இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன்

July 16th, 2008 · 59 Comments

தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்கிற முறையில் தமிழ்மணத்தின் மீதும் அதன் நிர்வாகக் குழு மீதும் அவற்றின் செயல்பாடுகள் மீதும் வைக்கப்படும் அவதூறுகளும் அபாண்டங்களும் என்னையும் எரிச்சலடையவும் வேதனைப்படவும் வைக்கின்றன. இவற்றின் மூலகர்த்தாக்கள் சில உட்காரணங்களுக்காக வேண்டுமென்றே இவ்வாறு செயல்படலாம். ஆனால் வேறு பலரோ அவர்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாகவோ, வேறு ஏதும் புரியாததாலோ, குழப்பத்தாலோ கூடத் தாங்களும் சேர்ந்துகொண்டு கும்மிக்கொண்டிருக்கின்றனர். எரிச்சலை அடக்கிக் கொண்டு, வேதனையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே நேர அழுத்தங்கள் இருக்கும் என்றாலும், எத்தகைய பணி, குடும்ப, பிற அழுத்தச் சூழலில் தமிழ்மண நிர்வாகிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிப் புரிய வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சொல்லாமலே புரிந்து கொள்ளும் நல்ல ஜீவன்களுக்கு நன்றி.

அண்மைய முடிவான சில வார்த்தைகளை வடிகட்டுதல் என்பது தனிப்பட்ட ஒருவரைக் குறி வைத்து எடுக்கப் பட்டதல்ல. தான் பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் நண்பரின் பதிவும் இடுகைகளும் இன்னபிறவும் இன்னும் தமிழ்மணத்தில் இருந்தே வருகிறது. தனிப்பட்ட ஒருவரை விலக்க வேண்டும் என்றால் தான் இரண்டு மூன்று முறை முன்னறிவிப்பு மடலும் அவகாசமும் தந்து அதன்பிறகு விலக்குவது தமிழ்மணத்தின் வழக்கம். இம்முறை எடுக்கப்பட்டது ஒரு நுட்பமுடிவு/மாற்றம். எவ்வாறு மறுமொழிப் பட்டியல் 40க்குக் குறைக்கப் பட்டதோ, சூடான இடுகைகள் கொண்டுவரப்பட்டதோ, பிறகு விலக்கப் பட்டதோ, அதைப் போன்ற வடிகட்டு நுட்பம் இது.

இவ்வாறான மாற்றங்களையும் பொதுவில் அறிவித்தே செய்து வருகிறோம் என்றாலும், சில சமயம் மாற்றம் முதலிலும் அறிவிப்புப் பின்னரும் வருவதும் வழக்கம். அதற்குப் பல காரணங்கள். முதலில் நுட்ப வேலைகள் செய்ய வேண்டும். அது சரியாய் வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கும். செய்த மாற்றம் சரியாக இல்லையென்றாலோ திருப்தியாக இல்லையென்றாலோ மீண்டும் வேலை செய்து சரி செய்ய வேண்டும். இத்தனைக்கும் பிறகும் அறிவிப்பு எழுதி வேறு இடத்தில் சென்று வெளியிட வேண்டும். எங்கள் அனைவருக்கும் முழு நேரப் பணி இது இல்லையென்பதால் இயன்ற போது தான் இவற்றைச் செய்ய முடிகிறது. நள்ளிரவு தாண்டியும் செய்யும் வேலைகளுக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடும் முன் சற்றே தூங்கிக் கொள்ளலாம் என்பதற்கு முன்னுரிமை தருவது முற்றிலும் நியாயம். சில சமயம் வேலை செய்பவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டுக் குழுவில் வேறு நபர் அறிவிப்பை எழுதி, ஆனால் அதை நுட்பக் குழுவிடம் சரிபார்க்கக் கொடுத்து, அதன்பிறகே வெளியிட முடியும். இதனாலும் கால தாமதம் ஆவது இயல்பு. இதற்கு முன்னரும், முதலில் நுட்ப மாற்றங்கள் வெளியிட்ட பின் அதற்கான அறிவிப்புக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதை யாரும் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஏன் முன்னறிவிக்கவில்லை என்பதற்கான விளக்கம் மட்டுமே இது.

