By: Dubukku
உங்கள் பள்ளி பற்றிய வலைபதிவுக்கு இங்கு கருத்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். எனக்கும் ஒரு செல்ல மகள் இருக்கிறாள். இவ்வளவு மெதுவாக ஆரம்பித்து மெதுவாக சொல்லிக் கொடுத்தால் இந்தியா போனால் அவர்களுக்கு பிரசனையாக இருக்காதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. அங்கு அவர்கள் எங்கோ இருப்பார்கள்.  இவர்கள் சற்று பின்தங்கி இருக்க மாட்டார்களா?

By: Shankar
டார்வின் கோட்பாடுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் நிலைக்கும். நம் பதிவுகளில் நமக்குச் சரியெனத் தோன்றும் மாற்றங்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றுக்கருத்துக்களும் விவாதங்களும் தொடர, மெல்ல மெல்ல அவை அங்கீகாரம் பெறலாம். (கவலைப்படாதீங்க அண்ணே! என் பதிவுல சொன்ன வெவகாரமான மாற்றமெல்லாம் பண்ணிட மாட்டேன் :-))

By: Balaji
‘கணி’ என்று சுருக்கிவிட்டதாக எங்கோ படித்தேன். அது இன்னும் எளிதாக இருக்கிறது.

By: Anonymous
பாலா, ‘க’ என்பது இன்னும் எளிதாக இருக்கிறதே:-))

கஷ்டகாலம், என்னவென்று தெரியாமலே நான் இது வரை கணணி என்றே நினைத்து வந்திருக்கிறேன். கணினி சரியாக வருகிறது…எவ்வாறெனினும் மொழி வளர்ச்சியில் பெரும்பான்மையோர் எதை உபயோகிக்கிறார்களோ அதுவே தவறான பதமெனினும் வழக்கத்துக்கு வந்து விடும்.

By: செல்வராஜ்
டுபுக்கு, மகள் பள்ளி பற்றி நீங்கள் கூறுவது சரிதான். இது குழப்பமான விஷயம் தான். ஆனால் காலப் போக்கில் இந்த ஒரு வருடத் தாமதம் பெரும் வித்தியாசம் தராது என்று நினைக்கிறேன். அதைவிட, இங்கிருப்பதால் கட்டாயம் ஐந்து வயதுக்கு முன்னர் பள்ளிக்கு அனுப்ப முடியாது. இந்தியாவில் நண்பர் குழந்தைகள் அந்த வயதில் முதல் வகுப்பிலோ அதையும் தாண்டியோ இருப்பதையும் பார்த்தேன்.

By: prabhu
the earlier posting without the sender’s name is mine:-)

By: -/r.
பத்ரி சொல்லும் கணிணி எதிர் கணினி சங்கதி தமிழ். இணையத்திலே வந்தது. இதற்கு முன்னும் பின்னும் பல கருத்துகள் பேசப்பட்டன. நான் கணணி என்பதையே பயன்படுத்துகிறேன். ஒரே காரணம், கணினி, கணிணி பேசப்படுமுன்னரே, இந்த வழக்கு நெடுங்காலமாக இலங்கையிலே எங்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. (இதே காரணமே நேர்காணல் என்ற சொல்லை நான் பயன்படுத்தாமல், செவ்வி என்று இன்னமும் பயன்படுத்துவது) அதே பயன்பாடு. ஒரு முறை நா. கண்ணன் கணணி என்று எழுதியதற்குத் தமிழ்.இணையத்திலே கோ என்பவர் “கணிணி கணிணி கணிணி” என்றே காட்டமாகப் பதில் எழுதினார். கணக்கிடுவதால் கணனி கணிப்பிடுவதாற் கணிணியென்று பகிடி பண்ணியது ஞாபகமிருக்கிறது. கணிப்பொறி என்றே விடாமல் சுஜாதா கணிணி/கணினி பயன்பாடு வந்தது தெரிந்தபின்னும் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்றும் அந்த நேரத்திலே (97) தமிழ்.இணையத்திலே எழுதவும்பட்டது. கணி என்பது வினைச்சொல்லாகவோ பெயராலணையும் வினையாகவோ மட்டும் வரலாமோ? (வேண்டுமானால், கவிதைச்சந்ததுக்காக சுருக்கிக்கொள்ளலாம்;-))

By: செல்வராஜ்
நன்றி ரமணீதரன். இதற்குப் பின்னால் இவ்வளவு வரலாறு இருக்கிறதா ? இடையில் சில வருடங்கள் (96-99) சரியான இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்துவிட்டேன். பல வளர்ச்சிகள்/விவாதங்கள் தெரியாமல் போய்விட்டது.