Feed on
Posts
Comments

Search Results for 'நிர்வாகி'

தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம். இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே. வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும். இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு […]

Read Full Post »

தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்கிற முறையில் தமிழ்மணத்தின் மீதும் அதன் நிர்வாகக் குழு மீதும் அவற்றின் செயல்பாடுகள் மீதும் வைக்கப்படும் அவதூறுகளும் அபாண்டங்களும் என்னையும் எரிச்சலடையவும் வேதனைப்படவும் வைக்கின்றன. இவற்றின் மூலகர்த்தாக்கள் சில உட்காரணங்களுக்காக வேண்டுமென்றே இவ்வாறு செயல்படலாம். ஆனால் வேறு பலரோ அவர்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாகவோ, வேறு ஏதும் புரியாததாலோ, குழப்பத்தாலோ கூடத் தாங்களும் சேர்ந்துகொண்டு கும்மிக்கொண்டிருக்கின்றனர். எரிச்சலை அடக்கிக் கொண்டு, வேதனையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே நேர […]

Read Full Post »

ஆகா, புல்லரிக்கிறது! கருத்துச் சுதந்திரக் காவலர்கள் உருவிய வாளுடன் களத்தில் குதித்து விட்டார்கள். தாறுமாறாய்க் காற்றில் வீசிக் கொண்டு அவர்கள் போடுகிற சத்தத்தில் எதைச் சொன்னாலும் காதில் விழாமல் போகிற இக்கு இருக்கிறதென்றாலும் சில தெளிவுகளை முன்வைக்க வேண்டும். முதலில், ஒரு சக வலைப்பதிவாளராகவே இதனை எழுதுகிறேன். உங்களது சுதந்திரத்திற்கு இப்போது என்ன ஐயா ஊறு நேர்ந்துவிட்டது? பதிவுகளின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கொள்கைக்குப் புறம்பானது என்றால் விட்டுவிடுங்கள். யாரும் குரல்வளையைப் பிடித்துக் கொண்டு மிரட்டவில்லையே! உங்களுக்கு […]

Read Full Post »

ஆற்றுப் பாலத்தின் கீழே நிறைய நீர் வழிந்தோடி விட்டது. கூர் கற்களாய்ச் சொற்கள் வண்டிகளில் வந்து இறக்கப் பட்டுவிட்டன. அமைதியாய்த் தனியாகச் சும்மா போய்க் கொண்டிருப்பவன் கூடச் சாலையில் கூட்டமாய் ஒருவனை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்னவென்று தெரியாமலே போர்வையைப் போர்த்திப் ‘போடு இன்னும் ரெண்டு’ என்று சாத்திவிட்டுப் போவதைப் பார்ப்பது போல் இருக்கிறது. பேச்சை விட, செயலை விட, எழுத்து என்பது சற்றுப் பொறுமையானது, சிந்தித்து நிதானத்தோடு நடந்து கொள்ள வைப்பது என்று எனக்கு ஒரு […]

Read Full Post »

தமிழ்மணம் பற்றிய அடிப்படையைப் பலர் (பெரிய தலைகளும் கூட) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. அது திரட்டி மற்றும் சில வசதிகள் மட்டும் தான் என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க ஆயாசம் தான் மிஞ்சுகிறது. அதனால் மீண்டும் அது பற்றி விளக்க நான் முற்படப் போவதில்லை. அவரவர் ‘புரிதலில்’ அவரவர் உறுதியாய் இருக்கும்போது எந்த விளக்கமும் வீண். யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க […]

Read Full Post »

Next »