ஏன் இந்த மாற்றம் என்பது குறித்து சார்ந்தும் எதிருமான கருத்துக்கள் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். தமிழ்மணம் பெரும்பாலும் எதனையும் தணிக்கை செய்யும் கொள்கையோ குறிக்கோளையோ கொண்டதல்ல. மாறாகக் கருத்துச் சுதந்திரம் பேணும் இடம். எல்லா விதமான அரசியல், சமயம், சமூக, பால், சாதி, வர்க்கக் குரல்களும் இன்னும் இங்கு வந்து கொண்டே தான் இருக்கிறது. நிர்வாகத்தைக் கிண்டல் செய்யும் கேள்வி கேட்கும் பதிவுகளும் இவற்றில் அடக்கம். இதன் ஆரம்ப கால வரலாற்றை அறிந்தவர்கள் இதனை நன்கு அறிவார்கள். பல சமயம் பதிவர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. சில சமயம் எல்லை மீறும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கின்றன. அவை நிர்வாகிகளான எங்களது நேரத்தையும் பதிவர்-வாசகர்களின் நேரத்தையும் வீணடிக்கும் நச்சுக்கள். இவையும் கூட நிர்வாகக் குழுவில் விவாதிக்கப் பட்டுப் பெரும்பான்மையான கருத்தின் படியே செயல்படுகிறது.

காமக்கதைகள் என்று முதலில் பார்க்கிற பலரும் நினைப்பது ஒன்றாகத் தான் இருக்கும். இப்போது எழுதிய சுந்தரின் எழுத்து அவ்வகையில் வராமல் போகலாம். ஆனால், தலைப்பும் சில வரிகளும் மட்டுமே வரும் தமிழ்மணத்தில் அதனைப் பார்க்கிறவர்கள் வேறு விதமாக எண்ணுவார்கள் என்பதால் தமிழ்மணம் என்னும் அமைப்பு எடுத்த நடவடிக்கை இது. சிலருக்கு அது ஒவ்வாததாகக் கூட இருக்கலாம். தன்னுடைய விழும்பத்தைப் பாதிக்காதவண்ணம் இருக்கச் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருக்கும் உரிமை உண்டு. பதிவர்கள் தம் பதிவில் மட்டுறுத்தல் ஏற்பாடு செய்து கொள்வதை ஒத்ததே இது. இதனைத் தனிப்பட்ட முறையில் தாக்குதலாகவோ, அவமதிப்பாகவோ கருத வேண்டாம் என்று மட்டுமே சொல்ல முடியும் என்னால்.

நிற்க. இந்நேரத்தில் முன்னர் நீக்கப்பட்ட பதிவர்கள் கிடைத்த குழப்பத்தில் இன்னும் குட்டையைக் கலக்குவோம் என்றபடி எழுதியும் நடந்து கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பிற நிர்வாகிகள் பெயரிலியும், சுந்தரமூர்த்தியும் பொறுமையாகப் பதில் எழுதி இருக்கிறார்கள். காசியும் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இருப்பினும் தமிழச்சி, ஓசை செல்லா போன்றோர் இன்னும் குழப்பியும் அவதூறாகவும் எழுதி வருகின்றனர். ஒருவேளை அவர்கள் விருப்பப்படி எல்லாம் எழுதிக் கொண்டு இங்கு இருக்க முடியவில்லை என்பதால் இருக்கலாம். அல்லது தமிழ்மணம் நடவடிக்கை என்று அவர்களை நீக்கியது சுயத்தைப் பாதித்திருக்கலாம். என்ன காரணம் என்று மேலும் ஆராய விருப்பமில்லை. இந்த முடிவிலா வாத-விவாதங்களுக்குள் செல்லவும் விருப்பம் இல்லை. மீண்டும் மீண்டும் அவர்களால் உதிர்க்கப்படும் அவதூறுகள் உண்மைதானோ என்று ஓரத்தில் இருப்போரையும் எண்ண வைத்துவிடும் அபாயம் இருப்பதால் சில விளக்கங்களைப் பதிவு செய்து விட்டுச் செல்ல விருப்பம்.

