Comments on: கிரந்தம் (இயன்றவரை) தவிர்

By: பெ. விஜய்
கோகுல் என்பது  தமிழ் பெயரா?

By: இரா. செல்வராசு
நன்றி இரவி. நரசிம்மன் இவ்விவாதத்தைத் தொடர வேண்டாம் என்று பார்த்ததால் நானும் பதிலேதும் சொல்லாமல் விட்டிருந்தேன்.

ஆனாலும், ‘பாடை’ என்னும் கிண்டலை நான் இரசிக்கவில்லை. பாசை என்றே எழுதியிருக்கலாம்; ஆனால், ‘மொழி’ என்று எழுதுமிடத்துப் பாஷை என்று எழுத நினைத்து, அங்கே கிரந்தம் தவிர்க்கச் சொல்வோருக்காக எனப் ‘பாடை’ என்று எழுதுவதில் இருப்பது என்ன அங்கதமா, கிண்டலா? இது போன்ற இடங்களிலே தமிழ்ச்சொற்கள் நீக்கி எழுதுதலைத் தவிர்ப்பதுமே கிரந்தம் தவிர் என்பதன் நோக்கம் என்பது பலருக்கும் தெரியவேண்டும்.

By: இரவி
சல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல். ஜல்லிக் கட்டு என்பது அதன் திரிந்த உச்சரிப்பு. விவரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறுதழுவல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.

By: narasimman
இந்த விவாதத்தைத் தொடர வேண்டாம் என நினைத்திருந்தேன். People take such hard positions and are sentimental. ஆயினும், தற்போது சர்ச்சையில் உள்ள சொல்லான ஜல்லிக்கட்டு நினைவுக்கு வந்தது. இது எந்தப் ‘பாடை’? இதை எப்படி உச்சரிக்கிறார்கள்? சல்லிக்கட்டு என்று எழுதி ஜல்லிக்கட்டு என்று சொல்கிறார்களோ?

நரசிம்மன்

By: இரா. செல்வராசு
ஐயா, ளகரப் பயன்பாட்டில் அவ்வளவு பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. le என்று முடியும் இடங்களில் அதைப் பயன்படுத்துவது எனக்கு மிக இயல்பாக இருக்கிறது. காட்டாக, opal என்பதை ஓப்பல் என்றும் maple என்பதை மேப்பிள் என்றுமே எழுத விரும்புகிறேன். அதுவே சரியென ஒரு உள்ளுணர்வு.

மற்றபடி நான் மொழியியல் மாணவன் அல்லன் என்பதால் எனது அனுபவம்/அறிவு எல்லைக்குட்பட்டது.

By: narasimman
மேலும் எனக்கு நினைவுக்கு வருகிறது - உள்ளூர் மின்வண்டிகளில் கூவி விற்பவர்கள் ஆப்பல் என்று apple ஐ அழைப்பது. அவர்களே plum ஐ blum எனவும் உச்சரிப்பார்கள், palm oil பலருக்கு baam ஆயல்.

நரசிம்மன்

By: narasimman
செல்வராசு, ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கும்போது ள, ண வேண்டாம் என்கிறேன். உயிரெழுத்துக்குப்பின் ல, பிற இடங்களில் ள - வாம்,  ஏன்? ள வை விட ல சற்றே இனிமை கூடியில்லை?

ஷ, ழ, ட - வைச் சொல்லும்போது நாக்கின் இடத்தைக் கவனியுங்கள், ஷ-ழ வின் நெருக்கம் தெரியும். கம்பன் சொன்னாலும் எந்தக் கொம்பனாயினும் பகுத்தறிவுக்கு ஏற்புடையதல்லாதவர்றை நான் ஏற்க மாட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழக்கத்திலிருந்த எழுத்து முறைகள் சிலவற்றைப் பெரியார் மாற்றச்சொல்லி நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆனால் ழவினால் வரும் பிரச்சினை புரிகிறது - பாண்டிய நாட்டவர்க்கு ழ வாயில் ‘நுளையாது’!வடநாட்டு ‘ஹிந்தியர்’ பலருக்கும் ஷ  வராது, அதற்குப் பதில் ஸ தான். ஷ  வுக்கும் ச ஆனால், பாவம், ச  வின் சுமை மேலும் கூடும்!

நரசிம்மன்

By: இரா. செல்வராசு
நியாயஸ்தன், நான் சொல்ல வந்தது, உங்களுக்கு உண்மையில் அக்கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமாயின் அவற்றை வேறு விதமாகக் கேட்டிருப்பீர்கள் என்பதே. இருப்பினும், நீங்கள் மீண்டும் கேட்பதால் ஒரு பதில்: இந்த இடுகை தமிழ் மொழியில் கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்ததும், இயன்றவரை அதைத் தவிர்க்க முயலலாம் என்பது பற்றியதும் என்னும் பின்னணியில்

1- எனது குழந்தைகளின் பெயரில் கிரந்தம் இல்லை.

2- ஆங்கிலத்தில் எனது பெயர் எழுதுவது பற்றிய கேள்விக்கு இங்கு நேரடிச் சம்பந்தமில்லை.