மற்றபடி தமிழ்மணம் என்பது எந்த விதச் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட ஒரு அமைப்பல்ல. எந்த ஒரு தனிமனிதனும் நினைத்ததைச் செய்து கொள்ளும் இடமல்ல. எந்த விதமான தணிக்கையும் செய்யும் விருப்பமும் தமிழ்மணத்திற்கு இல்லை. ஆனால், இது ஒரு அமைப்பு என்பதாலும், சில சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதாலும் கட்டற்ற சுதந்திரம் என்று எதையும் அனுமதித்துவிட்டுச் செல்ல முடியாது என்னும் நிலையையும் பதிவர்கள் உணர வேண்டும். கண்மூடித்தனமாகத் தாம் நினைத்ததைச் செய்வோம், அதைத் தடுப்பது எம் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று ‘சத்தம்’ இடுபவர்களை, தமது கொள்கைகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறாகவும், வாசகர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தமிழ்மணம் கருதி அவர்களை நீக்கினால் அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்ல. அவர்கள் எத்தனை முறை அதைத் திருப்பித் திருப்பிச் சொன்னாலும்.

ஆகா, என் வெற்றியைப் பார், எத்தனை விசயங்கள் வெளிக் கொணர்கிறேன் பார் என்று சத்தமிட்டுச் செல்லா போன்றோர் மார்தட்டிக் கொள்வார்களானால் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். இது வெற்றியல்ல. தோல்வி. இங்கமர்ந்து இதனை எழுதி அலுவத்துக்கும் தாமதமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதில் எனக்கும் இது தோல்வியே. வேதனையே. வாழ்க நீவீர்.

Tags: இணையம்

59 responses so far ↓

  • 1 லக்கிலுக் // Jul 17, 2008 at 5:13 am

    இங்கே ஒரு பின்னூட்டம் இட்டிருந்ததாக நினைவு. ஒருவேளை மட்டுறுத்தல் செய்ய மறந்துவிட்டீர்களோ? 🙂

  • 2 யட்சன் // Jul 17, 2008 at 5:13 am

    பதிவினை படித்தேன்…தெளிந்தேன்.

    பின்னூட்டங்களை படித்து கிறுகிறுத்துப் போனேன்.

  • 3 Osai Chella // Jul 17, 2008 at 5:26 am

    //நல்லது செல்லா. உங்கள் வழியில் செழித்தோங்க வாழ்த்துக்கள். ஆனால், பதிவர் மனதில் பயத்தை விதைக்கிறோம், கேள்வி கேட்டால் அதிகாரம் செய்கிறோம் என்றெல்லாம் பொய்யுரைக்க வேண்டாம். இந்த என் இடுகையும் அதற்கான பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்//

    //Remove Osai Chella too and let us use this opportunity to be firm in dealing with these kind of bloggers.//

    Remove Osai Chella too = so the topic was not me!! I am a mere addition ! ha ha!

    // let us use this opportunity to be firm in dealing with these kind of bloggers //

    So punish chella so that others should FEAR!!

    Chella is removed / He went out = UNCERTAINITY

    We wont say what went on in our almighty back office sanctum sanitarium of Tamilmanam ( unless kicked in the butt in the public!Lol! >>Dont take this too close too your heart.. my usual harmless touch at private parts! ;-)) = DOUBT

    Dear Selvaraj Kanna, Am i reading in between your lines and spaces and even commas too much!!?

    Ha ha.. anyhow i closed my blogposts and comments. Thanks for allowing me to know all those jacks of webdom! May be oneday ask your friend Peyarili about our online struggles for the Tamil Content/thought space in the cyber landscapes, like orkut. But for now it is time to relax with my fav lemon tea! Cheers to all of you at the high alters… till i surface once again in the next year! Yaatha yathaahi Dharmashya vellam konjam over bg music for the last line! So just a smilie! ;-). Enjoy the peace!

    With regards
    Osai Chella

  • 4 செல்வராஜ் // Jul 17, 2008 at 7:44 am

    நல்ல யோசனைகள் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இவையும் இன்ன பிறவும் அவ்வப்போது யோசித்திருக்கிறோம். இனியும் கருத்தில் கொள்வோம். காட்டுக்கு, தனிப் பயனர்/கடவு கொண்ட கணக்குகள் அமைக்கும் வேலையை அடுத்துச் செய்ய எண்ணம் இருந்தது. இருக்கிறது.

    லக்கிலுக், அடடா, அதற்குள் என்ன அவசரம் உங்களுக்கு? 🙂 முதல் பின்னூட்டம் இட்ட போது மணியைப் பார்த்தீர்களா? இரவு இரண்டு மணிக்குத் தான் உறங்கச் சென்றேன். அதுவும் இன்றிச் சதா விழித்தே இருந்து மட்டுறுத்தல் செய்து கொண்டிருக்க முடியுமா? இத்தனைக்கும் என் பதிவில் எரிதத் தடுப்பிற்காக மட்டும் தான் மட்டுறுத்தல் இருக்கிறது. பெயர், மின்னஞ்சல் இருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவராயின் தானாகப் பின்னூட்டம் வெளிவரும். இது வேர்ட்பிரஸ்-இன் வசதி. சில சமயம் சரியாய் வேலை செய்யாதிருக்கலாம் (இன்னொரு முறை முயன்று, அவ்வாறின்றிப் போனால், கேள்வி கேட்பீர்களோ என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்பு 🙂 ).

    எரிதங்களைத் தவிர எல்லாப் பின்னூட்டங்களையும் வெளியிடுகிறேன். (போலிச்சமயத்தில் வந்த பின்னூட்டங்கள் எரிதக்கணக்கில் சேர்க்கிறேன்). காசியைப் பற்றி நீங்கள் நக்கலாகச் சொன்ன சில வார்த்தைகளுக்கா நான் மறைத்துவிடப் போகிறேன். அவர் இதை விடப் பல மடங்கு கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்தவர் என்பதாலும் அவரைக் காக்கும் அவசியம் எனக்கு இல்லை.

  • 5 காசி // Jul 17, 2008 at 8:03 am

    //இதுபோன்ற கேள்விகளை அடுத்தவரைப் பார்த்து நாம் கேட்பதற்கு முன்னால் நம்மைப் பார்த்து நாமே ஒருமுறை கேட்டுக் கொள்வது நல்லது என்று ஈச்சமரத்து சித்தர் சமீபத்தில் கி.பி. 102ல் சொல்லியிருக்கிறார் என்று ‘கேயாஸ் தியரியும், சித்தர்களும்’ என்ற புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்
    //

    படிச்சாச்சில்ல, முதல் படி தாண்டிட்டீங்க. கொஞ்சம் முயற்சி செய்து கடைப்பிடிக்கவும் ஆரம்பிச்சா அடுத்தபடியும் தாண்டிடலாம். தாண்டினவங்க சொல்றோம், நம்பணும்:P முயற்சி வெற்றியடைய அந்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்.:-)

  • 6 செல்வராஜ் // Jul 17, 2008 at 8:05 am

    செல்லாவிற்கு:

    இதை வளர்த்துக் கொண்டே போக விருப்பம் இல்லை என்றாலும் சில தெளிவுகள். இதில் அச்சம், தடுமாற்றம், ஐயப்பாடு எதுவும் பதிவர்கள் அடைய வேண்டியதில்லை.

    செல்லாவை முன்னரும் தமிழ்மணம் தான் நீக்கியது. அது தான் தோன்றித்தனமான செயல் அல்ல என்பது எல்லோருக்கும் இதுவரை தெளியாதிருந்தால், இப்போது தெளிவாக இருக்கும். அதனால் அச்சம் வேண்டியதில்லை. (Fear).

    இப்போதும் நீக்கச் சொல்லிய என் பரிந்துரையை இதுவரை யாரும் எதிர்க்கவில்லை (நிர்வாகக்குழுவில்). ஆதரித்தே சில குரல்கள் எழும்பியுள்ளன. அதனால், இன்று மதியம் 12 மணியளவில் (அமெரிக்க நேரம்) உங்கள் பதிவு நீக்கப் படும். அதனால் தடுமாற்றம் வேண்டியதில்லை. (Uncertainty).