By: இரா. செல்வராசு
நரசிம்மன், விரிவான விளக்கமான கருத்துகளுக்கு நன்றி. இடம்பொருத்து தமிழ் எழுத்துகள் வேறு வேறு உச்சரிப்பைப் பெரும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள், ஷ, ழ தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளது சரியாகப் புரியவில்லை. அவை ஒலியளவில் எப்படி நெருக்கமானவை? அதோடு ஷவுக்கு டகரப் பயன்பாடு கம்பன் காலத்தில் இருந்து வருவது தானே. அது ஏன் அபத்தம். நானோ இப்போது ஷவைப் பல இடங்களில் சகரத்தை வைத்தே எழுதுகிறேன். விசம், விசயம், என்று எழுதினாலும் சரியாகவே இருக்கிறது.

லகர, ளகர வித்தியாசமும் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்று தான். பெரும்பாலும் le என்று முடியும் ஆங்கிலச் சொற்களுக்கு ளகரம் போடுவது தான் இயல்பாக இருக்கிறது. ஒருவேளை apple=ஆப்பிள் என்று எழுதிப் பழகியதால் கூட இருக்கலாம். அதனால் தான் google=கூகுள், maple=மேப்பிள் போன்று எழுதுவது இயல்பாக இருக்கிறது.

இணையத் தேடலில் இரவியின் இடுகை ஒன்று ( கூகுல் x கூகுள்) இதைப் பற்றியே பேசுகிறது. ஆங்கில உயிரெழுத்துக்களை அடுத்து வந்தால் லகரமும், பிற இடங்களில் ளகரமும் போடுவது தான் சரி என்று சுட்டி இருக்கிறார். அந்தச் சு.சீனிவாசன் சுட்டி வேலை செய்யவில்லை. (இரவி, பார்த்தால் சரி செய்யவும், நன்றி).

By: narasimman
முதலில் என்னைப்பற்றி: tanglish எனக்குப் பிடிக்காது, கேட்கும்போது கொலைவெறி வரும். விஷயத்துக்கு வருவோம். செல்வராசு என்பதில் பாச நெருக்கம் தெரிகிறது, செல்வராஜ் என்பதில் கம்பீரம் தொனிக்கிறது. எது வேண்டுமோ அதை அவர் வைத்துக் கொள்ளட்டும். க்ரந்த எழுத்துக்களைத் தவிர்த்தாலும் அவை குறிக்கும் ஒலிகள் சிலவற்றைத் தவிர்க்க முடியாது. ஜ. ஸ, க்ஷ, ச, ஷ என்ற ஐந்து ஒலிவடிவங்களில் க்ஷவையும் சவையும் தவிர்க்கலாம் - ட்ச, ச வைப் பயன்படுத்தி. ஆனால் ச பல ஒலிகளை அளிக்க வல்லது: சமம், சிவம்(shivam), பஞ்சம் , பசை மற்றும் பச்சை. நமசிவாய நமச்சிவாய ஆகி விடுகிறது. ஏழு ஸ்வரத்தைக் குறிக்கும் sapthaswaram - சப்தஸ்வரம் - என்பதை s(h)abdhaSwaram என்று ஒலிச்வரம் என்ற பொருளில் உச்சரிக்கிறார்கள்.

ஷ வுக்குப் பதிலாக நெருங்கியுள்ள ழவை விட்டுத் தொடர்பே இல்லாத  ட எதற்கு?எழும்பூர் இந்தியில் எஷும்பூர் என்றே எழுதப்படுகிறது. விடம், வீடணன், கிருட்டிணன் என்பதெல்லாம் அபத்தம்.

அகல், பகல், முருகா போன்ற சொற்களில் ஹ ஒலிக்கிறது. கட்சி, காட்சி முதலியவற்றில் க்ஷ ஒலிக்கிறது. அஞ்சு, நஞ்சு, பஞ்சம் - இவற்றில் ஜ ஒலிக்கிறது. பேசு, பசை இவற்றில் ஸ ஒலிக்கிறது. தேவைப்படும் இடங்களில் இவ்வோலிகளுக்கான க்ரந்த எழுத்துக்களை ஏற்கலாம். முஸ்லிம் பெயர்களான முஹம்மது, ஜீனத் போன்றவற்றையும் அப்படியே

ஏற்கலாம். இன்றேல், ஜீனத் அமன் ‘சீனத்த(ம்)மன்’ ஆகி விடுவார்.

மொழியை வளப்படுத்தி நம் கருத்துக்களைப்  பிறருக்கு விளங்க வைப்பது தான் நல்லது. ஏற்கெனவே தமிழர்களின் மோசமான ஆங்கில உச்சரிப்பை மேலும் கெடுக்கும் வழியைக் காட்டக் கூடாது. ப்லேயர், டேபில், மனி போன்றவற்றை ப்ளேயர், டேபிள், மணி என்று ஏன் உச்சரிக்கிறோம்? ல, ன தமிழில் இல்லையா? அதென்ன கூகுள் (kooguL)? கூகுல் சற்றே பொருத்தமாகத் தெரியவில்லை?

ரா. நரசிம்மன்