    உட்குழு விவாதங்களைப் பொதுவில் வைக்கவில்லை என்பதால் உயர்ந்த பீடமாகக் கருதவேண்டும் என்பதும், அது பிறரிடம் ஐயப்பாட்டை விளைக்கிறது என்பதும் அபத்த வாதம். இதனை மேலும் விளக்க அவசியமில்லை. (Doubt).

    >> Am i reading in between your lines and spaces and even commas too much!!? >>

    Absolutely! And Unnecessarily!

    சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் என்னிடம் அலட்ட வேண்டாம். ஒருவர் எத்தனை காலம் இணையத்தில் இருக்கிறார், எங்கெல்லாம் என்ன செய்திருக்கிறார் என்பதை வைத்து எதை எடைபோடச் சொல்கிறீர்கள்? என்னுடைய ஈகோவைத் தட்டிவிட்டுக் கொள்வது போலத் தோன்றினாலும், நேற்று வந்த ஆர்குட் போலின்றி, நான் உங்களுக்கும் இரமணிக்கும் முன்பிருந்தே இணையத்தில் இருக்கிறவன். DOS/Win3 மட்டுமே பிரதானமாய் இருந்த காலத்தில் இருந்தே கணினி/இணையத்தில் தமிழைப் புழங்கியவன். அதனால் உங்கள் வாலாட்டல்களுக்கு வேறிடம் பாருங்கள். Just go away, Chella.

    (பிறருக்கு: கடைசிப் பத்தியை நான் எழுதாமலே கூட விட்டிருக்கலாம் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்).

  • 7 பொட்"டீ"கடை // Jul 17, 2008 at 9:37 am

    விரிவான விளக்கங்களுக்கு நன்றி.
    இதைக்கூட இங்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் அல்லவே. இருந்தாலும் இங்கு ஒருவருமே நேர்மையானவர் என்று மார்தட்டி சொல்ல முடியாது.

    தமிழ்மண நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்களில் எழுத்துக்களின் மூலம் மட்டுமே அவர்களது அறிமுகமும், அதனூடாக இன்னுமும் இருக்கின்ற மதிப்பும்…(பெயரிலி உட்பட)
    அந்த சோ கால்டு அணுப்பாவை என்ற செல்லாவின் பதிவில் கூட பெயரிலி புதிய அலுவலுக்கு வாழ்த்து மட்டுமே சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டேன். அது வெளிவரவில்லை அது செல்லாவின் வழக்கம்.

    இதுவரை நேரடியாக எவரும் என்னைப் பற்றி இங்கு கதைக்காவிட்டாலும் ஒரு காலத்தில் தமிழ்மணத்திற்கு ஆதவாக பதிவு எழுதியவர்களி நானும் ஒருவன் (2006) என நினைக்கிறேன். அதற்காக மட்டுமே இந்த இடைச்சொருகலும் கூட. மற்றவை பற்றி கதைக்க நேரமில்லை மேலும் என்னை நானே பொதுவில் நிறுத்தி தமிழ்மண நிர்வாகிகளை கேள்வி கேட்க தகுதியுமில்லை.

    ஆனால் பெயரிலி நேர்மையானவர் அல்ல என்பது என்னுடைய கருத்து.

    நன்றி.

  • 8 Name-aa mukkiyam // Jul 31, 2008 at 2:56 pm

    Mayavarathaan’s blog submitted by him got approved and only one or two posts came in Thamizhmanam and after than none of his recent posts shows here.

    He has got a mail from Thamizmanam that his blog is already added in Thamizmanam. Do you still says it is technical problem? Or all your Thamizmanam gang decided to block his blog?

  • 9 செல்வராஜ் // Aug 1, 2008 at 6:49 am

    Mayavarathaan knew how to leave Tamilmanam. So, he would know how to rejoin as well. Why are you (Name-aa mukkiyam) so worried?

    (I am closing Comments for this post – won’t have access to reply for a while).